பக்தி இயக்கம் 83
தனக்கு ஊறு ந்ேரக்கூடாது என்ற உணர்வில் அச்சந் தரும் பொருள்களுக்கு வழிபாடு செய்தான். இந்த உணர்வு அவ்வாறு வழிபட்டால் நன்மை பெறலாம் என்ற நம்பிக்கை உணர்வேயாகும். ஆம்! பக்தி இயக்கத்துக்கும் சமய இலக்கியத்துக்கும் நம்பிக்கை முக்கிய அடிப்படை யாகும். நம்பினார் கெடுவதில்லை நாலு மறை தீர்ப்பு’ என்று இதனையே பாரதியார் வற்புறுத்தினார். - -
வெம்மை அளிக்கும் சூரியனையும் அலை வீசி ஓங்கும் கடலினையும் பெரு நெருப்பினையும் இடிமழையினையும் சீறிவரும் பாம்பினையும் பிறவற்றையும் கண்டு அஞ்சி, கருத்தழிந்து ஆதி மனிதன் வழிபட்டிருக்க வேண்டும். எனவேதான் பக்தியின் தொடக்கநிலை அச்சத்தால் உண்டானது என்று உலக சமயங்கள் அனைத்தும் கூறுகின்றன. வேதங்கள�� இந்திரனையும், வருணனையும், சூரியனையும் தெய்வங்களாகப் போற்றுவதும் விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் பலவகை அஞ்சந்தரு பொருள்களை அஞ்சி வழிபட்டதும் இந்த உண்மையினை நிலைநாட்டும். பாபிலோனியர், உரோமர், கிரேக்கர், எகிப்தியர், பிற மத்தியதரைக்கடல் பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள் எல்லோரும் தொடக்க நாளில் இவ்வாறே அச்சத்தின் வழியே பக்தி வலைப்பட்டனர் araraub st6)Gomub. (Encyclopedia Britanicca 14th Edition 19th volume on religion) gib Ertl 60 2.6 Gr கிராம ேத வ ைத க ளு ம் இ ந் த அடிப்படையில் உண்டானவையே. அத்தகைய அஞ்சத்தக்க தெய்வங்களை வழிபட்ட காரணத்தால்தான் உயிர்ப்பலி போன்றவை அக்காலத்தில் மிகச் சாதாரணமாக இருந்தன.
தமிழகத்தில் இன்று நீலகிரியில் வாழும் தோடர் வாழ்வில் எருமையும் கந்தும் தெய்வமாய்ப் போற்றப் படுவதைக் காண்கிறோம்...மேலே கண்டபடி அஞ்சி வழி பட்ட நிலையைப் பல பழங்குடி மக்கள் இன்றும் கொள்