உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தாய்மை

‘எண்ணற்ற பலப்பல வகையான பூச்சிகள் மடிந்து ஒழியப் வயிரும் பிற உயிர்களும் செழித்து உலக வாழ்வு உயர்ச்சி பெறும். இதை எண்ணித்தான் . சமுதாய வாழ்வின் அடிப்படையை உணர்ந்துதான் . பழைய புகார் நகரில் விழாவினை முரசறையும் வள்ளுவன்,

பசியும் பிணியும் பகையும் நீக்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி ‘ விழாவினை அறிமுகப்படுத்துகிறான். ஆம்! இந்த விழாக் களால் சமுதாயத்தின் அகப்பகை, புறப்பகை நீங்குவதோடு உடலுக்கும் உயிருக்கும் உற்ற பிணி நீங்கி, பசியுற்ற நிலை மாறி எங்கும் ஒளிமயமான தெய்வநெறி புலப்படும் என்பதை உணரின் தீபாவளி, விளக்கீடு இவற்றின் விளக்கம் நன்கு புலப்படும்.

நம் சமய உண்மைகளைச் சு ட் டி ய அந்தக் கட்டுரையாளர் ‘இது அன்று’, ‘இது அன்று’ என்றுதான் சுட்டுகின்றனரே ஒழியத் திட்டமாக முடிவான தெய் வத்தைச் சுட்டவும், வழிகாட்டியை விளக்கவும், நூலைக் குறிக்கவும் முடியவில்லை என எழுதுகிறார். காலங்கடந்த ஒன்றானமையின் பன்மையில் ஒருமை காணும் பழஞ் சமயமாக இது வளர்ந்த ஒன்று என்பதைத்தான் இங்கேயும் சுட்ட முடியும். ‘இந்தியா ஒன்று என்பது பொய்; அங்கே எத்தனையோ சமயங்கள், எத்தனையோ சாத்திரங்கள் . எத்தனையோ மொழிகள் ... எத்தனை வேறுபாடுகள் . இதை ஒன்று என்று சொல்லுவதாவது’ என்று இந்த எழுத்தாளர் துணிந்து சொல்லுவாரா? உலகந்தான் ஏற்குமா? வேற்றுமையில் ஒ ற் று ைம காணும்” நெறியிலல்லவா நாமும் நாடும் செல்லுகின்றோம். வெறும் மண்ணாலாகிய இந்த நிலப்பரப்புக்கே இப்படியானால் மன உணர்ச்சியால் பொங்கிவரும் தெய்வ நெறிக்கு எப்படி எய்லைக் கட்ட முடியும்? அதிலும் நம் சமயம் யாதொரு காழ்ப்பும் அற்று, எல்லாச் சமயங்களையும் - ஆம் - அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/76&oldid=684876" இலிருந்து மீள்விக்கப்பட்டது