உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தாய்மை

எனவே இப்பொருளதிகாரம் இயற்றுவதிலேயே தொல் காப்பியர் ஒப்பற்ற ஒரு பெரிய மரபு நெறியைக் கையாளுகிறார். இதில் மனிதன் எவ்வெவ்வாறு தனக் காகவும் பிறர்க்காகவும் வாழவேண்டும் என்ற தமிழக மரபு நெறியை நன்கு விளக்குகிறார். அகம், புறம் என்று வாழ்க்கை நெறியினை இரண்டாகப் பகுத்து, அவ்விரண்டி னுள்ளும் தனிமனித வாழ்வும் சமுதாய வாழ்வும் எவ் வெவ்வாறு அமையவேண்டுமெனச் சுட்டுகிறார். ஒருவனும் ஒருத்தியும் வாழத் தொடங்கும் காதல் வாழ்வும் அதில் சிறக்கும் களவு மணமும் காட்டி, பின் கற்பு வாழ்வில் தாம் மட்டுமன்றி வையத்தையும் வாழவைக்க வேண்டிய வகையினையும் சுட்டுகிறார். அப்படியே புறம் பற்றிய குத்திரங்களிலே சமுதாய வாழ்வினை விளக்கி, அதில் அங்கமாக விளங��கும் அரசர் முதலியோருடைய கடமை களையும் வாழ வேண்டிய மரபுகளையும் ட் டி. மொத்தத்தில் தனிமனித வாழ்வும் சமுதாய வாழ்வும் இணைந்த ஒர் இன்ப உலக மரபுநெறியினை நமக்குப் புலப் படுத்துகின்றார். இத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கடைசியாக மரபியல்’ எனத் தனியாக ஓர் இயல் அமைந் துள்ளதெனினும், இப்பொருளதிகாரத்திலுள்ள ஒவ்வொரு சூத்திரமும் வாழ்வின் மரபினைச் சுட்டிக் காட்டுவனவே டயாம். வாழ்வின் பாத்திரங்களாகிய தலைவன், தலைவி அவர்தம் உற்றார் மற்றார் இவர்தம் வரையறுத்த கடமை நெறிகளையும் பிறவற்றையும் ம்ரபுப்படுத்தி, திட்டமாக இன்னவெனச் சுட்டுகிறார். அப்படியே சமுதாய வாழ்வின் அங்கமாகிய அரசர், வணிகர், வீரர் போன்றார்தம் கடமை நெறி பற்றிய மரபுகளை நன்கு விளக்குகிறார். இத்தனையும் விளக்கிய பிறகே மொழிமரபில் வழங்கும் சொற்களையும் பிற வ ற் ைற யும் கோவைப்படுத்தி, இறுதியில் மரபியலை அமைத்துள்ளார் தொல்காப்பியர்.

அகத்திணையியலில் வெறும் மக்கள் வாழ்வின் மரபியலை மட்டும் சுட்டாது, அவர்களைச் சூழ்ந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/180&oldid=684575" இலிருந்து மீள்விக்கப்பட்டது