பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 141
பிறவற்றை நாடாது, எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி விளக்கும் திறம் அமைக்கப் பெற்றிருக்கும் எனக் க்ாண்கிறோம். சூத்திரம் என்பதை நூற்பா’ எனவும் வழங்குவர். எனவே மேலே நான் காட்டியபடி இலக்கிய இலக்கண மரபுகளடங்கிய நூல்களில் இத்தகைய நூற்பாக்கள் அடங்க, இசையொடு பொருந்திய பாடல்கள் மக்கள் வாழ்வில் வாய்மொழிகளாக வழங்கி வந்தனவோ எனக் கொள்ள இடமுண்டாகிறதன்றோ! அறிஞர் ஆய்வார்களாக! .
பாவும் நூலும் காட்டிய ஆசிரியர் உரையையும் குறிக் கிறார். செய்யப்படுவன வெல்லாம் செய்யுளாய் அமைய :உரைச் செய்யுளும் கொள்ள வேண்டி இதை விளக்கு கிறார். இவ்வுரையினையும் தனியாகவே ஒதுக்கிக் காட்டாது, அதற்கும் பாட்டிற்கும் உரிய தொடர்பையும் காட்டி, . -
பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் . பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை கடையே கான்கென மொழிய
. |செய். சூ. 173) என விளக்குவர். எனவே பாட்டின் இடையிடையே குறிப்பினைக் கொண்டும், பாட்டு அல்லது சூத்திரத்துக்குப் பொருளாகவும் உரை வரும் என்பது தெளிவு. பிற பற்றி நாம் இங்கே எண்ணாது, உரையும் பழங்காலத்தில் இருந்த தென்பதையும் அது தனியாகப் பலவகையில்-பொய்ம் மொழியானும் நகைமொழியானும் வழக்கியல் மொழி யானும் வருவதோடு பாவொடு தொடர்பு கொண்டும் வருவதொன்று என்பதையும் நினைவு கூர்தல் வேண்டும். இதையே உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்பர். இதன் விரிவைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.