உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 12 I

யாகவே-பாட்டாகவோ உரையாகவோ உணர்த்தப் பெறுகின்றமையின், இச் செய்யுள் இயலே பிற இயல்களுக் கெல்லாம் நிலைக்களனாய், நிலைத்த மரபினை உடைய தாய் அமைந்துள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

இத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் முதற் சூத்திரத் திலேயே ஆசிரியர் செய்யுள் பற்றியும் அதன் உறுப்புக்கள் பற்றியும் அவை ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்த நிலை வினைப் பற்றியும் அவற்றின் அடிப்படையில் அமையும் பாக்கள் பற்றியும் அவற்றின் வகை பற்றியும் அவற்றால் பெறும் பயன் பற்றியும் பிற நிலைகள் பற்றியும் நன்கு காட்டியுள்ளார். எனவே அச் சூத்திரத்தினை சண்டு அவ்வாறே தரலாம் என எண்ணுகிறேன்.

மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ ய��த்த சீரே அடியாப்பு எனாஅ மரபே. தூக்கே தொடைவகை எனாஅ கோக்கே பாவே அளவியல் எனாஅத் திணையே கைகோள் கூற்றுவகை எனாஅக் கேட்போர் களனே காலவகை எனாஅப் பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ முன்னம் பொருளே துறைவகை எனாஅ மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அங்கால் ஐந்தும் அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயையே புலனே இழையெனப் பொருந்தக் கூறிய எட்டொடுங் தொகைஇ கல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே ‘

(செய், சூ. 11 இச் சூத்திரத்தில் ஆசிரியர் செய்யப்படுகின்ற, பாச் செய்யுள், உரைச்செய்யுள் ஆகிய இரண்டினுக்குமே இலக்கணம் காட்டுகின்றாரேனும் நாம் போ வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/123&oldid=684512" இலிருந்து மீள்விக்கப்பட்டது