உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

741


சொல் என்றது. வீரசோழியம் வடநூல் கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் இலக்கண நூல். இதன் ஆசிரியர் புத்தமித்திரனார். தமிழ் ஆழத்தைவிட வடமொழி ஆர்வத்தை மிகுதியாகக் கொண்டவர். எனவே, இவர் கருத்து முழுச் சான்றாகாது. அவ்வாறு கொண்டு நோக்கினாலும் சிங்கள மொழி வரலாறு காணத்தக்கதாகின்றது. சிங்களம் ஒரு மூல மொழியன்று. சமற்கிருதத்தின் திரிபுமொழி. சிங்கள மொழிபற்றிய கருத்துகள் நம்:ை 2000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு செல்லினும் அதற்கு முன் அதன் நிலை தெளிவானதன்று; சிறப்பானதும் அன்று. சமற்கிருதத்தில், முருங்கை, என்னும் சொல் இல்லை. அதற்குரிய சொல் சிக்ரீ. எனவே முருங்கை சிங்களச் சொல் அன்று. அவ் வாறிருப்பினும் ஒருகாலத்தில் தமிழ் மண்ணாக இருந்த ஈழத்தில் 'முருங்கை’ என்னும் தமிழ்ச்சொல் வழங்கப்பட்டிருக்கும். பின்னே காணும் சொற்பொருளும் இதற்கு இயைபாவதைக் காட்டும். செடியியலார் இதனை முரிங்ங் என்னும் மலைஞாலச்சொல் என்றனர். இன்றைய மலைஞாலம் கி. பி. 9ஆம் நூற்ருண்டுவரை தமிழ்நாட்டின் ஒரு பகுதியான சேரநாடாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆம்நூற்றாண்டளவில் அங்கு வழங்கிய தமிழுடன் வடமொழிச் சொற்கள் கலக்க மலைஞால மொழி உருவாகியது. 'முருங்கை' என்னுஞ்சொல் சங்க காலப் பாடல்களில் மிகப் பழம் புலவர்களது வாய்மொழியாக ஆளப்பட்டுள்ளது. இக் கால நிலையை நோக்கினால் மலைஞால முரிங்ங் முருங்கை ஆகவில்லை; முருங்கைதான் மலைஞால ஒலிப்பில் 'முரிங்ங் ஆயிற்று என்பது தெளிவாகும். 'முருங்குதல்’ என்னுஞ் சொல்லுக்கு முறிதல், ஒடிதல் கசங்குதல் என்னும் பொருள்களை "முருங்க எற்றி (மது. கா: 377) 'முனை முருங்கத் தலைச்சென்று’ (புறம்:16:3), "முருங்காக் கலிங்கம் (அகம் : 136 : 20) எனத் தமிழ் இலக்கியங்கள் காட்டு கின்றன. இம்மரம் எளிதில் முறிவது கொண்டு இப்பெயர் ஏற்பட்டதை உணரலாம். எனவே, சொல்லின் பொருளாலும் 'முருங்கை' என்பது தமிழ்ச்சொல் என்பது உறுதியாகின்றது. - உலகில் முருங்கையில் வேறு இனம் இல்லை என்றும் 'முருங்கை என்பது ஒரே இனந்தான் என்றும் செடியியலார் கண்டுள்ளனர். இக்கணிப்பு:இதன் தனித்தன்மையைக் காட்டு றது.