27. கூன் முள் மலர்,
முள்ளி.
முள்ளை உடையது என்னும் பொருளில் இதன் பெயர் 'முள்ளி' என அமைந்தது. "முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும்” என்றதன்படி இதற்கு முண்டகம்' என்னும் பெயர் உண்டு. இலக்கிய வழக்கில் மிகுதியும் இப்பெயர் காணப்படும். கடற்கரையின் மணல் மேட்டில் இம்முள்ளி செடியாக வளர்ந்து பூக்கும். - 'முள்ளி நீடிய முதுநீர் (கடல்) அடைகாை’2 啤 ; -என ஒரம்போகியாரும் "முண்டகங் கெழீஇய மோட்டுமணல் அடைகரை”3 -என வெண் கண்ணனாரும் பிறரும் இதனைக் கடற்கரை மணல் மேட்டில் கண்டு பாடினர், "மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்'4 -என்னும் உலோச்சனார் பாடல் மேலும் விளக்கமாக உப்பு விளையும் செறுவை-வயலைக் குறித்துக் காட்டி இது உப்பங் கழியின் மலர் என்றது. இதனால், இது கழி முள்ளி' எனவும் வழங்கப்படும். இஃது ஒரோவழி கடற்கரையை அடுத்த மருத வயற் பகுதி யில் நீரில் வளரும். இதனை நீர் முள்ளி என்றனர் இடைக் காலத்தார். "நீர் முள்ளி முண்டகம் ஆகும் என்ப" என நிகண்டுகளும் நீர் முள்ளி’ என்னும் பெயரை அமைத்தன ஆனால், இப்பெயர் மருத வயற்பகுதியில் வளரும் முள்ளியையே குறிக்கும். உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் கழன்று விழுந்த இதன் மலர்களை மருத ஊர் மகளிர் விளையாடு வதற்குத் தொகுப்பர் என மருதநிலத்திற்குப் பாடிக்காட்டினார். ஒரே அமைப்புடைய செடியாயினும் இடத்தால் கழிமுள்ளி' 'நீர் முள்ளி’ என்றும் பெயர் பெற்றது. تحصحسمتحجم محمضمعمح 1 துடா நீ : கரக் 68 : 2. 4 நற் : 811 : 4, 5 2 ஐங் : 21 : 1. 5 பிங், தி : 8002 3 அகம் : 18 : த ஆகம் : 26 , 1-4