537
12. மீன்கொத்தி வாய் மலர்.
தளா.
தொல்கர்ப்பியம் ஆகார ஈற்றிற்கு வகுக்கும் விதியில் பிடா வுடன் தளாவையும் குறித்ததைக் கண்டோம். ஆங்குக் குறிக்கப் பட்ட் பிடாவைப் போன்றே தளாவும் தளவு, தளவம் எனப் பெயர் வளர்ச்சிபெற்றது.
தொல்காப்பியரைப் பின்பற்றி,
'பிடவும் தளவும்' - என நல்லந்துவனாரும், 'பிடவம் மலரத் தளவம் நனைய 2 .
-என ஒதலாந்தையாரும்,
'பிடவமும் தளவமும்'8 -என இளங்கோவடிகளாரும் பிறரும் பிடவுடன் தளவை இணைத்துப் பாடினர். இவற்றால் பிடவத்தை அடுத்துத் தளவம் அமையத் தக்கது. இத்தளவம் முல்லைக் குடும்பத்தது; முல்லையே, தான். நிறந்தான் வேறுபடும். நிறவேறுபாடு கருதியே இரண்டும் தனித்தனியாகக் குறிக்கப்படும்.
'தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும்’4 - என்ற படி இஃதொரு கொடிமலர், முல்லைக்கொடி மலர்.
“கல்லிவர் முல்லை தாழை தளவம்"(குறி. பா. 80)
"அவிழ் தளவம் அகன்தோன்றி நகுமுல்லை" (பொருந் : 199)
"நெடுங்கொடி முல்லையொடு தளவம் மலருதிர'
(ஐங் :422)
- - - என்றெல்லாம் தனித்தனியே
கூறப்படும். இதன் நிற வேறுபாட்டைக் குறித்துக்காட்டுவது போன்று,
- 1 கலி 108 : 2. ஐ சிலம்பு : 18 : 188, 2 ஐங் 499. 4. கலி : 102 : .