உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

533


க்ாயாவின் பெயரால் காசாங்காடு, காசாங்குளம்' என் ஊர்ப்பெயர்களும் உள. இப்பெயர் அப்பகுதி ஒருகாலத்தில் காயா மரம் நிறைத்ததன் அறிகுறி அன்றோ? இலக்கியக்காட்டில் இஃதொரு காடு. அடுத்தொரு ஊர். அது பிடஆர். | l. நிலவு மலர் பிடா. பிடா, பிடவு, பிடவம் என்பன இதன் பெயர்கள். பிடாவின் சொல் வளர்ச்சி மற்றைய இரண்டும். வேறு மாற்றுப்பெயரோ மறுபெயரோ இல்லாமையால் நிகண்டுகள் இதனைக் குறிக்க வில்லை. நிகண்டுகள் குறிக்காது போயினும் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 'யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்" - என யாமரத் துடனும் தளவக்கொடியுடனும் குறிக்கப்பட்டது. பிடா மரமேயா யினும் யாமரம் போன்று பெரியதன்று. ஆனால், அகத்தில் 'குறும்புதல் பிடவு' எனப் புதலாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இதனைப் புதர்ச்செடி எனல் கூடாது. ஏனெனில், 'முடக்கால் பிடவு'8 -என்று கூறி இதன்மேல் மயில் இயலும் எனப்பட்டுள்ளது. மேலும் இதன் கொழுநிழலில் இரலை மான் தன் துணையோடு தங்கும் என்றும் இடைக்காடனார் பாடி யுள்ளார், மயில் இயலுமாறு வளைந்த கிளையையும், கொழு நிழல் தரும் தழைகளும் உடைமையால் இஃதொரு மரமே. குறுமரம் தழை கவிந்து தோன்றும். இதன் அடிமரம் கதிரவன் வெம்மையில் காய்ந்து வற்றியதை, 'முளிமுதல்" என்றனர். எனவே முன்னே குறிக்கப்பட்ட 'குறும்புதல் பிடவு' என்பதற்குக் குறுமையாகத் தழையால் புதல்போலச் செறிந்துள்ள பிடவு' எனப்பொருள்கொள்ளல் வேண்டும். 1 தொல் : எழுத்து 280. 8 அகம் : 844 : 3, 2 அகம் 154 : 4.