உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522


"கடம்பு சூடிய் சன்னி மாலைபோல் ዷ ፻ ፶ l தொடர்ந்து கைவிடாத தோழி மாரொடும் -5 ran & கைகோப்புக்கு உவமையாக்கினார். மேலும், இச்செங்கடப்பம் 4த் தொடர் உருண்டு திரண்டு தோற்றமளிப்பதை , 'உருள் பூ தண் தார்" (திருமுருகு ; 11) 'உருள் இணர்க் கடம்பின் ஒலிதார்’ (பரிபாடல் : 5 81) :உருள் பூங் கடம்பின்" (பதிற்றுப் பத்து பதிகம் : 4 : 1) - - - -எனப் பலவிட த்தும், 'உருள் பூ” எனக் குறித்துள்ளனர். பரிபாடலில் மூன்று இடங். களில் வந்துள்ளது. இடைக்கால நூல்களாகிய கல்லாடம், காசி, கண்டம் முதலியவற்றிலும் இப் பூ "உருள் பூ" எனப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை அடிக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர், தேர் உருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை” -என்று இப் பூக்கொத்தின் வடிவத்தைத் தேர்க்கால் உருளையாக விளக்கினார். இப் பூ கார் கால மலர். "தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து’ (செங் கடம்பு) . -என்னும் அடிகள் இப்பூ கார்காலத் தொடக்கத்தில் முதலில் மழை பெய்யும் போது மலர்வதைக் காட்டுகின்றன. 'கார்மலி கதழ்பெயல் தலைஇ ஏற்ற' எனப்பரிபாடலும் இவ்வாறு காட்டிற்று. “கார்நறுங் கடம்பு' (நற் : 34 :8 புறம் : 26 13) 'கார்க் கடம்பு’’ (சிலம்பு : 24) "காரலர் கடம்பன்' (மணி : 4: 49) எனப்பல இலக்கியங்களும் இதன் கார் கால மலர்ச்சியை வைத்துக் 'கார்க்க..ம்பு’ என்றே பாடியுள்ளன. 1. சிவ சி : 990, Յ լյք : 1 4 1, 2 திருமுருகு ; 9, 1.ெ