470
பருத்தவை அன்று. கொம்புகளாகப் பக்கவாட்டில் கிடக்கை முன்றி யில் விரிந்திருப்பன. இவ்வமைப்பு பெரும்பாலும் இலவத்திற்கே உண்டு. இக்கொம்பு அமைப்பினால் 'பொங்கர்’ என்னும் பெயர் அமைந்திருக்கலாம்.
- பூரணி என்பது வடசொல். உள்ளே பொதிந்து நிறைந் திருப்பது என்னும் பொருளால் இப்பெயர் அமைந்திருக்கலாம்.
சான்மலி என்னும் பெயர் பிற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லைச் சமற்கிருதமாகக் கொண்டனர் இச்சொல்லமைப்பு தமிழ்ப்பாங்குடையது. சால் என்னும் உரிச் சொல்லடியாகத் தோன்றிய சொல்லாகும். இப்பெயரையே செடி நூலார் எடுத்துக்கொண்டு இலவத்திற்கு (சால்மாலியா) “Salmalia Malabarica' firstTÚGlului Gilią ujirarsariř. சான்மலி என்னும் பெயரில் தீவு ஒன்று கந்தபுராணத்தி லும் நைடதத்திலும் குறிக்கப்படுகின்றது. இது இலவமரங்கள் நிறைந்த தீவு என்றும் முள் இலவம் கொண்ட தீவு என்றும் விவரிக்கப்படும். இத்தீவு இக்காலத்து ஆசுத்திரேலியா என்றும் கருதுவர். சான்மலிசாரம் என்பது இலவ மரத்தின் பிசின் என்பர். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்த அளவில் இலவு, இலவம் என்னும் இரண்டுமே செய்யுளாற்றுச் சொற்கள். மருத்துவத்தில் இலவம் பூவிற்கு ஒரிடம் உண்டு. இப் பூவைக் கொண்டு கறுக்குநீர் செய்து குடிப்பர். இது குருதிப் பெருக்கை அடக்குவது. மலம் இளக்கி என்பர். சிறு நீரைப் பெருக்கும். இதன் காய்ந்த பூவும் மருந்துக்கு ஆகும். இதன் விளைபொருளாம் பஞ்சு சீழை வற்றச் செய்யும். பிசினும் மருந் தாகும். மலரால் கண்ணுக்குக் காட்சியாகி, பஞ்சால் படுக்கைக்கு இனிமையாகி விளங்குவது இலவம். இலவமும் கோங்கும் இணைந்த இருமலர்கள். கோங்குடன் இணைத்துப்பேசப்படும் மற்றொன்று குரவம். இலவத்தின் அளவில் இணைப்பு இல்லை. இலக்கிய ஆட்சியிலும், மலரளவிலும் இதன் கருத்துக் காணத்தகும் நிலையுடையதன்று. கோங்கத்துடன் கொண்ட இணைப்பாகக் காணும் இடங்கருதி அடுத்துக் குரவம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. . .