463
கூர்மை உடையதன்று. அடிமரத்தில் முட்டு முட்டு அமைப்பாகக் கூம்பு வடிவத்தில் அமைந்திருக்கும். களிறு தன் தினவைக் குறைத்துக்கொள்ள இம்முள்ளமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக்கொள்ளும்.
'களிறு புலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்'1 - என்றார் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். ஆண்யானை தேய்த்துக் கொள்ளும் அளவில் இம்முள் சற்று உறுதிவாய்ந்தவை. மேலுள்ள பாடல் கொண்டு இதன் அடிமரம் கருமை நிறங்கொண்டது என்பதையும் அறியலாம்.
பிற்கால இலவம் முள் அற்றது. அடிமரம் சற்றுவெளிரியது.
எனவே, முன்னைய இலவம் முள்ளிலவம்’ எனப்படும். சங்க இலக்கியங்களில் இலவம் என்பது இம் முள்ளிலவத்தையே குறிக்கும். முள்ளிலவின் அடிமரம் பருத்து நீண்டிருப்பது மட்டு மன்றி முட்டுக்கொடுத்த சுவர் போன்ற அமைப்புடையது, பின் இலவுதிரண்ட சுற்றுவட்டமானது.
இவை யாவற்றினும் மலர் நிறங்களே இவையிரண்டின் வேறுபாட்டை காட்டுபவை.
முள்ளிலவம்,
"எரி உரு உறழ இலவம் மலர' (கவி : 33:10)
எரிப் பூ இலவத்து ஊழ்கழி பன்மலர்' (ஐங் : 3681) என்றபடி நெருப்புப் போலும் சிவந்த நிறங்கொண்டது. முன்னர் இலவம் பூவைப் பவளக் கிண்ணமாகக் கண்டதற் கொப்பப் பவளம் போன்ற கருஞ்சிவப்பு நிறங்கொண்டது. இதன் கருஞ்சிவப்பு நிறத்தைத் திருத்தக்க தேவர், இறைச்சி பிளந்தது போன்ற நிறமாகவும், அதன் இடையே நெருப்பு முளைத்துள்ளது போன்றும் குறித்து,
'ஊன்தகர்த் தனைய போன்றும்
ஊடு எரி முளைப்ப போன்றும்
தோன்று பூ'2 -என்றார். ஒதலாந்தையார் முள்ளரை
SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS
1 அகம் , 809: 1. 2. சீவ, சி : 1701