உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447


'பொரியரை ருெமிர்ந்த புழற்காய்க் கொன்றை நீடிய சடையொடு ஆடா மேனிக் குன்றுறை தவசியர் போல' -என்றார். இவ்வகையில் கொன்றை ஒரு முனிவர். சடையாகத் தோன்றிய இது சடைக்குரிய மயிராகவும் பார்க்கப்பட்டதில் வியப்பில்லை. இயற்கைக் காட்சியை ஒப்பனை அமைப்பில் வண்ணிக்கும் கல்லாட ர், - சுரும்புகள் வரிசையாக மொய்த்த கொன்றைப் பூங் கொத்தாகிய மாலை தொங்கியது; பல வரிசை வரிசை யாகத் தொங்கின. அதன் நீண்ட காய்களின் கொத்து கவரிமானின் மயிரால் ஆன கவரிபோன்று அமைந்தது.2 (இது வெண்கவரி அன்று; கருங்கவரி; கருங்சாமரை.) -என்று பாடினார். இக்காய், காற்றால் உதிர்ந்து பாறைமேல் கிடப்பது கண்ட பாணர்க்கு ஒர் ஐயம் எழுந்ததாம். காற்றால் உதிரும் காய் பாறைமேல் விழும்போது ஒலி உண்டாகும். மேலும் மேலும், விழ விழத் தொடர்ந்து ஒலிக்கும். பாறை பறையின் தோல்பரப்பு போன்றிருக்கும். விழும் காய் பறையில் அடிக்கும் கடிப்பு-கம்பு போல இருக்கும். இவற்றை ஒருபார்வையில் பார்த்தப் பாணர்க்குப் 'பறை முழக்கோ என்று ஐயம் எழுமாறு இருந்ததாம். இவ்வாறு பாடியவரை அறிய முடியவில்லை. பாட்டையாவது அறிவோம்: " ... ... ... . . . ... பாணர் அயிர்ப்புக் (ஐயம்) கொண்டன்ன கொன்றையத் திங்கனி பறையறை கடிப்பின் அறையறையாத் (பாறைகள் தோறும்) துயல்வா வெவ்வளி வழங்கும்' இக்காய் உள்ளே கூடானது. அதனால் புழற்காய்' எனப் படும். உவமைக்குப் பயன்பட்ட இப் புழற்காய் இசைக்கும் பயன் பட்டது. கொன்றையந் தீங்குழல் பற்றி முன்னரே காணப் பட்டது. கோவலர். 1 தற் : 141 : 8, 5 2 தற் : 46:5-8 2 கல் : 14 : 5, 8