418
குமரிகள் நகைப்பர். அவன் பகைப்பானா என்ன? இதனை வாய்ப் பாக்கிக் கொள்வான். அவனும் நகையாடுவான். இதன் தொடர்பில் காதல் முகிழ்க்கும், களவு தொடங்கும்; தொடரும்; திருமணத்தில் நிறைவடையும் , 'ஏமப் பூசல் இவ்வாறு மங்கலத்திற்கு உதவும்.
மங்கையர் ஆடவர் உதவியுடன் வேங்கை மலரைக் கொய்யப்க பூசலிடாது ஆடவரை அழைத்துப் பாடுவர். அப்பாட்டையும் பாலைப் பண்ணாக - பஞ்சுரமாகப் பாடுவர். இதனை ஒதலாந்: தையார், o .
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் 2 -என். றார். ஆடவர் தணிந்த கிளைகளை வளைத்துக் கொடுக்க மகளிர் பாய்ந்தும் குதித்தும் ஒடி ஒடிக் கொய்வர். வியர்க்க வியர்க்க ஒடி ஒடிக் கொய்வர்.
'வேங்கை நறுமலர் வெற்பிடை யாம்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்ப' என வியர்த்ததை ஒருத்தி யைக் கூறவைத்தார் மாறன் பொறையனார். -
வேங்கை மலரைக் கொய்ய எழுந்த ஏமப் பூசலுக்குப் புலி' என்னும் சொல் பயன்பட்டது. அது வேங்கை' என்ற சொற்பொரு ளின் தொடர்பு. ஆனால், அச்சொல் மட்டும் தொடர்பு அன்று. பூவின் நிறமும் கொத்தான வடிவமும் தோற்றமும் புலியோடு பொருந்துபவை. மரமும் அதற்குத் துணைநின்றது, இவற்றாலும் சொல்லளவாலும் இரண்டையும் மயங்க வைத்ததால் இவற்றின் வேறுபாடு அறிவிக்க அடைமொழிகளைக் கொடுத்தனர்.
வேங்கைமரம் பூத்து நாளை அறிவிப்பதால் 'நாள்வேங்கை' ‘என்றும், வேங்கைப்புலி பிற விலங்குகளைப் பற்றிக்கொள்வதால் கோள் வேங்கை என்றும் வேறுபடுத்திக் காட்டினர்.
'நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட,
கோள்வேங்கை போற்கொடியார் என்னையன்மார்'4
-என்றும்
,15:1,2 .கர் 48 : فاع بی : 2 ஐங் : : 311 : 1. 4 திணை, து : 20 :1,2.