உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350


களாகவும் இருந்து ஒன்றுபட்டும் இணைந்துவிட்டால் பகையேது? பழியேது? வலனும் நலனும் வலம் வருமன்றோ என்றும் கருதியே இவ்விருவரையும் உவமையாக்கினார். இக்காட்சி தொடரவேண்டும் என்று விரும்பினார், "இன்னும் கேண் மின்' என்று, ‘ஒருவர் மற்றவர்க்கு உதவுக! இருவரும் என்றும் வேறுபடா தீர்கள். ஒன்றியே வாழ்க!' - என்று வாழ்த்தினார். மேலும் அத்துடன் ஒன்றையும் குறித்தார்: 'உம்மிடையே பகைமூட்டி உங்களைப் பிரிக்க அலையும் அயலார் நேரம்பார்த்துப் புகுவர். அவர்தம் வேண்டாச் சொற்களைக் காதில் கொள்ளாதீர்; "இன்றே போல்க தும் புணர்ச்சி'2 -என்று தம் உணர்வைச் சொற்களாக்கித் தூவினார். அவர்தம் சொற்கள் முடிவேந்தர்களை ஒன்றுபட ஒட்டாது தடுக்கும் கயவர் வாழ்ந்ததையும் குறிக்கின்றன. இவர்களைத்தான் திருவள்ளுவர். ': பகச்சொல்லிக் கேளிர் பிரிப்பர்' என்றார். எக்காலத்தும் இக்கயவரும் உளர். அவர்க்கு ஆட்படும் முடிமன்னர் வழியினரும் உளர். முடிமன்னர் நமக்கென விட்டுச் சென்றிருக்கின்ற மாறாத உடைமைகள் இப்பிரிவும் பகையுமாக அமைந்தன. - - சில புலவர்கள் தற்புலமைத் தினவைக் காட்ட முடிமன்னர் வேறுபாட்டினை - பகை மூட்டத்தினைப் பாடினர். 'ஆருக்கு வேம்பு நிகராமோ அம்மானை' 3 - என ஒட்டக் கூத்தரும், இதற்கு மாற்றாக, 'கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானை' -- 5া5য়TE] புகழேந்தியும் 1. புறம் : 58 : 20, 2. புறம் 58 24-28. - - 8 தனி : , ; பக். 58 : . 4 கனி:சி புக் 548.