உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198


த்ானாம். கங்கையம்மன் வலக்கையில் கருநெய்தற் பூவைப் பிடித்து விளங்குபவள். - . . . இக்குடும்ப மலர்களேயன்றி இவற்றின் தண்டுகளும் எளிய, மக்களுக்குக் கைக் காப்புகள் ஆயின. -- "ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் (புறம்: 63:12, "பவள வளைசெறித்தாட் கண்டணிந்தார் பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு’ (uff if : 101, 102) -என்பவை ஆம்பல் காப்பை-குவளைக் காப்பைக் காட்டுகின்றன. கண்ணகியார் கணவனைப் பிரிந்து வாடியபோது குவளை மலர்களும் சூடப்படாமல் வாடின. கோவலனுடன் மதுரைப் பயணம் மேற்கொண்டாள். அவனோடு சேர்ந்திருப்பினும் வழிப்பயணம் ஆகையாலும், கவுந்தியடிகள் உடன் இருப்பதாலும் அவர்களுக்குள் உடற் புணர்ச்சி இல்லை. அந்நிலையிலும் வழியில் பூத்திருக்கும் கழுநீர்ப் பூக்களைப் பறித்துச் சூடியிருக்கலாம். அப்போதும் "தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழி' -ந்தது. இது கொண்டு கழுநீர்ப் பூவைக் குலமகளிரும் அவருள் செல்வச் சீருடையாரும் விரும்பிச் சூடுவர் என்பதை உணரலாம். ஆம்பல் குடும்பத்து மலர்கள் பயன்படுத்தப்படுவதை மேலோட்டமாக அல்லாமல் கூர்ந்து நோக்கினால் அவற்றில் "செங்கழுநீர் என்னும் செங்குவளை மிக விருப்பமாகவும் மற்ற வற்றைவிட ஓரளவில் மதிப்பாகவும் கொள்ளப்பட்டிருப்பதை உணரலாம். . - குவளையில் கருங்குவளை நீலம்' எனப்படும், செங்குவளை செங்கழு நீர்' எனப்படும். இவை யிரண்டும் மகளிர் கண்ணிற்கு உவமையாக்கப்படும். அ வ் வு வ ைம க ளு ம் மகளிர் பெற்ற உணர்ச்சியைக் காட்டுபவையாக அமைந்தன. - கண்ணகியார் கோவலனைப் பிரிந்து துயரக் கண்ணிரில் உள்ளாள். மாதவியோ கோவலனைக் கூடி மகிழ்ச்சிக் கண்ணிரில் உள்ளாள். இதனை, 1. சிலம்பு : 18:21, 22. o