உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192


'பொய்கைப் பூ புதிதுண்ட வரிவண்டு கழி பூத்த நெய்தல் தாது ஆடி’ х -என வண்டு ஒரு நேர அளவில் இருநிலப் பூக்களிலும் படியும் அளவில் நெருங்கி இருந்தன. இது வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காட்டுவது போலும். ஒற்றுமையிலும் உயர்வு தாழ்வு காண்பதும் அமைவதும் இயற்கையாகியுள்ளன. அந்த இயற்கை இந்த இயற்கை மலர் களிலும் தோய்ந்துள்ளது. ஆம்பலும் குவளையும் மாந்தர் அனைவரும் பிறப்பால் ஒத்தவர்தாம். தமிழரும் குலத்தால் ஒத்தவர்தாம்; குணத்தால் ஒத்தவராக இலரே! சிலர்பெருந்தன்மையைப்பிறப்புரிமையாகக்கொண்டுள்ளனர். சிலரோ சிறுமைச்செயலையே சிறப்புரிமையாக்கிக்கொண்டுள்ளனர். என்னதான் பெருந்தன்மை உள்ளவரோடு தோய்ந்து பழகினும் நேரம் வாய்க்கும்போது தம் சிறு செயலை விடார். "பெருந்தார் கேண்மை கொளினும் நீரல்லார் - கருமங்கள் வேறுபடும்’ 2 -என்பதை விளக்கும் நாலடியார், குவளையையும் ஆம்பலையும் எடுத்துக்கொண்டு “ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் - விரிநீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா' -என்று ஆம்பலைவிடக் குவளை சிறந்ததாகக் காட்டியுள்ளது. காரணம் என்ன? பூ இனங்களில் நீர்ப்பூ பரந்து மலர்ந்திருப்பது காட்சிக்கு இனிமை நல்கும். அதன் மலர்ச்சி கூடிப் புணர்ந்து களித்தவர் முகமலர்ச்சி போன்றதாம். . 1 . ఉణి : 4:1, 2.