உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


"அதற்கு (முல்லைக்கு), விழாவாவது பருவப் பெண்ணிற்கு முதற் பூப்பிலே செய்யப்படும் சிறப்பை அதன் (முல்லையில்) முதற் பூப்பிலே செய்தல்' என்று முல்லைக்கு முதற் பூப்பு விழாவைக் குறிப்பீட்டுள்ளார். முல்லை மலர் தன் மலர்ச்சியால் மங்கைக்கும் பெயர் வழங்கி, விழாவும் பெறச்செய்து, தானும் விழாப்பெற்றுக்கொண்டது. இதனைக் கூர்ந்து நோக்கினால் முல்லை மலர் வாழ்வியலில் எவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டது என்பதை உணரலாம். இவ்வாறு தமிழ் மாந்தர் முல்லை வளர்த்தலை ஒரு மரபாகக் கொண்ட தில் ஒரு நாகரிகப் பாங்கு புலப்படுகின்றது. இளம் பெண் திடீரென்று எதிர்பாராத நிலையில் ஒருநாள் இப்படைகின்றாள். உடன் அவள் கொள்ளும் உணர்ச்சி நாணம் நானத்தில் அடிபட்டிருப்பவள் தனக்கு நேர்ந்ததைத் தன் வாய் திறந்து உணர்த்த மாட்டாள். அவள் உடனே ஒரு முல்லைக் கொடியை நடுவதன் மூலம் தன் பருவத் தோற்றத்தை குறிப்பால் அறிவித்தவள் ஆகின்றாள். அறிய வேண்டிய ஒன்றை அறிவிக்க வேண்டிய நிலையில் கையாளப்படும் இது குறிப்பிடத்தக்க நாகரிகத்தின் அறிகுறி அன்றோ? .-- மாந்தர் தம் வாழ்வில் கைக்கொண்ட இதன்ைக் கடவுள்ர் மேலும்,ஏற்றிப் பாடினர். காஞ்சிபுரத்தில் இடம்கொண்ட அன்னைக் கடவுளருக்கும் ஏற்றி, 'அன்னை தன் கரத்து அன்பினால் வளர்த்த மாலதி (முல்லை)யும்' என்றனர். இன்னும் இதனைக் கற்பனை எழுதுகோல் கொண்டு ‘'தேவி கொற்றவை கைவிடாது வளர்த்த முல்லைக் கொடி நூறாயிரம் கிளைவிட்டுத் தழைத்தது'2 -எனத் தக்கயாகப்பரணி எழுதியது. மகளிரைப் போன்றே ஆடவரும் முல்லை மலரால் ஆகிய தாரை அணிந்தனர். விழாக் காலங்களில் அதை அணிவதை ஒரு மரபாகக் கொண்டனர். . 1. காஞ், பு : திருக்கண் : 187, 2 தக் 18