70
- = *=
பட்டிருந்தது. அப்பொழுது ஆற்காட்டு நவாப் முகம்மது அலி வாலாஜா இந்த ஊரில்பெரும் படை யுடன் முகாமிட்டிருந்ததாக சிவகங்கை சரித்திரக் கும்மியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இங்கு கடல், கரையைக் கடந்து ஊருக்குள் வந்து விட்டதால் துறைமுகம் பழுதுற்று கப்பல் போக்குவரத்துக்கு தகுதியற்றதாகி கடல் வாணிகத்தைப் பாதித்து விட்டது. இந்த ஊர் மக்களும் .ெ ச ன் ற நூற்ருண்டில் பிழைப்பிற்காக இலங்கை, மலேஷியா நாடுகளுக்கு குடிபுகுந்து விட்டனர். ஆனால் இந்த ஊரில் தமிழ் விளைச்சலுக்கு மட்டும் என்றும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அரபு மொழியிலும், தமிழிலும் வல்ல பெரும் புலவர்களும்; வேதாந்திகளும் இந்தப் பட்டினத்தை தமிழ் உலகம்! மறந்து விடாமல் இருக்கும் வண்ணம் பல படைப் புக்களைத் தந்துள்ளனர். அவர்களில் சுல்தான் செய்யிது அப்துல் காதிறு என்ற குணங்குடி மஸ்தானிலிருந்து மு.மு.மு முகமது காசிம் வரையான பலர் இந்த மண்ணில் மலர்ந்த வாடாத மலர்கள். தேவி பட்டினம் - இதிகாசகாலத்துடன் இணைத்துக் குறிப்பிடப்படுகின் ற. பல ஊர்களில் இந்தப் பட்டினமும் ஒன்ருகும். இந்தியா முழுவதும் உள்ள ஐம்பத்து இரண்டு சக்தி பீடங்களில் இந்த ஊரும் ஒன்ருகக் கருதப்பட்டு வருகிறது. கி.பி 9931994 இல் பாண்டிய நாட்டிற்குள் புகுந்த ராஜ ராஜ சோழ தேவனது பெரும்படையணிக் காலத்தில் இந்தப் பட்டினம் சிறப்புற்றிருக்க வேண்டும். மேலும் ராஜராஜனது ஈழப்படையெடுப்பிற்கும் இந்த துறை முகம் பிரதான உதவி தளமாக விளங்கி இருக்க