2 I I
=
படுகாயம் அடைந்த பாண்டியனும் நெடுந்தரையில் வீழ்ந்து மாய்ந்தான், ஏகதெயவ இலக்கிறகரக வீரப் ப்ோரிட்டு மடிந்த இசுலாமிய வீரர்களது செங்குரு தியைக் குடித்த மண் இன்று நாள்தோறும் அங்கு வருகின்ற நூற்றுக்கணக்கானவர்களின் பிரார்த்தனை யில்ை புனிதம் பெற்று ஏறுபதியாகி விட்டது. C. இணையற்ற இமாம் பால்வாய்ப் பசுந்தமிழ் பரப்பும் வையை ஆற்றின் வளமார்ந்த கரையில் அமைந்துள்ள சிற்றுார் இயமனிச்சுரம். எமனேஸ்வரம் என்பது இன்றைய வழக்கு. இந்த நல்லூரில் உதித்த மங்கைநல்லார் பர்த்திமாவிற்கும் காயல்பட்டினம விலைமான் என்ப வருக்கும் கி. பி. 1633-ல் பிறந்தவர்தான் பேராசான் (இமாம்) என பிற்காலத்தில் வழங்கப்பட்ட மேதை ஸதக்கத்துல்லா என்பவர். சித்தாந்தியாகவும் சான் ருேராகவும் விளங்கிய எnலைமான் அவர்களே, தமது அருமைக் குழந்தைக்கு சிறுகாலம் ஆசானக இருந்து திருமறையையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும் பயிற்றுவித்தார். உலக அறிவும் உத்தமர்களது தொடர்பும் மேலும் கிட்ட வேண்டும் என்ற பெருவிருப்பில் தனது மைந் தன் ஸதக்கை அதிரைக்கும் கீழக்கரைக்கும் அனுப்பி வைத்தார் அவர். அங்கே பெற்ற கல்வியும்; கேள்வி உணர்வும் அந்த இளைஞன் பிற்காலத்தில் அரபி, பார்சீ தமிழ் ஆகிய மொழிகளின் சங்கம சமுத்திர மாக இணையற்று விளங்குவதற்கு ஏற்ற வாய்ப்பாக அமைந்தன.