184 - தொகுதிகளாகப் புறப்படுகின்ற இந்த மக்களும் ஆட்டுக்கிடைகளும் பங்குனி சித்திரை மாதங்களில் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். ஆண்டு தோறும் ;"ఫిష్లీ இந்த 'போக்கு ஆட்டுக் கிடை’’ மூலம் ஆடுகள் நன்கு வளர்ந்து பல்குவதற்கு ஏற்ற தீனி கிடைப்பதுடன், கிட்ைகளைக் கொண்டு செல்பவர், ஆங்கு விளைநிலங்களில் கிடைவு செய்வ தற்கு கூலியாக நெல்லும் பெற்று வருகின்றனர். சேதுபதிகளது ஆட்சிக் காலத்தில் மன்னர் ஊர்வளம் காண நேரில் விரும் பொழுதும், புதிதாக கண்மாய் களில் மடைகள் அமைத்த பொழுதும், கோயில் பெருவிழாக்களின் பொழுதும் கிராமங்களில் உள்ள இடையர் தலைவர் கிடாய்களையும், வெண்ணை, நெய், தயிர், பால் ஆகியவைகளை வழங்கி வருமாறு இருந்து வந்தது. இதற்கென அறுவடை காலங்களில் அவர்களுக்கு தானியம் வழங்கப்பெறும் 'சுவந் திரம்' இருந்ததை இராமநாதபுரம் சமஸ்தான் ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்து மதத்தின் வைணவ நெறியைப் பின்பற்றும் மக்க ளாக இடையர் இருந்து வருகின்றனர். இவர்கள் ஆயர்பாடி, முக்கந்தர் (முகுந்தர் என்பதன் திரிபு) கோனர் என்றும் வழங்கப்பட்டு வருகின்ற்னர். பார்க்கவர் பயிர்த் தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள இன்னொரு சிறுபான்ம்ையினர் பார்க்கவர் குலம் என அழைக்கப்படும் நத்தமர் ஆவர். இவர்களை நத்தம் படி என வழங்குவதும் உண்டு. இந்த மாவட்டத்தில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/197
Appearance