உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

வேடிக்கையாக இருக்கும். சண்டை போட்டுக் கொண்டவர்கள் ஆடியும் பாடியும் ஒருவரை ஒரு வர் ஏளனம் செய்வர். மற்றவர்கள் இதைப் பார்த்துக் கைகொட்டி நகைப்பார்கள், சண்டை தீரும்.

இசையிலும், ஆட்டத்திலும், நடிப்பிலும் இவர்கள் ஈடுபாடு உடையவர்கள். பல விருந்து கள் நடத்துவார்கள்; பறைகளைக் கொட்டி ஆடுவார்கள், பாடுவார்கள், நடிப்பார்கள். அவ்வாறு ஆடுவதும், பாடுவதும், நடிப்பதும் அவர்களுடைய வேட்டையாடும் செயல்களைப்பற்றியதாக இருக்கும்.

உடற்பயிற்சியிலும் இவர்களுக்கு ஆர்வம் உண்டு. உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்துவார்கள். அவர்களது மருத்துவர்கள் கூறும், சடங்குகளோடு போட்டிகளை நடத்துவார்கள்.

எஸ்கிமோக்கள் நல்ல கலை உணர்வு படைத்தவர்களும் கூட. தந்தம், மரம், எலும்பு முதலியவற்றில் சித்திர வேலைப்பாடுகள் செய்வார்கள். கூடைகள் முடைவார்கள். அழகான ஆடைகள் தைப்பார்கள். இவை எல்லாம் அவர்களுடைய கலை உணர்வுக்குச் சான்றுகள் ஆகும்.

அரசு

முறையான அரசு இவர்களுக்கு இல்லை; தேவையும் இல்லை. தங்களுடைய சிக்கல்களை, சண்டை சச்சரவுகளை தாங்களே தீர்த்துக்