192 புதைமண் வைத்திருக்கும் செல்வா மீதுசுட பாசம் வரவில் லையானாலும், கோபம் குறைந்தது நடை வாசலில் இருந்து ��ள்ளே ஒடி கணவனை வெளியே கொண்டு வந்தாள். அவர், செல்வா வின் கையைப் பிடித்தபடியே, மோகனனிடம் கண்களால் விளக்கம் கேட்டார். "ஒண்னுமில்ல அங்கிள். நான் நேற்று சொன்னேன் பாருங்க. அதே கேஸ்தான். ரெண்டு தடவை ஊசி போட்டார். இப்ப சரியாயிட்டு. இனிமே குண்டோதரன் மாதிரி சாப்பிடுவான் பாருங்க." "மஞ்சள் காமாலை இல்லியே?" “டாக்டர் டெஸ்ட் செய்து பார்த்தார் அங்கிள். இல்லவே இல்லை." "ஏங்க. பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு நேரமாவுதே. வேன்காரன் இன்னைக்கு வரமாட்டானாம்." "என்னாலயும் முடியாதே லட்சுமி ஆபீசுக்கு நேரமாயிட்டுது. இரண்டும் எதிர் எதிர் திசையில இருக்குதே." அப்படியானால் செல்வாவை." "அறிவு கெட்டத் தனமா பேசுறியே. அவனால முடியுமா? எவ்வளவு வீக்கா இருக்கான் பார்" மோகனன் முன்னால் தன்னை இழிவுபடுத்திய கணவனை அங்கேயே பதிலடி கொடுக்கப் போனாள். அதற்காக அவள் வாயெடுக்கும் முன்பே, மோகனனின் வார்த்தைகள் விழுந்துவிட்டன. "நான் இந்தக் காரிலேயே குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு வாறேன் அங்கிள்" சித்திக்காரி உச்சி குளிர்ந்தாள். அந்தப் பணக்காரப் பிள்ைைளயை, பல்லிளித்துப் பார்த்தாள். ஆனால், மோகனனோ அவளை கடுமையாகப் பார்த்தான். நேற்றைய இரவுக்கும் பகலுக்குமான இடைவேளையில் செல்வா, அவனிடம் தனது சுய வரலாற்றை கூட்டாமல் குறைக்காமல் சொல்லியிருந்தான். சித்தப்பாவின் வாஞ்சையும், சித்தியின் வாட்டலும் அந்த வீட்டையே ஒரு கூண்டாகவும், செல்வாவை அதற்குள் மாட்டிக் கொண்ட கிளியாகவும் அனுமானித்தான் ஆகவே அந்தக் கிளியின் இறக்கைகளை வெட்டி விடுகிறவளை, தன் அம்மாவை பார்ப்பது போலவே பார்த்தான். அதேசமயம், அவள் கணவரை விருப்போடு பார்த்து, இறுதியில் விருப்பையும் வெறுப்பையும் தாழ்த்திக் கொண்டே பேசினான்.
பக்கம்:ஒத்தை வீடு.pdf/192
Appearance