உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெலன் மர்ரே பிரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெலன் மர்ரே ஃபிரீ
2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான தேசிய பதக்கத்தை ஹெலன் ஃப்ரீ பெறுதல்.[1]
பிறப்பு(1923-02-20)பெப்ரவரி 20, 1923
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 1, 2021(2021-05-01) (அகவை 98)
எல்கார்ட், இந்தியானா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவேதியியல்
கல்வி கற்ற இடங்கள்வூஸ்டர் கல்லூரி
மிக்சிகன் மத்தியப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநீரிழிவுக்கான சுய பரிசோதனை அமைப்பு
விருதுகள்கார்வன் ஓலின் பதக்கம்(1980)
கில்பி விருது(1996)
தேசியக் கண்டுபிடிப்பாளர்களின் புகழ் சபை உறுப்பினர்(2000)
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் (2009)

ஹெலன் மர்ரே பிரீ (Helen Murray Free, பெப்ரவரி 20, 1923 – மே 1, 2021) ஒரு அமெரிக்க வேதியியலாளரும் கல்வியாளரும் ஆவார். அசென்சியா நீரிழிவு பராமரிப்பு மையம் என்றறியப்படும் மைல்ஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்த போது நீரிழிவு நோய்க்கான பல சுய-பரிசோதனை முறைக��ை உருவாக்கியதற்காக அவர் மிகவும் அறியப்பட்டவர். ஹெலன் 1944 இல் ஊஸ்டர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், 1978 ஆம் ஆண்டு மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.1947 ஆம் ஆண்டில் அவர் சிறுநீரக ஆராய்ச்சியாளரான ஆல்ஃப்ரெட் ஃப்ரீ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சவுத் பெண்ட் எனுமிடத்தில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் துணைப் பேராசிரியராகவும், பேயர் ஏஜிஎன்ற மருந்தியல் நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.[2]

இளமை

[தொகு]

ஹெலன் முர்ரே பிப்ரவரி 20, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜேம்ஸ் எஸ். முர்ரே, ஒரு நிலக்கரி நிறுவன விற்பனையாளர் ஆவார். ஹெலனுக்கு ஆறு வயதாய் இருக்கும் பொழுது, அவரது தாயார் டெய்ஸி பைபர் முர்ரே இன்புளூயன்சா நோய்த்தொற்றின் காரணமாக இறந்தார்.[2]

கல்வி

[தொகு]

ஹெலன் அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக்கல்வியைப் பயின்றார். மேலும் 1941 இல் போலந்தின் செமினரி உயர்நிலை பள்ளியின் சொற்பொழிவாளர் பட்டம் பெற்றார் . ஊஸ்டர் கல்லூரியில் ஒரு கோடைகால முகாமுக்கு ��ந்தபோது, அங்கு பயில வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டார். உயர்நிலைப்பள்ளி பயிலும் போதுஅவரது ஆங்கில ஆசிரியர் ஆங்கில மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்., ஆரம்பத்தில் ஆங்கிலோ மற்றும் லத்தீன் மொழியில் ஆசிரியராகவேண்டும் என விருப்பம் கொண்டார்; எனினும், இந்தத் திட்டங்கள் விரைவில் மாறிவிட்டன. 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேர்ள் துறைமுகத் தாக்குதல் சமயத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் அல்லது கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர், இதன் காரணமாக, அறிவியலில் தொழில்வாய்ப்பு பெறுவதற்காகப் பெண்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். எனவே ஹெலன் தன்னுடைய முதன்மை விருப்பமான மொழிக்கற்றலில் இருந்து வேதியியல் கற்றார். 1944 ல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அவர் வேதியியல் துறைக்கு மாறியது பற்றி, “ தனக்கு நிகழ்ந்த எப்பொழுதும் ஒரு மிகப் பயங்கர நிகழ்வாகக்’’ குறிப்பிடுகிறார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Science and Technology Medals Foundation, Photograph by Ryan K. Morris". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  2. 2.0 2.1 2.2 Bohning, James J. (14 December 1998). Helen Murray Free, Transcript of an Interview Conducted by James J. Bohning at Elkhart, Indiana on 14 December, 1998 (PDF). Philadelphia, PA: Chemical Heritage Foundation.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெலன்_மர்ரே_பிரீ&oldid=3573828" இலிருந்து மீள்விக்கப்பட்டது