உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்கூ வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்பா வகையினைக் க���றும் யாப்பருங்கல விருத்தி [[[செப்பல் வெண்பா]], வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா என்று வெண்பா மூன்று வகைப்படும் என்று கூறி விளக்கமும் எடுத்துக்காட்டும் தருகிறது. [1]

விளக்கம்

நேரிசை வெண்பாவாக அமைந்து இன-எழுத்து மிக்கு ஒலிக்கும்.
ஆசு கவிகளில் அது தோன்றும்.
இதனை விளக்கும் முன்னோர் நூற்பா ஒன்று உண்டு. [2]

எடுத்துக்காட்டு

1
தண்ணடைந்த திண்தோளாய் தாங்கலாம் தன்மைத்தோ
கண்டடைவார் தம்மை கன்றறுமா - வண்டடைய
நாணீலம் நாறுந்தார் நன்னன் கலைவாய
வாணீலக் கண்ணார் வடிவு. [3]

இதில் மெல்லின எழுத்து மிகுதியாக வந்துள்ளமை காண்க.

2
அறந்தரு செங்கோல் ஐ அன்ன மாந்தைச்
சிறந்தன சேவலோடு ஊடி - மறந்தொருகால்
தன்னம் அகன்றாலும் தம்முயிர் வாழாவால்
என்ன மகன்றில் இவை. [4]

மேற்கோள்

[தொகு]
  1. யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - 179 & 180
  2. வெண்கூ வெண்பா எழுத்து இறந்து இசைக்கும்
  3. தலைவன் தன் தோழனிடம் கூறுவதாகப் பாடல். கண்ணைக் கவரும் தோளினை உடையவனே! வண்டு மொய்க்கும் நீல மலர் மாலையை அணிந்திருக்கும் நன்னன் நாட்டுக் கலைவாய் சுனையில் பூத்திருக்கும் நீல மலர் போன்ற கண்ணினை உடைய அவள் அழகு என்னைத் தீப் போலச் சுடுகிறது (பாடல் செய்தி)
  4. அறம் தரு செங்கோல் மாந்தைத் தலைவன் என் காதல் தலைவன். அவன் வாராதபோது எப்போதும் கூடியே வாழும் அன்றில் [தன்னம்] மறதியாகத் தன் சேவலோடு ஊடிப் பிரிந்திருந்தாலும், மகன்றில்கள் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றனவே. என்ன மகன்றில்கள் இவை? - இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் பிரிவுக்காகத் தலைவி வருந்துகிறாள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கூ_வெண்பா&oldid=3451930" இலிருந்து மீள்விக்கப்பட்டது