வின்சென்ட் செல்வா
வின்சென்ட் செல்வா (Vincent Selva) என்பவர் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் இயக்குநராக அறிமுகமான பிரியமுடன் படத்தில் விஜய், கௌசல்யா ஆகியோர் நடித்தனர். இப்படத்தினால் இவர் பிரபலமடைந்தார். இவரிடம் மிஷ்கின், எஸ். பி. ஜனநாதன் போன்ற இயக்குநர்கள் உதவியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தொழில்
[தொகு]செல்வா பிரியமுடன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1998 இல் வெளியான அந்த காதல் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. விஜய் எதிர்நாயகன் வேடத்தில் நடித்த முதல் படம் இது.
1999 ஆம் ஆண்டில் இவர் தனது இரண்டாவது படமான இரணினினை வெளியிட்டார். இது சுதந்திர போராட்ட வீரர் "வாட்டக்குடி இராணியன்" இன் கற்பனை வாழ்க்கை வரலாறு ஆகும். இந்த படத்தில் முரளி, மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பின்னர் விஜய் நடித்த யூத் திரைப்படத்தை 2002 இல் இயக்கினார். இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ஃபேர் & லவ்லி பெண் ஷாஹீன் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில், கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரது இயக்கத்தில் என்ன பெயர் வைக்கலாம் என்ற திரைப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கேயார் ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சிக்கு பயணம் செய்த போதிலும், நடிகர் தனது விடுதி அறையிலிருந்து வெளியேவர மறுத்துவிட்டார். பின்னர் நீண்ட கால குழப்பத்தைத்துக்குப் பிறகு, படம் நிறுத்தப்பட்டது.[1]
இவர் 2016 ஆம் ஆண்டு சரத்குமாருடன் காவல்துறை பரபரப்பூட்டும் திரைப்படமான காக்கி என்ற படத்தில் பணியாற்றினார், ஆனால் படம் இடையில் நிறுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இந்த படத்தை மீண்டும் தொடங்க செய்ய முயற்சித்த போதிலும், படத்தின் தயாரிப்பு பணிகள் முடியவில்லை.[2]
2005 ல் இவர் பாலிவுட் திரைப்படமான காயப் படத்தின் தமிழ் மறு ஆக்கமாக ஜித்தன் . படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு, ஜித்தன் ரமேஷ் நடித்த மதுரை வீரன் படத்தை இயக்கினார், மதுரை வீரன் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. பின்னர் பெருமாள், துள்ளி விளையாடு, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களை இயக்கினார்.
2016 ஆம் ஆண்டில், ஜித்தானின் தொடர்ச்சியான ஜித்தன் 2 என்ற திரைப்படத்தின் வழியாக மீண்டும் வந்தார். ஆனால் இப்படம் தோல்வியடைந்தது.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பணி | குறிப்பு | |
---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | |||
1998 | பிரியமுடன் | |||
1999 | இரணியன் | |||
2002 | யூத் | Remake of Telugu film Chiru Navvuto | ||
2005 | ஜித்தன் | இந்தி படமான காயப்பின் மறுஆக்கம் | ||
2007 | மதுரை வீரன் | தெலுங்கு படமான நுவ்வு நேனுவின் முறு ஆக்கம் | ||
2009 | பெருமாள் | |||
2013 | துள்ளி விலையாடு | |||
2014 | இங்க என்ன சொல்லுது | |||
2016 | ஜித்தன் 2 | |||
2016 | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் |
குறிப்புகள்
[தொகு]