உள்ளடக்கத்துக்குச் செல்

விசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசு
பிறப்புமீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்[1]
(1945-07-01)1 சூலை 1945 [2]
தமிழ்நாடு, இந்தியா
இறப்பு22 மார்ச்சு 2020(2020-03-22) (அகவை 74)
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981-2016
வாழ்க்கைத்
துணை
சுந்தரி
(திருமணம்.1975-2020)
பிள்ளைகள்லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா

விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3][4]

திரை வாழ்க்கை

[தொகு]

இவர் மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

திரைத்துறையில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் திரைத்துறை கதாப்பாத்திரம் குறிப்புகள்
இயக்குனர் எழுத்தாளர் நடிகர்
1977 பட்டினப்பிரவேசம் Red XN Green tickY Red XN
1978 சதுரங்கம் Red XN Green tickY Red XN
1980 அவன் அவள் அது Red XN Green tickY Red XN
1980 மழலைப் பட்டாளம் Red XN Green tickY Red XN
1981 தில்லு முல்லு Red XN Green tickY Green tickY
1981 நெற்றிக்கண் Red XN Green tickY Red XN
1981 கீழ்வானம் சிவக்கும் Red XN Green tickY Red XN
1981 குடும்பம் ஒரு கதம்பம் Red XN Green tickY Green tickY சிறீனிவாச ராகவன்
1982 கண்மணி பூங்கா Green tickY Green tickY Green tickY ராம்குமார்
1982 சிம்லா ஸ்பெஷல் Red XN Green tickY Red XN
1982 மணல் கயிறு Green tickY Green tickY Green tickY உத்திரமேரூர் நாரதர் நாயுடு
1982 புதுக்கவிதை Red XN Green tickY Red XN
1983 டௌரி கல்யாணம் Green tickY Green tickY Green tickY கணேஷ்
1984 நல்லவனுக்கு நல்லவன் Red XN Green tickY Green tickY ஓனர் கங்காதரன்
1984 புயல் கடந்த பூமி Green tickY Green tickY Green tickY நமச்சிவாயன்
1984 ராஜதந்திரம் Green tickY Green tickY Green tickY பைரவன்
1984 வாய்ச்சொல்லில் வீரனடி Green tickY Green tickY Green tickY வேங்கைபுலி வரதாச்சாரி
1984 நாணயம் இல்லாத நாணயம்' Green tickY Green tickY Green tickY வீரபாண்டி
1984 ஊருக்கு உபதேசம் Red XN Red XN Green tickY சங்கரன்
1985 புதிய சகாப்தம் Green tickY Green tickY Green tickY ராமதசரதன்
1985 அவள் சுமங்கலிதான் Green tickY Green tickY Green tickY வாட்ச்மேன் ஆறுமுகம்
1985 கெட்டிமேளம் Green tickY Green tickY Green tickY
1985 சிதம்பர ரகசியம் Green tickY Green tickY Green tickY பீமராவ்
1986 மிஸ்டர். பாரத் Red XN Green tickY Green tickY குமரேச கவுண்டர்
1986 சம்சாரம் அது மின்சாரம் Green tickY Green tickY Green tickY அம்மையப்ப முதலியார் ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1986 ஊமை விழிகள் Red XN Red XN Green tickY ரத்னசபாபதி
1986 மெல்லத் திறந்தது கதவு Red XN Red XN Green tickY துளசியின் தந்தை
1986 தாய்க்கு ஒரு தாலாட்டு Red XN Red XN Green tickY
1986 ஆனந்தக்கண்ணீர் Red XN Red XN Green tickY
1987 அடடே ஆதாரம் Green tickY Green tickY Green tickY தெலுங்கு திரைப்படம்
1987 திருமதி ஒரு வெகுமதி Green tickY Green tickY Green tickY நாகர்கோவில் நாதமுனி
1987 காவலன் அவன் கோவலன் Green tickY Green tickY Green tickY பிரபுவின் மாமனார்
1988 பெண்மணி அவள் கண்மணி Green tickY Green tickY Green tickY ரேடியோ மாமா
1988 வீடு மனைவி மக்கள் Red XN Red XN Green tickY சுப்பையா பிள்ளை
1988 மாப்பிள்ளை சார் Red XN Red XN Green tickY
1988 சகலகலா சம்மந்தி Green tickY Green tickY Green tickY மாயவரம் சம்மந்தி
1990 வரவு நல்ல உறவு Green tickY Green tickY Green tickY அப்பா அம்பலவானர் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
1990 வேடிக்கை என் வாடிக்கை Green tickY Green tickY Green tickY காவிசட்டை கந்தசாமி
1992 மன்னன் Red XN Red XN Green tickY விசுவநாதன்
1992 உரிமை ஊஞ்சலாடுகிறது Green tickY Green tickY Green tickY கஸ்தூரியின் தந்தை
1992 நீங்க நல்லா இருக்கணும் Green tickY Green tickY Green tickY சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது
1993 உழைப்பாளி Red XN Red XN Green tickY வழக்குரைஞர்
1993 சின்ன மாப்ளே Red XN Red XN Green tickY கல்யாண புரோக்கர்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா Green tickY Green tickY Green tickY பட்டுக்கோட்டை பெரியப்பா
1994 வா மகளே வா Green tickY Green tickY Green tickY விசுவநாதன்
1994 வனஜா கிரிஜா Red XN Red XN Green tickY தொழிலதிபர் ராமநாதன்
1994 வாங்க பார்ட்னர் வாங்க Red XN Red XN Green tickY கணபதி
1995 மாயாபசார் Red XN Red XN Green tickY
1995 காட் பாதர் Red XN Red XN Green tickY தெலுங்கு திரைப்படம்
1996 இரட்டை ரோஜா Red XN Red XN Green tickY சிறப்புத் தோற்றம்
1996 மீண்டும் சாவித்திரி Green tickY Green tickY Green tickY நாராயண மூர்த்தி
1997 நேசம் Red XN Red XN Green tickY
1997 அரவிந்தன் Red XN Red XN Green tickY
1997 அடிமைச் சங்கிலி Red XN Red XN Green tickY
1997 வாசுகி Red XN Red XN Green tickY ராமசாமி
1997 அருணாச்சலம் Red XN Red XN Green tickY வழக்கறிஞர். ரங்காச்சாரி
1997 சிஷ்யா Red XN Red XN Green tickY
1997 வாய்மையே வெல்லும் Red XN Red XN Green tickY
1998 பகவத் சிங் Red XN Red XN Green tickY
1999 அன்புள்ள காதலுக்கு Red XN Red XN Green tickY
1999 மன்னவரு சின்னவரு Red XN Red XN Green tickY
2000 காக்கைச் சிறகினிலே Red XN Red XN Green tickY
2000 வானவில் Red XN Red XN Green tickY
2001 சிகாமணி ரமாமணி Green tickY Green tickY Green tickY சுந்தரமூர்த்தி
2001 கிருஷ்ணா கிருஷ்ணா Red XN Red XN Green tickY வழக்கறிஞர் விசுவநாதன் சிறப்புத் தோற்றம்
2001 மிடில் கிளாஸ் மாதவன் Red XN Red XN Green tickY வழக்கறிஞர்
2001 வடகுபட்டி மாப்பிள்ளை Red XN Red XN Green tickY கோமதி சங்கர்
2001 லூட்டி Red XN Red XN Green tickY
2003 தித்திக்குதே Red XN Red XN Green tickY
2004 மகா நடிகன் Red XN Red XN Green tickY
2005 ஜி Red XN Red XN Green tickY ராகவன்
2007 சீனாதானா 001 Red XN Red XN Green tickY கவர்னர் சிறப்புக் கதாப்பாத்திரம்
2007 நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் Red XN Red XN Green tickY சிறப்புக் கதாப்பாத்திரம்
2008 எல்லாம் அவன் செயல் Red XN Red XN Green tickY
2009 இன்னொருவன் Red XN Red XN Green tickY நீதிபதி
2013 அலெக்ஸ் பாண்டியன் Red XN Red XN Green tickY முதல்வர்
2013 ஒருவர் மீது இருவர் சாய்ந்து Red XN Red XN Green tickY நீதிபதி
2016 மணல் கயிறு 2 Red XN Green tickY Green tickY உத்திரமேரூர் நாரதர் நாயுடு

சின்னத்திரை/தொலைக்காட்சியில்

[தொகு]

சன் தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில், மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CHATTING for a cause". The Hindu. 19 August 2004 இம் மூலத்தில் இருந்து 11 Sep 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041019131223/http://www.hindu.com/mp/2004/08/19/stories/2004081900020100.htm. 
  2. "TANTIS". tamilfilmdirectorsassociation.com. Archived from the original on 11 Sep 2019. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. "உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்..!". Dinamalar. 22 March 2020. Archived from the original on 22 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/mar/22/veteran-kollywood-director-visu-passes-away-at-74-2120181.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசு&oldid=3954316" இலிருந்து மீள்விக்கப்பட்டது