விசில்
விசில் | |
---|---|
இயக்கம் | ஜே. டி. ஜெரி |
தயாரிப்பு | சுஜாதா |
கதை | ஜே. டி. ஜெரி சுஜாதா (வசனம்) |
இசை | டி.இமான் |
நடிப்பு | விக்ரமாதித்யா காயத்திரி ரகுராம் செரின் விவேக் |
ஒளிப்பதிவு | போசியா பாத்திமா |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 4 ஜூலை 2003 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விசில் (Whistle) என்பது 2003 ஆம் ஆண்டில் ஜே. டி. ஜெரி இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி திகில் திரைப்படம் ஆகும். இது 1998 இல் வெளியான 'அர்பன் லெஜன்ட்' என்ற ஆங்கில திகில் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இந்த படத்தின் கதாநாயகனாக விக்ரமாதித்யா நடித்துள்ளார். முக்கோணக் காதல்கதை அமைந்த இந்தப் படத்தில் காயத்திரி ரகுராம் மற்றும் செரின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
விசில் படம் 4 ஜூலை 2003 ஆம் ஆண்டு வெளியாகி சராசரியாக வசூல் செய்தாலும், டி. இமான் இசையமைத்த அதன் இசை வெற்றி பெற்றது. மேலும் விவேக்கின் நகைச்சுவைவையும் படத்தின் வெற்றிக்கு முக்கியமானது.[2]
நடிகர்கள்
[தொகு]- விக்ரமாதித்யா - ஜீவா
- காயத்திரி ரகுராம் - அஞ்சலி
- செரின் - மாயாவதி
- விவேக் - சகாதேவன்
- மயூரி - ஷர்மி
- திவ்யதர்சினி - சரஸ்வதி
- பானு சந்தர் - சையத்
- சீனு மோகன்
- வைஷ்ணவி - ஸ்வேதா
- லிவிங்ஸ்டன் - பேராசிரியர் பன்னீர்செல்வம்
- செந்தில் - கல்லூரி கேண்டீன் பொறுப்பாளர்
- மயில்சாமி - சகாதேவனின் நண்பர்
- மனோரமா - வினோத்தின் அம்மா
- ராஜ் கபூர் - பாஜி
- மனோபாலா - கல்லூரி பேராசிரியர்
- தேனி குஞ்சரமாள் - சகாதேவனின் பாட்டி
- என். மாத்ருபூதம் - வைத்தியராக (சிறப்புத் தோற்றம் )
- சிவா - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
- பிரேம்ஜி அமரன் - (மதிப்பீடு செய்யப்படாத வேடம்)
உற்பத்தி
[தொகு]இந்த படம் உல்லாசம் மற்றும் பாண்டவர்கள் படத்திற்கு பிறகு இயக்குநர் ஜே. டி. ஜெரியின் மூன்றாவது படம் ஆகும். இந்தி மொழி விளம்பரங்களில் நடித்த புதுமுக நடிகர் விக்ரமாதித்யா இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிற���ர். தமிழில் உருவாகும் முதல் கல்லூரி சார்ந்த முதல் திகில் படம் இதுவாகும்.[3] இது மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் 6வது படம் ஆகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lê, Paul (14 January 2022). "'Scream' Got the Bollywood Treatment in 2003 Remake 'Sssshhh…' [Horrors Elsewhere]". Bloody Disgusting. Archived from the original on 10 February 2023. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ Rangarajan, Malathi (4 July 2003). "Whistle". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120109170000/http://www.hindu.com/fr/2003/07/04/stories/2003070401120200.htm. பார்த்த நாள்: 11 June 2013.
- ↑ "'Whistle'". The Hindu. 2 July 2003. Archived from the original on 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.
- ↑ Kannan, Ramya (7 January 2003). "Whistle and watch 'whistle'". The Hindu. Archived from the original on 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.