விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு96
சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் விழாவில் தமிழ் விக்கிப்பீடியா
[தொகு]நடத்திய கழகம் - சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம்
இடம் - குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி
தமிழ் விக்கிப்பீடியா தொடர்பானவை - முனைவர் துரை மணிகண்டன் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை
- இன்று சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்திய இதழியல் விழாவில் முறைவர் துரை. மணிகண்டன் (விக்கிப்பீடியரும் கூட) எழுதிய இயக்க இணைய இதழ்களில் தமிழ் விக்கிப்பீடியா (பக்கம் 251 - 254) என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.
- இதழியல் நூல் குறுந்தகடாகவும், நூலாகவும், கலந்துகொண்டு கட்டுரை வாசித்தவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. முனைவர் துரை. மணிகன்டன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது எப்படி? என காட்சிவிளக்கம் கொடுக்க திட்டம் போட்டிருந்தாலும் நேரக்குறைவால் அதைச் செய்ய இயலவில்லை.
- அதே இதழில் நான் எழுதிய உருகுணைப் பாண்டியர்கள் என்னும் வரலாறு/தொல்லியல் ஆய்வுக்கட்டுரையில் (பக்கம் 142 - 145) தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள "அகரமேறிய மெய் முறைமை" என்னும் கட்டுரை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:52, 28 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 03:13, 29 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:58, 29 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:06, 29 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:20, 29 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்--மாதவன் (என்னுடன் உரையாட படத்தை சொடுக்கவும்) 05:14, 30 திசம்பர் 2013 (UTC)
துரை. மணிகண்டன், தமிழ் விக்கிப்பீடியா பரப்புரையில் ஈடுபடுவதற்கு நன்றி. ஆனால், திருச்சி வானொலியில் நீங்கள் அளித்த பேட்டியின் தகவல் துல்லியமின்மை குறித்து பலரும் முகநூலில் கவலை தெரிவித்து இருந்தார்கள். விக்கிப்பீடியா சார்பாக பரப்புரைகளில் ஈடுபடுவோர், விக்கிப்பீடியா இயக்கத்தைப் பற்றியும் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள் பற்றியும் இன்னும் கூடுதலாகவும் சரியாகவும் அறிந்து கொள்ள முற்படுமாறு வேண்டிக்கொள்கிறேன். இது தொடர்பாக ஏதேனும் ஆலோசனை தேவை என்றால், ஒத்தாசைப் பக்கத்தில் கேட்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:46, 21 சனவரி 2014 (UTC)
விக்கிப்பீடியா நண்பர்கள் திட்டம்
[தொகு]கருத்து தேவை: விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விக்கிப்பீடியா நண்பர்கள்--இரவி (பேச்சு) 05:09, 30 திசம்பர் 2013 (UTC)
மிகவும் நல்ல திட்டம்!... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:27, 1 சனவரி 2014 (UTC)
விருப்பம்--ஜெ.மயூரேசன் (பேச்சு) 15:49, 23 சனவரி 2014 (UTC)
நடப்பு நிகழ்வுகள்
[தொகு]விக்கிப்பீடியாவில் விக்கிப்பீடியா:நடப்பு நிகழ்வுகள் பக்கத்தை மீண்டும் தினமும் இற்றைப்படுத்துவதற்கு உள்ளேன். இடப்பக்கத்தில் உள்ள இப்பக்கத்திற்கான இணைப்பை மீண்டும் மூன்று படிகள் மேலே கொண்டு வர வைக்க வேண்டும். அவ்வாறே முன்னர் இருந்தது. எங்கே இதனைச் செயல்படுத்துவது எனத் தெரியவில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 23:50, 1 சனவரி 2014 (UTC)
- ஆயிற்று. பார்க்க: மீடியாவிக்கி:Sidebar--இரவி (பேச்சு) 15:38, 2 சனவரி 2014 (UTC)
- நன்றி இரவி.--Kanags \உரையாடுக 06:34, 3 சனவரி 2014 (UTC)
2014 இலண்டன் விக்கிமேனியா
[தொகு]2014 இலண்டன் விக்கிமேனியாவுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பக்கத்தின் இறுதியில் பாருங்கள். மூன்று உலக விக்கிப்பீடியர்களில் ஒருவராக பூங்கோதையின் பேட்டி வருகிறது :) - https://wikimania2014.wikimedia.org/wiki/Scholarships --இரவி (பேச்சு) 19:17, 8 சனவரி 2014 (UTC)
விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 05:05, 9 சனவரி 2014 (UTC)
- விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:51, 9 சனவரி 2014 (UTC)
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:07, 12 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:04, 12 சனவரி 2014 (UTC)
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
[தொகு]இங்கிருந்த உரையாடல் விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு க்கு நகர்த்தப்பட்டுள்ளது.
அனுமதி வேண்டி
[தொகு]ஐயா வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கு எமது பொங்கல் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து நான் பனியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எதிர்வரும் மார்ச் மாதம் “ தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் நடத்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பன்னாட்டுக்கருத்தரங்கம் நடைபெற நான் தமிழ் விக்கிப்பீடியாவையும் இணைத்து கருத்தரங்கம் நடத்தலாம் என்று உள்ளேன். அதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துவரும் அன்பர்கள் தங்களது கருத்தை முன்வைக்க வேண்டுகின்றேன்.
எ.கா :பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்-தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக்கருத்தரங்கம்
அன்புடன் முனைவர் துரை.மணிகண்டன்
நன்றி. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நிச்சியமாக அனுமதி வேண்டியதில்லை. பல பயனர்கள் பயன்படுத்திய ppt நிகழ்த்தல்கள் உள்ளன. தேவைப்படின் கூறவும், சுட்ட முடியும். --Natkeeran (பேச்சு) 17:55, 14 சனவரி 2014 (UTC)
மிக்க நன்றிங்க ஐயா. உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. தங்களை இந்த கருத்தரங்கிற்கு ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் ஒருவராக உங்களை இணைத்துக்கொள்ளலாம் என்று இருக்கின்றேன். உங்களது ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றேன். - முனைவர் துரை. மணிகண்டன்.
நற்கீரன், நீங்கள் துரை மணிகண்டனின் வேண்டுகோளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. அவர் விக்கிப்பீடியா பற்றி உரையாற்றவோ பயிலரங்கு நடத்தவோ அனுமதி கோரவில்லை. மாறாக, அவரது கல்லூரி ஏற்பாடு செய்யும் பன்னாட்டுக் கருத்தரங்கின் இணை-ஒருங்கிணைப்பு நிறுவனமாக தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரைப் பயன்படுத்த அனுமதி கோருகிறார். இவ்வாறான வேண்டுகோள் வருவது முதல் முறை. இது குறித்து இது வரை நம்மிடம் கொள்கை / அணுகுமுறை இல்லை. பொதுவாக, விக்கிப்பீடியா பரப்புரையில் ஈடுபடும் முகமாக பட்டறைகள் நடத்துவது, கண்காட்சிகளில் கடை போடுவது, பயிலரங்குகள் நடத்துவது ஆகியவற்றுக்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை. ஆனால், ஒரு நிகழ்வின் இணை-ஒருங்கிணைப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா கலந்து கொள்ள சில வழிமுறைகளை உருவாக்குவது அவசியம்.
- குறிப்பிட்ட நிகழ்வின் நோக்கம், செயற்பாடுகள், திட்டங்கள் என்ன?
- இதனை ஏன் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து செய்ய வேண்டும்? தமிழ் விக்கிப்பீடியா பெறும் பயன்கள் / இடர்கள் என்ன?
- திட்டமிடல் முழுக்க வெளிப்படையாகவும் தமிழ் விக்கிப்பீடியா தளத்திலும் நடை பெற வேண்டும். அப்போது தான் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைத்தும் கலந்து பங்கேற்க முடியும்.
முதல் இரண்டு கேள்விகளுக்கு நிறைவளிக்கும் மறுமொழியும் கடைசி கோரிக்கைக்கு உறுதியும் அளித்தால் இணை-ஒருங்கிணைப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா கலந்து கொள்ளலாமா என்பது பற்றி தொடர்ந்து பேசலாம். அது வரை தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரை எந்நிகழ்வுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்று கோருகிறேன்.
விக்கிப்பீடியா வணிகமுத்திரைகள் குறித்த அண்மைய அறிக்கை ஒன்றையும் காணலாம்: http://blog.wikimedia.org/2014/01/19/announcing-wikimedias-new-community-centered-trademark-policy/ --இரவி (பேச்சு) 10:25, 21 சனவரி 2014 (UTC)
பொங்கலோ, பொங்கல் - இனிய வாழ்த்துக்கள்
[தொகு]அனைவரும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 17:57, 14 சனவரி 2014 (UTC)
- அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 19:52, 14 சனவரி 2014 (UTC)
- பொங்கல் வாழ்த்துக்கள் --மயூரநாதன் (பேச்சு) 04:20, 15 சனவரி 2014 (UTC)
- பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் (aka மாட்டுப்பொங்கல்) ;) --ஜெ.மயூரேசன் (பேச்சு) 04:48, 15 சனவரி 2014 (UTC)
- த.வி. பயனர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!--பவுல்-Paul (பேச்சு) 04:55, 15 சனவரி 2014 (UTC)
- பொங்கல் வாழ்த்துக்கள்! தை பிறந்தாச்சு..வழி பிறக்கட்டும்...--Drsrisenthil (பேச்சு) 06:37, 15 சனவரி 2014 (UTC)
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் (மாட்டுப் பொங்கலுக்கும் சேர்த்து)-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:21, 15 சனவரி 2014 (UTC)
அனைவருக்கும் (தைப் + பட்டிப்) பொங்கல் வாழ்த்துக்கள். இந்தத் தையிலிருந்து தமிழ் விக்கி புது அவதாரம் எடுப்பான். பொறுத்திருந்து பாருங்கள்.....!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:32, 15 சனவரி 2014 (UTC)
- ஏன் அண்ணா பாய்வதாகத் திட்டமா?
- அனைவருக்கும் எனது பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 09:33, 15 சனவரி 2014 (UTC)
- அனைவருக்கும் என பிந்திய தைத்திருநாள் வாழ்த்துக்கள். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:59, 15 சனவரி 2014 (UTC)
- விக்கிப்பீடியா நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் --சிவகோசரன் (பேச்சு) 04:19, 16 சனவரி 2014 (UTC)
Request for comment on Commons: Should Wikimedia support MP4 video?
[தொகு]I apologize for this message being only in English. Please translate it if needed to help your community.
The Wikimedia Foundation's multimedia team seeks community guidance on a proposal to support the MP4 video format. This digital video standard is used widely around the world to record, edit and watch videos on mobile phones, desktop computers and home video devices. It is also known as H.264/MPEG-4 or AVC.
Supporting the MP4 format would make it much easier for our users to view and contribute video on Wikipedia and Wikimedia projects -- and video files could be offered in dual formats on our sites, so we could continue to support current open formats (WebM and Ogg Theora).
However, MP4 is a patent-encumbered format, and using a proprietary format would be a departure from our current practice of only supporting open formats on our sites -- even though the licenses appear to have acceptable legal terms, with only a small fee required.
We would appreciate your guidance on whether or not to support MP4. Our Request for Comments presents views both in favor and against MP4 support, based on opinions we’ve heard in our discussions with community and team members.
Please join this RfC -- and share your advice.
All users are welcome to participate, whether you are active on Commons, Wikipedia, other Wikimedia project -- or any site that uses content from our free media repository.
You are also welcome to join tomorrow's Office hours chat on IRC, this Thursday, January 16, at 19:00 UTC, if you would like to discuss this project with our team and other community members.
We look forward to a constructive discussion with you, so we can make a more informed decision together on this important topic. Keegan (WMF) (talk) 06:46, 16 சனவரி 2014 (UTC)
விக்கிப்பீடியர்கள் பற்றி சரியான விவரம் தேவை
[தொகு]மேலதிக உரையாடலுக்கு விக்கிப்பீடியா பேச்சு:நாளிதழ் செய்தி மாதிரி இப்பக்கத்துக்கு வரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:43, 16 சனவரி 2014 (UTC)
மொழிபெயர்ப்பு உதவி தேவை
[தொகு]- இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 11:36, 18 சனவரி 2014 (UTC)
விக்கிப் பயணம்
[தொகு]விக்கிப் பயணத் திட்டத்தில் பங்களிக்க விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டல் தேவை. நண்பர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 14:46, 18 சனவரி 2014 (UTC)
- இங்குள்ளோர் சிலர் அங்கும் இருக்கிறோம். :) விக்கிப் பயணத்தின் தமிழ் பதிப்பு வளராத நிலையில் உள்ளது. அதை வளர்க்க நீங்களும் உதவலாம். விக்கிப்பயணத்தின் விதிகள் எளிமையானவை. விக்கிப்பீடியா மாதிரி கலைக்களஞ்சிய நடையில் எழுதக் கூடாது. எளிமையாக, புரியும்படியாக இருக்க வேண்டும். ரசிக்கும் படியான எழுத்து நடையும் நலம் பயக்கும். இங்கே வரவும். உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்தி இடப்படும். உதவி தேவைப்படின், அங்கே கேட்கலாம். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 18 சனவரி 2014 (UTC)
Facing problems in typing your language?
[தொகு]Dear friends, excuse me for writing the message in English. Please feel free to translate this message in your language.
Many of you might have experienced trouble in using the input tool - Universal Language Selector (ULS). Wikimedia Foundation's Engineering Language Engineering team is trying to resolve it as soon as possible.
However, you can enable it as an opt-in option in your User preferences (Please select the user checkbox before "Enable the Universal Language Selector" as shown in the picture above). Hindustanilanguage (பேச்சு) 10:44, 22 சனவரி 2014 (UTC).
Great Thanks Dude. May I know where did you/can we get this type of Updates?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:00, 22 சனவரி 2014 (UTC)
ஆலமரத்தடியப் பாத்ததால தப்பிச்சன் ரண்டு நாளா தமிழ்ல டைப் பண்ண முடியாம நான் பட்ட பாடோ பெரும்பாடு. சப்பா முடியல... இனிமேல் மாற்றம் செய்ய முன்னமே அறிவிச்சா நல்லா இருக்கும். திடுதிடுப்புண்ணு வந்திறங்கினா எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பதட்டமா இருக்காதா...!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:53, 23 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:36, 23 சனவரி 2014 (UTC)
ஐ. பி. பயனர்கள் எப்படி தமிழில் தட்டச்சிடுவார்கள்? எனக்கென்னவோ விக்கிப்பீடியா தொழில்நுட்ப வல்லுநர்கள் வேறு மொழியினரை கண்டுகொள்கிற மாதிரியே தெரியவில்லை. அந்தந்த மொழி விக்கிப்பீடியாக்களில் அந்தந்த மொழி இயல்பிருக்கையாக (டிஃபால்டு) இருப்பதே சிறந்தது.
மற்றவர்கள் கருத்தென்ன?
ஏற்கனவே இதே போல் எழுத்துரு விசயத்தில் முன்னொரு தடவை கடுப்பு கிளப்பிவிட்டார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:21, 23 சனவரி 2014 (UTC)
விருப்பம் //அந்தந்த மொழி விக்கிப்பீடியாக்களில் அந்தந்த மொழி இயல்பிருக்கையாக (டிஃபால்டு) இருப்பதே சிறந்தது.// ஆமாம் இப்போது விக்கிப்பீடியாவில் புகுபதிகை செய்த பயனர்களைத்தவிர யாரும் தமிழில் தட்டச்சிடமுடியாமல் உள்ளது. முதற்பக்கத்திலுள்ள தேடுதல் பெட்டியில் கூடத் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளது. பின்னர் எப்படிப் பயனர்கள் அல்லாதவர்கள் தமிழில் கட்டுரைகளைத் தேடிப் பயன்பெற முடியும். நிச்சயம் இது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஆவன செய்ய வேண்டுகின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:04, 24 சனவரி 2014 (UTC)
- இந்துத்தானிப் பயனர் கூறுவதைப் பார்த்தால் இது ஒரு தற்காலிகத் தடங்கல் என்றே எண்ண வேண்டியுள்ளது. சில நாட்கள் பொறுத்துப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 11:20, 24 சனவரி 2014 (UTC)
- அண்மைக்காலமாக தமிழில் நேரடியாக எழுதும் வசதி என்னுடைய கணினியில் வேலை செய்வதில்லை. "பொங்குதமிழ் ஒருங்குறி எழுதியைப்" பயன்படுத்தியே விக்கியில் எழுதி வருகிறேன். இங்கே குறிப்பிட்டதுபோல் விருப்பத்தீர்வில் மாற்றங்கள் செய்தும் பயனேதும் இல்லை. ஒவ்வொரு முறையும் மென்பொருள் மேம்பாடுகளைச் செய்யும்போது இவ்வாறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி நிகழ்வது புதிதாக வருபவர்களைச் சலிப்படையச் செய்யும். ஒவ்வொரு விக்கி��் திட்டத்திலும் இருப்பியல்பாகவே அந்தந்த மொழிகளில் உள்ளிடும் வசதிகள் இருக்கவேண்டியது கட்டாயம். இது குறித்துத் தகவல் தந்தவர் இது ஒரு தற்காலிக நிலை என்றே குறிப்பிட்டிருக்கிறார். எனவே இது கூடிய விரைவில் சரியாகும் என நினைக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 11:33, 24 சனவரி 2014 (UTC)
என்னுடைய கேள்வி என்னவென்றால் இப்படியே எத்தனை தற்காலில முறைகள் வரும்? ஒவ்வொரு தற்காலிக முறையும் எத்தனை நாள் நீடிக்கும்? அதை நாம் நமக்கு ஏற்றவாறு அமைக்க இன்னும் எத்தனை நாளாகும்?
என் கருத்து என்ன என்ரால் மேம்பாடுகளை விக்கிப்பீடியாக்களில் பொருத்தும் போது அந்தந்த மொழி விக்கிப்பீடியர்களின் அனுமதி கேட்டே செய்வது நல்லது. இல்லை என்றால் தற்காலிகம் என்பதையே நிரந்தரமாகச் சொல்ல வேண்டி வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:53, 24 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 23:19, 24 சனவரி 2014 (UTC)
- விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 02:24, 25 சனவரி 2014 (UTC)
- விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:34, 25 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:00, 25 சனவரி 2014 (UTC)
மேற்கூறியவாறு மாற்றியதும் தொகு, மூலத்தைதொகு என்று இரு தத்தல்கள் தோன்றுகின்றன. தொகுவை அழுத்தினால் தொங்கிவிடுகிறது தொகுத்தல் வரவில்லை ஆனால் மூலத்தைதொகுவை அழுத்தினால் தொகுத்தல் வேலைசெய்கிறது. --குறும்பன் (பேச்சு) 17:47, 25 சனவரி 2014 (UTC)
Visual Editor இல் அவ்வாறு தான் செயற்படும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:23, 26 சனவரி 2014 (UTC)
நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பற்றிய விவாத பக்கம்
[தொகு]ஆங்கில விக்கிப்பீடியாவில் Articles for Deletion என்ற நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பற்றிய விவாத பக்கம் உள்ளது. அவ்வாறு தமிழில் உள்ளதா? அவ்வாறு இல்லையெனில் அதன் சாத்தியக் கூறுகள் என்ன? - Vatsan34 (பேச்சு) 15:43, 25 சனவரி 2014 (UTC)
சில விடயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளன.
[தொகு]பல கட்டுரைகளில் சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகள் தமிழில் மாற்றப்பட்டு உள்ளன. உதாரணமாக கேண்டெலா என்ற கட்டுரையில் சர்வதேச அலகுகளென சில தமிழ்ச் சொற்கள் அல்லது குறியீடுகள் உள்ளன. இவை பொருத்தமற்றவை எனவே எண்ணுகின்றேன். ஏனெனில் சர்வதேச அலகுகள் என்பன அனைத்துப் பிரதேசத்திலும் ஒன்றாகவே இருக்க வேண்டும். இது பற்றிய பிரதான கட்டுரையிலும், மறை வெப்பம் போன்ற கட்டுரைகளிலும் இத்தவறுகள் உள்ளன. உதாரணமாக கேண்டலா கட்டுரையில் Cd எனக் குறிப்பிடாமல் கேண்டா என உள்ளது. சர்வதேச விதி முறைகளை மாற்றியமைக்க எமக்கு அதிகாரமில்லை. இங்கு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன் என எண்ண வேண்டாம். ஆங்கில மொழி கூட உயிரினங்களின் சர்வதேசப் பெயர்களை இலத்தீனிலேயே வைத்துள்ளது. எனவே நாமும் சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாதோருக்காக தமிழில் அக்குறியீடுகளுக்கான பேச்சுப் பிரயோகத்தை இணைத்து விடலாம். இக்கட்டுரைகளில் சர்வதேசக் குறிச்சொல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வடிவமாகவே உள்ளது. எனவே இவற்றை சர்வதேச விதிக்கமைய மாற்றுவதில் தவறேதுமில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே இது பற்றி ஒரு தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டியது மிகவும் அவசியம்.
அடுத்த விடயம் கூகில் தமிழாக்கக் கட்டுரைகள் பற்றியது. இவற்றில் சில பின்னாளில் திருத்தப்பட்டவற்றைத் தவிர ஏனையவை வாசிக்க முடியாத படி உள்ளன. எனவே சூரியக் குடும்பம் போன்ற திருத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிர ஏனையவற்றின் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கி புதிதாகத் தொடங்குவது நன்றாயிருக்கும் என எண்ணுகின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 04:05, 27 சனவரி 2014 (UTC)
- தமிழில் நீண்ட காலமாக சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகள் தமிழில் உள்ளன. எ.கா: ft = அடி, cm = செமீ. ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் அவசியம் என்றால், ஆங்கிலத்தை அடைப்புக்குறியினுள் இடலாம். வீதியில் செல்வோருக்கு குறித்த அறிவிப்புப் பலகைகள் சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகளுடன் இருப்பது தேவைதான். அங்கு பல மொழிபேசுவோரும் பயணிப்பர். ஆனால் அவ்வுதாரணம் இங்கு ஏற்புடையதல்ல. மேலும், உருசிய, எபிரேய மொழிகளில் கேண்டெலா என்ற கட்டுரை அவர்களின் மொழியிலேயே குறியீடுகளைக் கொண்டள்ளது. கூகிள் தமிழாக்கக் கட்டுரைகள் நீக்கத்தேவையில்லை. அவற்றை அப்படியே வைத்து திருத்தலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:09, 27 சனவரி 2014 (UTC)
- இலங்கைப் பாடநூல்களில் இப்போது km என்றா எழுதுகிறார்கள் கிருத்திகன்?--Kanags \உரையாடுக 05:19, 27 சனவரி 2014 (UTC)
ஆமாம்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:09, 27 சனவரி 2014 (UTC)
அனைவரும் அறிந்திராத அனைத்துலக முறை அலகுகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தரப்பட வேண்டும். மீட்டர் போன்ற அனைவரும் அறிந்த அலகுகள் தமிழிலேயே தரப்படலாம் என எண்ணுகிறேன். ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்றுவோர் அருள்கூர்ந்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தைத் தரவும். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பயனர்கள் தத்தெடுத்துத் தங்கள் பயனர் வெளியில் வைத்திருந்து முழுவதும் திருத்திப் பின்னர் மூலக்கட்டுரையை நீக்கிவிட்டுத் தங்கள் பெயரில் பதிவேற்றும் நடைமுறை முன்னர் இருந்தது. தங்கள் பெயர் தேவையில்லை என்று நினைப்போர் அப்படியே இணைத்து விடலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:24, 27 சனவரி 2014 (UTC)
அப்படியென்றால் அடைப்புக்குள் ஆங்கிலப் பெயரை இட்டு விடுவோம். இலங்கையில் எவ்வாறென்று உறுதியாகக் கூற இயலாது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு விதமாக உள்ளன. எனவே இரண்டு வகையான குறியீட்டையும் இடுவதே நல்ல முடிவென நினைக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 12:13, 27 சனவரி 2014 (UTC)
விருப்பம் ஆமாம் அண்ணா அதுவே நல்லது!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:22, 27 சனவரி 2014 (UTC)
- எனக்குத் தெரிந்தவரை தமிழ் பாடப்புத்தகங்களில் அலகுகளைத் தமிழில்தான் போடுகிறார்கள். அலகுகளை ஆங்கிலத்திலேயே போடவேண்டும் என்று கேள்விப்பட்டதில்லை. நானும் தமிழிலேயே படித்தேன் பாடப்புத்தகங்களில் கிமீ/மணி, ஓம் (ohm), கி/சமீ3, நியூட்டன்/சமீ2 என்று தமிழில்தான் இருக்கும். நாங்கள் எழுதும்போதும் அவ்வாறுதான் எழுதுவது வழக்கம். தமிழ் விக்கியிலும் அலகுகளைத் தமிழிலேயே கொடுப்பதுதான் சரி. வேண்டுமானால் விளக்கத்துக்காக அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தையும் கொடுக்கலாம்.--−முன்நிற்கும் கருத்து Mayooranathan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- கேண்டெலா போன்ற அரிதாகப் புழங்கும் சொற்களுக்கு ஆங்கில எழுத்துக்களை அடைப்புக்குள் போடலாம். ஆனால், கிமீ, மணி, மீ போன்ற அடிக்கடி புழங்கும் சொற்களுக்குத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 20:02, 27 சனவரி 2014 (UTC)
- இலங்கை பாடநூல்களில் தமிழில் எழுதுவது பொதுவான நடைமுறயாக உள்ளது. தன்வெப்பக் கொள்ளளவு முதலான சில சிக்கலானவற்றை J Kg-1 K-1 என ஆங்கிலக் குறியீடுகளால் வசதிக்காக குறிப்பிடுவது���்டு. ஆயினும் தமிழில் எழுதுவதே சிறப்பு. நாங்கள் சிறு வகுப்பில் படிக்கும் போது நூல்களில் சென்ரி மீற்றர் என்பதற்குப் பதிலாக சதம மீற்றர் எனக் கூறப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 28 சனவரி 2014 (UTC)
சாதாரண தரத்தின் பின்னர் பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றேன். நான் சாதாரண தரத்தை ஆங்கில மொழியிலேயே கற்றேன். எனினும் தற்போது உயர்தர வகுப்புகளில் தற்போது படித்த மட்டும் எந்த ஒரு தமிழ்க் குறியீடும் கற்பிக்கப்படவில்லை. எனினும் தமிழ் மொழி மூல சாதாரண தர விஞ்ஞானப் புத்தகத்தில் இவ்வாறான முறையே உள்ளது:-
--G.Kiruthikan (பேச்சு) 03:51, 29 சனவரி 2014 (UTC)
அனைத்துலக முறை அலகுகளை உரோமன் எழுத்திலே கொடுக்கவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. உரோமன் எழுத்துமுறையைக் கொள்ளாதவர்கள் தங்கள் மொழி எழுத்துகளில் தரலாம். செல்சியசு என்பதையும் செண்டிகிரேடு என்பதையும் °C என்றுதான் குறிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள் உண்டு. °செ என்று எழுதுவதில் பிழை இல்லை. உருசிய மொழியைப் பாருங்கள். அவர்கள் சிரிலிக்கு எழுத்தில் எழுதும் வழக்கம் கொண்டிருக்கின்றார்கள். சீனர்களும் கிலோமீட்டர் என்பதை 千米 (சியான் மீ; 千 = சியான் என்றால் ஆயிரம், 米 என்றால் மீ (மீட்டர் என்னும் அளவு)). என்று குறிக்கின்றார்கள். சாலைகளில் எழுதுவதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வர இயலாது. கிலோமீட்டர் என்பதற்கு ஈடான சீனமொழி விக்கிப்பக்கத்தைப் பாருங்கள். --செல்வா (பேச்சு) 02:48, 26 பெப்ரவரி 2014 (UTC)
உரையாடல்களில் கண்ணியம் காப்போம்...
[தொகு]வணக்கம்! அண்மைக் காலத்தில் ஒரு சில உரையாடல்களில்... தேவையற்ற கேலியும், கிண்டலும், பரிகாசமும் துளிர்விடுவதை உணர்கிறேன். முக்கியமான தகவல் பரிமாற்றம் நிகழும்போதும் இது நடப்பது மிகுந்த வேதனை தருகிறது. வெளிப்படையாக சுட்டிக்காட்டி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை; அதே நேரத்தில் இந்த விசயத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன். (இங்கிருந்து விலகி, விக்சனரிக்கோ அல்லது விக்கிசெய்திகளுக்கோ போய் முடிந்ததைச் செய்யலாமோ என சில நேரங்களில் எண்ணவேண்டியுள்ளது.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:30, 28 சனவரி 2014 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:51, 28 சனவரி 2014 (UTC)
- எங்கு என்று சுட்டிக்காட்ட வேண்டுகிறேன், இதன் மூலம் அறியாமல் செய்யும் தவறுகள் திருத்தப்பட வாய்ப்புண்டு. யார் எனவோ, எங்கு நிகழ்ந்தது எனவோ அறியாமல் அதனை திருத்திக் கொள்ளுதல் இயலாது. மனம் புண்படும் என நினைத்தால் மின்னஞ்சலைப் பயன்படுத்துங்கள். தங்களுடைய கூற்று மிகவும் பொதுமையாக இருப்பதால் மேற்கொண்டு கருத்து கூற இயலவில்லை. என்னைப் போன்றோருக்கு ஊக்கம் தந்து பங்களிக்கத் தூண்டும் ஒருவரை விக்கிப்பீடியா இழந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தங்களுடைய விக்கியை விட்டு விலகும் எண்ணத்தினை கைவிட வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:25, 28 சனவரி 2014 (UTC)
- உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன் செல்வசிவகுருநாதன், ஜெகதீஸ்வரன்! சில உரையாடல்களில் கலந்து கொள்ள அல்லது தொடர அவை தடையாகவும் இருக்கின்றன. உரையாடல்கள் அரட்டையாக இருப்பது அல்லது பரிகாசமாக இருப்பது கலைக்களஞ்சிய நோக்கில் நல்லதல்ல. வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தகுந்ததென நினைக்கிறேன். பிழை என் உரையாடலில் இருந்தால் என்னிடமும் சுட்டிக்காட்டுங்கள். இங்கு தெரிவிக்க தயக்கம் என்றால், தனி செய்தி அல்லது முகநூல் செய்தி உதவக்கூடும். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:34, 28 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:48, 28 சனவரி 2014 (UTC)
- விருப்பம் , எனக்கும் பொருந்தும் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:44, 28 சனவரி 2014 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:51, 28 சனவரி 2014 (UTC)
கூகுள் இமேஜஸில் வடிகட்டி
[தொகு]மேலுள்ள படங்கள் "Labeled for commercial reuse with Modification" கீழ் வருபவை. இவற்றை பொதுவகத்தில் தரவேற்றலாமா? இதே போல் இன்னும் சில reuse வடிகட்டிகள் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 29 சனவரி 2014 (UTC)
- Google Images பொதுவாக பதிப்புரிமையினை சரியாகக்காட்டுவதில்லை. மேலும் Google Images--ஐ படிமத்தின் மூலமாக பொதுவகத்திலும் ஏற்கப்படுவதில்லை. அப்படங்களைக்காட்சிப்படுத்தும் தளங்களில் அதன் பதிப்புரிமை ஒத்துவந்தால் பதிவேற்றலாம். (இதே போன்று http://search.creativecommons.org/ உள்ளது) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:39, 30 சனவரி 2014 (UTC)
முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த வார்புருக்கள் தேவை
[தொகு]விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த வார்புருக்கள் தேவை. (மேலதிக தகவல்களுக்கு காண்க விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்) தற்போது ஒரு துறை சார் வார்ப்புருக்கள் மட்டுமே வரிசையில் உள்ளது, பல்துறை வார்ப்புருக்கள் தேவைப்படுகின்றன. உங்கள் விருப்பத்துறை வார்ப்புருக்களை செப்பனிட்டு பரிந்துரைக்கவும். நன்றி! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:48, 30 சனவரி 2014 (UTC)
மாதராசன் அவர்களே! இவ்வார்ப்புருவை முதற்பக்கத்தில் இடம் பெறச் செய்யலாமா அல்ல்து இடம் பெற தகுதிகொண்டதா--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:41, 30 சனவரி 2014 (UTC)
- வார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது. --Anton·٠•●♥Talk♥●•٠· 10:47, 30 சனவரி 2014 (UTC)
நன்றி!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:58, 30 சனவரி 2014 (UTC)
இவ்வார்ப்புருவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன், இது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை, இதில் எவ்வித சிவப்பு இணைப்புக்களும் இல்லை --யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:11, 30 சனவரி 2014 (UTC)
வானியல் தலைப்புக்கள் பற்றி
[தொகு]குறுங்கோள் எனும் கட்டுரையின் தலைப்பு எமது தரம் ஏழு பாடப்புத்தகித்தில் குறள் கோள் எனவே உள்ளது. ஆங்கில விக்கியைல் உள்ள Minor plants' எனும் கட்டுரையின் தமிழ்க்கருத்த்தே குறுங்கோள் என நினைக்கின்றேன். Minor plants என்பது வால்வெள்ளிகள், சிறுகோள்கள் போன்ற பொருட்கள் அதாவது நட்சத்திரங்கள், கோள்கள் அற்ற வேறு வானியல் பொருட்கள் எனவே நினைக்கின்றேன். இதைப்பற்றிய கருர்த்துக்களை எதிர்பார்க்கும் நான்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:19, 30 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:28, 30 சனவரி 2014 (UTC)
கிறித்துப்பல்கலைக்கழக மாணவ மாணவியர் தொகுப்பு
[தொகு]சென்றமாதம் ஓர் அவசர அழைப்பின்பேரில் பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் பட்டறை ஒன்றை நடத்தினோம். அதைத்தொடர்ந்து CIS-A2K நிறுவனமும் கிறித்துப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் இணைந்து மாணவ மாணவியரின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விக்கிப்பங்களிப்பைச் சேர்த்துள்ளனர். அவ்வகுப்பிலிருந்து முதல் பங்களிப்பாக பயனர் விசயலட்சுமி நல்ல கட்டுரை ஒன்றைப் படைத்துள்ளார்: வில்லிசைப் பாடல்களில் சிவனியம். நாட்டார் இலக்கியத்தில் முக்கியமான வில்லிசையில் சிவனியத்தைப் பற்றி முறையாக ஆய்வு செய்து கட்டுரையை நேர்த்தியாக எழுதியுள்ள மாணவி விசயலட்சுமியைப் பாராட்டுகிறேன். நாமும் வழக்கம்போல இத்திட்டத்தின்வழியாகப் பங்களிக்கும் மாணவ மாணவியரின் கட்டுரைகளை மேம்படுத்தி அவர்களை ஊக்குவிப்போம். தவிர திட்டப்பக்கத்தையும் தமிழில் மொழிபெயர்த்து உதவ வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:46, 31 சனவரி 2014 (UTC)
- நன்றி சுந்தர். இத்திட்டம் உருவாக்கும் கட்டுரைகளைக் கவனித்து மேம்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:32, 31 சனவரி 2014 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:41, 31 சனவரி 2014 (UTC)
- ஆம் சிறீதரன். இவ்வாறு கட்டுரை எழுதுபவர்கள் புதுப்பயனர்கள் என்பதால் அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படும். பல பிழைகளும் நேரும். அவர்களைப் பொறுமையாகத் திருத்தி உதவினால் அவர்கள் தமிழ் விக்கியில் தொடர்பங்களிப்பாளர்களாக வாய்ப்புண்டு. திட்டப்பயனர்கள் சிலர் தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டும் வருகிறார்கள். ஒரு சிலர் தொகுப்பில் தேர்ந்ததும் அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:19, 31 சனவரி 2014 (UTC)
- செய்துடுவோம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:45, 31 சனவரி 2014 (UTC)
- நன்றி தமிழ்க்குரிசில். ஏற்கனவே பல வழமையான பயனர்கள் தக்கவாறு அறிவுறுத்துவதையும் திருத்துவதையும் காண முடிகிறது. தொடர்ந்து செய்வோம். -- சுந்தர் \பேச்சு 09:52, 31 சனவரி 2014 (UTC)
- மாணவ, மாணவிகளுக்கு அவர்களுக்கென தனித்த பேச்சுப் பக்கம் இருப்பதையும், அதனை தொகுப்பதினைப் பற்றியும் அறிவுருத்துங்கள். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்கும் பொழுதும் பேச்சுப் பக்கத்தில் பதிலளிக்காமல் உள்ளார்கள். சிறப்பாக பல்கலைக் கழகத்துடன் இணைந்து புதிய பயனர்களை விக்கிக்கு அழைத்து வந்தமைக்கு நன்றி சுந்தர். அப்படியே பயனர் பெயர் வைப்பதையும் அறிவுருத்தினால் நன்று நிறைய பேர் தங்களுடைய பெயர்களுக்குப் பின் 123 என்றே வைத்துள்ளதைக் காண முடிந்தது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:31, 31 சனவரி 2014 (UTC)
- விருப்பம் ஜெகதீஸ்வரன் குறிப்பிட்ட விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படல் நல்லது. மேலும், கட்டுரைகளில் சான்று சேர்ப்பதையும் அவர்களுக்கு விளக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக வில்லிசைப் பாடல்களில் சிவனியம் கட்டுரையில் சான்று கேட்டுள்ளேன். கூடுமானவரை அவர்கள் மண்தொடடியில் பயிற்சி செய்து கட்டுரையாக மாற்றுவது நல்லது. குறித்த பல்கலைக்கழக வார்ப்புருக்கள் கட்ரைகளில் இடுவதையும் தவிர்ப்பது சிறப்பு. --Anton·٠•●♥Talk♥●•٠· 18:59, 31 சனவரி 2014 (UTC)
- செகதீசுவரன், அன்டன், நீங்கள் இருவரும் குறிப்பிடும் சிக்கல்களைக் கண்டேன். தக்கவாறு அறிவுறுத்தியும் உள்ளேன், தேவைப்படும் மாற்றங்களையும் செய்துள்ளேன். செகதீசுவரன் கேட்டுள்ளபடி மாணவி உசாத்துணை ஒன்றை இணைத்துள்ளார். தான் எழுதிய கட்டுரைக்கான அனைத்து தகவல்களையும் அந்த நூலிலிருந்தே பெற்றதாகத் தொலைபேசியில் தெரிவித்தார். அன்டன், புதுப்பயனர்கள் வந்தவுடன் ref குறியீடுகளை இடுவார்கள் என எதிர்பார்க்கவியலாது. Exceptional claims demand exceptional references என்ற கோட்பாட்டின்படி சாதாரண கருத்துக்களுக்கு உசாத்துணைகள் இருந்தால் போதுமானது என எண்ணுகிறேன். (நீங்கள் செய்ததுபோல சான்று கேட்டு வார்ப்புரு இட்டு வைக்கலாம். வேறு அனுபவமிக்க பயனர் எவரேனும் தக்கவாறு மேற்கோளைச் சேர்க்க வாய்ப்பு ஏற்படும்.) -- சுந்தர் \பேச்சு 09:25, 2 பெப்ரவரி 2014 (UTC)
கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம் - வழிநடத்தல்
[தொகு]கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம் எவ்வாறு வழிநடத்தப்படுகின்றது? யாராவது முன் நின்று அவர்களுக்கு உதவுகிறீர்களா? இதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகள் பின்வரும் சிக்கல்களைக் கொண்டுள்ளன.
- எழுதுபவர்களுக்கு போதிய பயிற்சி இல்லை
- கலைக்களஞ்சிய நடையில் இல்லை (விக்கியாக்கம், சான்று உட்பட்ட)
- பயனர் பேச்சுப் பக்க, கட்டுரையின் பேச்சுப் பக்க தொடர்பாடல் இல்லை அல்லது குறைவு
- கட்டுரைகள் சொந்த கருத்துக்களைக் கொண்டுள்ளன
- தேவையற்ற வார்ப்புரு பயன்பாடு
ஆகவே, பினவரும் முறைகள் அவர்களுக்கு உதவலாம்.
- மணல் தொட்டியில் எழுதிப்பழகுதல்
- பயனர் பேச்சுப் பக்க, கட்டுரையின் பேச்சுப் பக்க தொடர்பாடலில் ஈடுபடல்
- சரியான தலைப்புகள் அவர்களுக்குத் தரப்படல்
துப்புரவுப் பணியில் ஈடுபடும் பயனர் குறைவாக இருப்பதனால், உரிய நடவடிக்கை எடுக்கவும். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:43, 1 பெப்ரவரி 2014 (UTC)
- முறையான தொடர்பயிற்சி அளிக்கும் அளவுக்கு எனக்கு இயலவில்லை, ஒரு மணிநேரம் நேரடியாகவும் அதைத்தொடர்ந்து தொலைபேசி வழியாக ஐயங்களையும் மட்டுமே என்னால் தீர்க்கமுடிந்தது. இதைக்காட்டிலும் கூடுதலாகப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புள்ளவர்கள் இருந்தால் செய்யலாம். கன்னடவிக்கிக்கும் இந்தி விக்கிக்கும் இத்திட்டத்தில் பெரிய அளவில் செய்கிறார்கள் என நினைக்கிறேன். மற்றபடி இவர்களது பங்களிப்பை முற்றிலும் புதியவர்களுக்கான அளவை கொண்டே மதிப்பிடுவது நலம். இதுபோன்ற பங்களிப்புகள் ஒரே நேரத்தில் கூடுதலாக வந்தால் சிக்கல் எழலாம். ஆங்கில விக்கியிலோ வேறு ஒரு விக்கியிலோ சிக்கல் ஏற்பட்டது என நினைக்கிறேன். ஆனால், தமிழ் விக்கியில் நான் கடைசியாகப் பார்த்தபோது 2-3 பேர் மட்டுமே இத்திட்டத்தின்வழி வந்திருந்தார்கள். அந்த எண்ணிக்கையில் நாம் வழக்கமாகப் புதுப்பயனர்களை வழிநடத்திச் சேர்ப்பதுபோல் செய்யமுடியும் என நினைக்கிறேன்.
- அன்டன், நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகள் மிகவும் உதவக்கூடும். அவற்றை ஒரு சிறு வழிகாட்டலாக திட்டப்பக்கத்தில் சேர்த்துவிட்டால் CIS-A2K அமைப்பினரிடம் சொல்லி மாணவர்களிடம் பகிரலாம். -- சுந்தர் \பேச்சு 09:44, 2 பெப்ரவரி 2014 (UTC)
- மேலே குறிப்பிட்டுள்ள சிக்கல்களில் பேச்சுப்பக்க உரையாடலின்மைதான் பெரிய சிக்கலாகத்தோன்றுகிறது. ஒருவேளை பழைய இடைமுகத்தில் இருந்ததுபோன்ற புதிய செய்திகள் அறிவிப்பு இருந்தால் கவனம் பெறுமா? எவ்வாறாயினும் இதைப்பற்றி இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு மடலனுப்புகிறேன். இனி புதிதாக இதைப் போன்ற திட்டம் வந்தால் தக்க கட்டமைப்பில்லாமல் ஏற்க வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 11:43, 2 பெப்ரவரி 2014 (UTC)
- இவ்வழிகாட்டலை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு ஒருங்கிணைப்பாளர்களுக்கு மடலெழுதியுள்ளேன். உதவிப்பக்கங்களையும் படிக்குமாறு கேட்டுள்ளேன். மிகவும் தேவையெனில் இன்னொருமுறை நான் அப்பல்கலைக்கழகத்துக்குச் சென்று விளக்கமுடியுமா எனப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 11:57, 2 பெப்ரவரி 2014 (UTC)
- மேலே குறிப்பிட்டுள்ள சிக்கல்களில் பேச்சுப்பக்க உரையாடலின்மைதான் பெரிய சிக்கலாகத்தோன்றுகிறது. ஒருவேளை பழைய இடைமுகத்தில் இருந்ததுபோன்ற புதிய செய்திகள் அறிவிப்பு இருந்தால் கவனம் பெறுமா? எவ்வாறாயினும் இதைப்பற்றி இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு மடலனுப்புகிறேன். இனி புதிதாக இதைப் போன்ற திட்டம் வந்தால் தக்க கட்டமைப்பில்லாமல் ஏற்க வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 11:43, 2 பெப்ரவரி 2014 (UTC)
கட்டுரைப் போட்டி - விரிவான கட்டுரைக்களை விரிவாக்கம் செய்தவர்கள் யார்?
[தொகு]ஜனவரி மாதம் விரிவானக் கட்டுரைக்கான போட்டியில் மூன்று கட்டுரைகள் உள்ளது. அவற்றை அங்கு சேர்த்தவுடன் தங்கள் அகையெழுத்தையும் விரிவாக்கியவர்கள் இடுங்கள். அதைவிட முக்கியம் பெப்ரவரி மாதத்தில் இருந்து இதை ஒரு விதிமுறையாக ஏற்றுச் செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:11, 3 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:26, 3 பெப்ரவரி 2014 (UTC)
- பூச்சி கட்டுரையை எழுதியவர் கலையரசி ஆவார். 29 ஆம் தேதி வரை கட்டுரைப் போட்டியில் எந்த முன்னேற்றமும் இல்லததால் , கட்டுரை போட்டியின் தலைப்பில் இருந்த கட்டுரை விரிவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் முன்மொழிந்தேன். மேலும் அக்கட்டுரையை நான் எழுதாததால் கட்டுரையில் கையொப்பம் இடவில்லை--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:43, 3 பெப்ரவரி 2014 (UTC)
சரிங்க புயலே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:39, 3 பெப்ரவரி 2014 (UTC)
- நந்தினி, நீங்கள் அனுப்பியிருந்த செய்தியைப் பார்த்தேன். நன்றி. நான் ஏற்கனவே கூறியதுபோல், 'பூச்சி' கட்டுரை கட்டுரைப் போட்டியில் இருப்பது தெரியாமலேதான் நான் அந்தக் கட்டுரையைத் தொகுக்க ஆரம்பித்தேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி, என்னால் அப்போதைக்கு அதனைத் தொடர முடியவில்லை. எனவேதான், அப்படியே விட்டுவிட்டேன். நான் முன்பதிவு எதுவும் செய்யாமையாலும், கையெழுத்து எதனையும் இடாமையாலும், எவரும் கட்டுரையைத் தொகுக்கலாம் என நினைக்கின்றேன். மேலும், நான் இந்தக் கட்டுரைப் போட்டியில் முன்பதிவு செய்து கட்டுரைகளை எழுதவில்லை என்பதனால், நான் விரிவாக்கும் கட்டுரைகளை எவரும் தொடர்ந்து விரிவாக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். :). சரிதானே?
- அதுசரி, //ஜனவரி மாதம் விரிவானக் கட்டுரைக்கான போட்டியில் மூன்று கட்டுரைகள் உள்ளது.// இந்த இணைப்பு எங்கே உள்ளது?--கலை (பேச்சு) 11:29, 4 பெப்ரவரி 2014 (UTC)
- கையொப்பம் இல்லாமையால் ?? தென்காசியார் நீக்கிவிட்டார் அம்மா...--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:00, 4 பெப்ரவரி 2014 (UTC)
ஓ, அப்படியா. சரி. --கலை (பேச்சு) 16:09, 4 பெப்ரவரி 2014 (UTC)
Invitation to Telugu Wikipedia Dasabdi Vedukalu 2014
[தொகு]Hi Tamil Community members,
Telugu Wikipedia community is celebrating its 10th anniversary celebrations at Vijayawada on 15th & 16th February 2014. We look forward to see you at Vijayawada on 15-16 February 2014 |
---|
Pranayraj1985 (பேச்சு) 18:16, 3 பெப்ரவரி 2014 (UTC) Secretary, Tewiki 10th Organizing Committee(Sorry for writing in English)
தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் - பன்னாட்டுக்கருத்தரங்கம்
[தொகு]ஐயா வணக்கம். நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளி) வரும் மார்ச் மாதம் 27,28 - 2014 ஆகிய தேதிகளில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளேன். கட்டுரை எழுதும் அன்பர்கள் கட்டுரையை எழுதி tamilinternetbdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு இக்கருத்தரங்கை நடத்த திட்டுமிட்டுள்ளேன்.
ஒருசில கணினி ஆர்வளர்களிடமிருந்து முடிந்தளவு உதவி பெற்று நடத்தினால் நலம்பெறும் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன். கருத்தரங்க அழைப்பிதழ் எமது வலைப்பதிவில் :http://www.manikandanvanathi.blogspot.in/
உங்களுக்குத் தெரியுமா?
[தொகு]முதற்பக்கத்தில் இற்றைப்படுத்தப்படும் உங்களுக்குத் தெரியுமா எனும் பகுதியில் bold செய்யப்பட்டிருக்கும் கட்டுரையில் அதிகம் பங்களித்திருப்போருக்கு {{உதெ பயனர் அறிவிப்பு}} இவ்வாறான வார்ப்புரு அவர்களின் பேச்சுப் பக்கத்தில் இடப்படுவதில்லை என நினைக்கின்றேன், இதனால் பலருக்கு உங்களுக்குத் தெரியுமா? பங்களிப்புப் பதக்கம் கிடைக்காமலும் போயிருக்கலாம்.
உ+ம் - தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவரான தோடர்கள் தம் வாழிடத்தை மந்து என்று கூறுகின்றனர். இவ்வாறு முதற்பக்கத்தில் இற்றைப்படுத்தப்பட்டு இருப்பின் தோடர்கள் எனும் கட்டுரையில் அதிகம் (அதிக பைட்டுக்களில்) பங்களித்திருப்போருக்கு இவ்வாறான வார்ப்புரு அவர்களின் பேச்சுப் பக்கத்தில் இடப்படவில்லை.
இதற்கான காரணத்தைக் கூறுங்கள் அல்லது உங்கள் கருத்துக்களை கூறுங்கள், இப்படிக்கு --யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:13, 6 பெப்ரவரி 2014 (UTC)
- தம்பி இது பயனர் வேலைப்பளுவால் ஏற்பட்டிருக்கலாம். எந்தக் கிழைமைகளுக்கு இடப்படவில்லை கூறுங்கள் இட்டு விடலாம். அல்லது நீங்களே செய்யலாம். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:16, 6 பெப்ரவரி 2014 (UTC)
ஆமாம் நான் தற்போது சனவரி 1 இல் இருந்து தொடங்கிவிட்டேன்!....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:29, 7 பெப்ரவரி 2014 (UTC)
- இது பொதுவாக குறிப்பிட்ட செய்தி இடம்பெறும் கட்டுரையில் பங்களித்தவர்களுக்கு இடம் பெறுவது வழக்கமாயுள்ளது. --மணியன் (பேச்சு) 16:09, 7 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:14, 7 பெப்ரவரி 2014 (UTC)
பொதிகையில் செங்கை பொதுவன் ஐயாவின் நேர்காணல்
[தொகு]செங்கை பொதுவன் அவர்கள் 8-2-2014 அன்று பொதிகை தொ.கா.வில் நம் விருந்தினர் என்னும் நிகழ்ச்சியில் உரையாடினார்கள். அவருடன் அவருடைய மனைவியும் இருந்தார். மிக அருமையாக தம் இளமைக் காலம்,சொந்த உழைப்பில் முயன்று படித்தது பற்றியும் விக்கிப்பீடியாவில் ஆர்வம் கொண்டு பங்களித்த வரலாற்றையும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் பேசினார்கள். --Semmal50 (பேச்சு) 08:15, 9 பெப்ரவரி 2014 (UTC)
- அறியத் தந்தமைக்கு நன்றி. இதனை இணையத்தில் பார்க்கக் கிடைக்குமா? அல்லது யாராவது ஒளிப்பதிவு செய்திருந்தால், யூடியூபில் தரவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 09:01, 9 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:09, 9 பெப்ரவரி 2014 (UTC)
- பொதுவாக பொதிகை நிகழ்சிகளை பதிவு செய்யும் நபர்கள் குறைவு. முன் அறிப்பு ஏதும் இல்லாமல் ஒளிபரப்பானதால், யூடிபில் கிடைக்கப்பதும் கடினமாக இருக்கும். பொதிகை தொலைக்காட்சியில் பணிபுரியும் நபர்கள் யாரேனும் தெரிந்தால் அனுகிப் பார்க்கலாம். நன்றி செம்மல் அய்யா--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 9 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:11, 11 பெப்ரவரி 2014 (UTC)
நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை
[தொகு]பார்க்க: விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் . பிப்ரவரி 22 வரை வாக்கெடுப்பு தொடர்பாக உரையாடுவதற்கான காலம். --இரவி (பேச்சு) 07:17, 10 பெப்ரவரி 2014 (UTC)
தமிழ் விக்கி மூலத்தில் வேறு ஆங்கில கலைக்களஞ்சிய கட்டுரைகள்
[தொகு]மற்ற ஆங்கில என்சைக்ளோ பீடியாவில் உள்ளவற்றை மொழி மாற்றம் செய்து விக்கி மூலத்தில் சேர்க்கலாமா? சேர்க்கலாம் என்றால் தமிழர்கள் கி.மு. 1500 தொட்டு தமிழகத்தில் இருந்தனர் என்று வாதிடுவதற்கு ஏற்ப ஒரு என்சைக்ளோபீடியா கட்டுரை மொழிமாற்றப்படும்.
மேலும் அது அந்த ஆங்கில என்சைக்ளோபீடியா கட்டுரையிலே உள்ளதால் இந்த தொன்மைக்கு வெளிநாட்டு வாதம் ஒன்று கிடைத்த மாதிரி இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:26, 12 பெப்ரவரி 2014 (UTC)
தெலுங்கு விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழா
[தொகு]தெலுங்கு விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு விழாவில் ((நிகழ்வுப் பக்கம்)) தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக (இன்றும் நாளையும்) கலந்து கொள்கிறேன். மேலும், லுவா நிரல்வரி மூலம் முதற்பக்க இற்றைப்படுத்தல் மேலாண்மை குறித்தும் பேசவுள்ளேன். நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துவோம். --Surya Prakash.S.A. (பேச்சு) 03:38, 15 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்--aho;- பேச்சு 06:15, 15 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:50, 15 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள். :) --மணியன் (பேச்சு) 00:44, 16 பெப்ரவரி 2014 (UTC)
புதிய கருவிகள்
[தொகு]2ndhdetor
[தொகு]கருவிகளை உருவாக்கினால் எவ்வாறு அறிமுகம் செய்வது?....--aho;- பேச்சு 07:21, 15 பெப்ரவரி 2014 (UTC)
விடைக்காகத் காத்திருக்கின்றேன்.--aho;- பேச்சு 07:22, 15 பெப்ரவரி 2014 (UTC)
ஆயிற்று கருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன் இங்கு வருக--aho;- பேச்சு 08:09, 15 பெப்ரவரி 2014 (UTC)
சேமி&தொகு
[தொகு]பார்க்க விக்கிப்பீடியா:சேமி&தொகு , சேமித்த பின் நேரடியாக தொகுப்பக்கம் அழைத்துச்செல்லும். :P --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:58, 15 பெப்ரவரி 2014 (UTC)
விரைவில்...
[தொகு]இம் மாத ஆரம்பத்திலிருந்து பல புதிய பயனுள்ள கருவிகளை உருவாக்கி வருகின்றேன். கிட்டத்தட்ட 20+ கருவிகளினை உருவாக்கிவிட்டேன். கருவிகளை உருவாக்குவதில் நேரம் செலவாகின்றதனால் அவற்றினை வெளியிடத் தவறிவிட்டேன். விரைவில் அனைத்துக் கருவிகளும் மேலதிக மேம்படுத்தல்களுடன் வெளியாகும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:40, 15 பெப்ரவரி 2014 (UTC)
- 20க்கும் மேற்பட்ட கருவிகளா? வாழ்த்துகள் நண்பரே. அறிமுகத்தினை ஆலமரத்தடி தொழில்நுட்பத்தில் நீங்கள் குறிப்பிடலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:05, 15 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம் , எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் அண்ணா!....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:20, 15 பெப்ரவரி 2014 (UTC)
ஆயிற்றுமூன்று கருவிகள் வெளியாகிவிட்டன இங்கு பாருங்கள், கருவிகளையும் செயற்படுத்திப் பாருங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:01, 16 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம் மிக மிக நன்று, விக்கியில் முதன்முதல் கருவி வடிவமைத்த பள்ளிமாணவர் எனும் பெருமை தங்களையே சாரும், வாழ்த்துக்கள்!.....--aho;- பேச்சு 17:11, 16 பெப்ரவரி 2014 (UTC)
பாலிமரேசு தொடர் வினை எனும் கட்டுரையைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது
[தொகு]இக்கட்டுரையைப் பார்த்தால் கூகில் தமிழாக்கக் கருவி மூலம் உருவாக்கிய கட்டுரை போல உள்ளது. சரியாக வாசிக்க முடியவில்லை. உண்மையா என்று பார்க்கவும். அப்படியே ஆங்கில விக்கியை நகலெடுத்தது போல் உள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 14:33, 15 பெப்ரவரி 2014 (UTC)
- தானியங்கி தமிழாக்கம் செய்யப்பட்டு, இணைக்கப்பட்டவை நீக்கப்பட்டுள்ளன--நந்தகுமார் (பேச்சு) 19:35, 15 பெப்ரவரி 2014 (UTC)
- உத்தரிப்பு மறுப்பு நீதிமுறைகள் - இக்கட்டுரையும் தானியங்கி கொண்டு மாற்றப்பட்டது போல் உள்ளது. (இக்கட்டுரை எதைக்குறித்தது என்றே எனக்கு விளங்க வில்லை) காண்டெலேரியா லேடி பசிலிக்கா என்னும் பெயரில் சென்ற வாரம் தானியங்கி கொண்டு ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டிருந்தது. அதை உருவாக்கிய IP பயனர் என் பேச்சுப்பக்கத்தில் அதை சீர்செய்ய வேண்டுகோளையும், சீர்செய்தமைக்கு நன்றியையும்கூட தானியங்கி கொண்டே மொழிபெயர்த்து விட்டுச்சென்றிருக்கின்றார். இவ்வகை நிகழ்வுகள் பெரிதும் பரவாமல் தடுக்க வேண்டும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:10, 16 பெப்ரவரி 2014 (UTC)
Universal Language Selector will be enabled by default again on this wiki by 21 February 2014
[தொகு]On January 21 2014 the MediaWiki extension Universal Language Selector (ULS) was disabled on this wiki. A new preference was added for logged-in users to turn on ULS. This was done to prevent slow loading of pages due to ULS webfonts, a behaviour that had been observed by the Wikimedia Technical Operations team on some wikis.
We are now ready to enable ULS again. The temporary preference to enable ULS will be removed. A new checkbox has been added to the Language Panel to enable/disable font delivery. This will be unchecked by default for this wiki, but can be selected at any time by the users to enable webfonts. This is an interim solution while we improve the feature of webfonts delivery.
You can read the announcement and the development plan for more information. Apologies for writing this message only in English. Thank you. Runa
Amendment to the Terms of Use
[தொகு]Hello all,
Please join a discussion about a proposed amendment to the Wikimedia Terms of Use regarding undisclosed paid editing and we encourage you to voice your thoughts there. Please translate this statement if you can, and we welcome you to translate the proposed amendment and introduction. Please see the discussion on Meta Wiki for more information. Thank you! Slaporte (WMF) 22:00, 21 பெப்ரவரி 2014 (UTC)
நீக்கல் பதிவு
[தொகு]அண்மை மாதப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், துப்புரவுப்பணியில் ஈடுபட்டுள்ள பங்களிப்பாளர்கள் மிக முனைப்பாக இருப்பதைக் காணலாம். எனவே, நிறைய குறுங்கட்டுரைகள் நீக்கப்படுவதைத் தவிர்க்கும் வண்ணம், ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதில் கவனம் எடுக்க வேண்டுகிறேன். குறிப்பாக, அனுபவம் வாய்ந்த பங்களிப்பாளர்கள் மூன்று வரிக் கட்டுரைகளுடன் நில்லாமல், புதிய கட்டுரைகளை இயன்ற அளவு நிறைவாக எழுத வேண்டுகிறேன். பார்க்க: பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள்--இரவி (பேச்சு) 12:19, 25 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்-- ----Mohamed ijazz
- உள்ளடக்கங்களை முழுமையாக தமிழாக்கம் செய்தலும் கட்டுரையைத் தொடங்கியவரின் கடமையாகும். எளிமையாகச் செய்யக்கூடியவற்றை செய்யாமல், தமிழாக்கம் எனும் வார்ப்புருவினை இடுதல் ஆரோக்கியமன்று; தமிழ் விக்கியின் நன்மை கருதியே இக்கருத்தினைத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 26 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:23, 26 பெப்ரவரி 2014 (UTC)
- நீங்கள் கூறியது அனேகமாக நானாக இருக்கக்கூடும்.....செல்வசிவகுருநாதன்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:44, 26 பெப்ரவரி 2014 (UTC)
- தனிப்பட்ட முறையில் யாரையும் நான் குறிப்பிடவில்லை; இது ஒரு பொதுவான அவதானிப்பு! இங்கு எழுதுவது தன்னார்வத் தொண்டே; எனினும் தரம் காப்பது, நமது தலையாய கடமை. உடனடியாக இயலாவிட்டாலும் மெல்ல மெல்ல செய்து அக்கட்டுரையை நிறைவு செய்யவேண்டும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:50, 26 பெப்ரவரி 2014 (UTC)
- //தனிப்பட்ட முறையில் யாரையும் நான் குறிப்பிடவில்லை// எப்படியாய் இருந்தாலும் நானும் அதற்குள் அடங்குவதால் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி :) ....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:59, 26 பெப்ரவரி 2014 (UTC)
பயனர் கே. எஸ். பாலச்சந்திரன் மறைவு
[தொகு]ஈழத்தின் மூத்த கலைஞரும் எமது மதிப்புக்குரிய மூத்த பயனருமான பயனர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் நேற்று கனடாவில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்துக் கலைஞர்கள், திரைப்படங்கள் பற்றிய நிறையக் கட்டுரைகளை அவர் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளார். முதற்பக்க அறிமுகத்திலும் இடம்பெற்றிருந்தார். அன்னாருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 03:22, 27 பெப்ரவரி 2014 (UTC)
- அன்னாரைப் பற்றி அறிந்தவர்கள், கே. எஸ். பாலச்சந்திரன் எனும் கட்டுரையில் அவர் குறித்த தகவல்களை மேலும் சேர்த்து அஞ்சலி செலுத்துவோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 27 பெப்ரவரி 2014 (UTC)
- அன்னாருக்கு அஞ்சலி.--குறும்பன் (பேச்சு) 03:35, 27 பெப்ரவரி 2014 (UTC)
- எனது ஆழ்ந்த இரங்கல்கள்--நீச்சல்காரன் (பேச்சு) 06:29, 27 பெப்ரவரி 2014 (UTC)
- அன்னாருக்கு எனது அஞ்சலிகள். --மணியன் (பேச்சு) 06:31, 27 பெப்ரவரி 2014 (UTC)
- அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:33, 27 பெப்ரவரி 2014 (UTC)
- என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மூத்தப் பங்களிப்பாளர்களுள் ஒருவர். இவர் கடைசியாக விக்கிப்பீடியாவில் பங்களித்தது சனவரி 8, 2013. கட்டுரை "தெய்வம் தந்த வீடு" இலங்கைத் திரைப்படம், முதல் 70 மி.மீ இலங்கைத் தமிழ்ப்படம். அவர்தம் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். :( --செல்வா (பேச்சு) 06:36, 27 பெப்ரவரி 2014 (UTC)
என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரைப் பற்றிய கட்டுரையையும் பங்களிப்பாளர் அறிமுகத்தையும் வரும் வாரங்களில் முதற்பக்கத்தில் காட்டலாம். யாருக்குவாது இவருடைய குடும்பத்தினருடன் தொடர்புகள் உண்டா? இருந்தால், தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக முறையான இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பி வைக்கலாம்.--இரவி (பேச்சு) 07:12, 27 பெப்ரவரி 2014 (UTC)
- நற்கீரனுக்குத் தொடர்புகள் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 07:45, 27 பெப்ரவரி 2014 (UTC)
- வருத்தம் தரும் செய்தி! அன்னாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். இவரை இழந்து வாடும் இவர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.--நந்தகுமார் (பேச்சு) 08:10, 27 பெப்ரவரி 2014 (UTC)
மறைந்த கலைஞருக்கு எனது ஆழ்ந்த் அனுதாபங்கள்.....--Mohamed ijazz
என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.--aho;- பேச்சு 11:32, 27 பெப்ரவரி 2014 (UTC) ஆழ்ந்த அனுதாபங்கள்--G.Kiruthikan (பேச்சு) 05:13, 1 மார்ச் 2014 (UTC) என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவருடைய பயனர் அறிமுகத்தைப் பார்த்து யாரோ ஒருவர் விக்கிக்கு வந்ததாக கூறியதாக ஞாபகம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:33, 27 பெப்ரவரி 2014 (UTC)
- திரு பாலச்சந்திரனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குடும்பத்தில் நிகழ்ந்த ஒர் இழப்புப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.--பவுல்-Paul (பேச்சு) 14:17, 27 பெப்ரவரி 2014 (UTC)
- ஈழத்தின் மிகச் சிறந்த பல்துறைக் கலைஞர்களில் ஒருவர். படு பகிடிக்காரர். விக்கியிலும் பங்களித்திருக்கின்றார் என்பதில் இருந்து அவரது சமூக அக்கறையை அறிய முடிகிறது. நேரடியாக அறிமுகம் இல்லை. எனினும் விக்கி தொடர்பாக இரங்கலைப் பகிர்ந்து கொள்ள முடிந்தால் செய்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:38, 27 பெப்ரவரி 2014 (UTC)
என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:02, 27 பெப்ரவரி 2014 (UTC)
- மிகவும் கவலை தரும் செய்தி. நான் இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை வானொலியில் ஒரு புகழ் பெற்ற கலைஞராக அவரை நான் அறிவேன். இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரங்களேற்றுச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். என்னுடைய மனைவியின் ஊரான இணுவிலில் உள்ள பழமை வாய்ந்த மருத்துவமனையில் அவரது மனைவி பணிபுரிந்த காலத்தில் பாலச்சந்திரனும் அங்கேயுள்ள பணியாளர் விடுதியில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில் அவரை நான் பல முறை கண்டிருக்கிறேன் ஆனால் அதிகம் பழகியதில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் தமிழ் விக்கியில் பங்களித்தபோதுதான் அவரைப்பற்றி மீண்டும் தெரியவந்தது. அவரோடு நேரடித் தொடர்புள்ள பல்வேறு தலைப்புக்களில் அவர் பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும் ஏனையோருக்கும் எனது ஆழ்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள். நம்மோடு சேர்ந்து பணிபுரிந்த பயனர் என்கிற வகையில் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் ஒரு இரங்கல் செய்தி கட்டாயம் அனுப்பவேண்டும். வரும் நாட்களில் அவரைப்பற்றிய பல தகவல்களும் கட்டுரைகளும் இலங்கைப் பத்திரிகைகளில் இடம்பெறும். அவற்றில் இடம்பெறக்கூடிய தகவல்களைப் பயன்படுத்தி அவர் குறித்த கட்டுரையை விரிவாக்கலாம்.---மயூரநாதன் (பேச்சு) 19:27, 27 பெப்ரவரி 2014 (UTC)
- மிகவும் வருந்துகிறேன். --கி. கார்த்திகேயன் (பேச்சு) 07:04, 28 பெப்ரவரி 2014 (UTC)
- பாலச்சந்திரனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:36, 28 பெப்ரவரி 2014 (UTC)
பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம்
[தொகு]அன்னாரது உடல் பெப்பிரவரி 28ம் திகதி வெள்ளி மாலை 6மணி முதல் 9 மணிவரையும் மார்ச் 1ம் திகதி சனி மாலை 6மணி முதல் 9 மணிவரையும் Warden and Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Home (3280 Sheppard Ave E, Scarborough)இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மார்ச் 2ம் திகதி ஞாயிறு காலை 10மணி முதல் 12 மணிவரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 உள்ள St. John’s Norway Cemetery & Crematorium தகனம் செய்யப்படும். [2].--Kanags \உரையாடுக 10:47, 28 பெப்ரவரி 2014 (UTC)
பகிரப்பட்ட ஓர் இரங்கல்
[தொகு]பயனர்:பாலச்சந்திரன் 2007 பெப்ரவரியில் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தார். இவர் தொகுத்த முதல் கட்டுரை "இலங்கை வானொலி நாடகத்துறை" ஆகும். தமிழ் விக்கியில் இவர் 136 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1542 தொகுப்புகளைச் செய்துள்ளார். இவர் கடைசியாக "தெய்வம் தந்த வீடு" எனும் கட்டுரையில் தொகுப்பு ஒன்றினை சனவரி 8, 2013 அன்று செய்துள்ளார். இவரது கட்டுரைகள் பெரும்பாலனவை இலங்கை மற்றும் கனடிய வானொலித்துறை, திரைப்படத்துறை, நாடகத்துறை, ஈழத்துக் கலைஞர்கள், கரவெட்டி ஆகியன பற்றியவை ஆகும். அவர் விக்கி உரையாடல்களில் கலந்து கொண்டார். விக்கியை எப்படிப் பயன்படுத்துவது, எப்படிப் பங்களிப்பது என்று விரிவாகக் கற்றுக் கொண்டார். தனது பேச்சுப் பக்கத்தில் "என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கே. எஸ். பாலச்சந்திரன் ஒரு முன்னோடித் தமிழ் விக்கியர். இவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை விக்கிச் சமூகம் தெரிவித்துக் கொள்கிறது.
கே. எஸ். பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற நாடக, நகைச்சுவை, திரைப்படக் கலைஞர் ஆவார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த பாலச்சந்திரன் 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 2007 முதல் 2013 வரை ஈழத்துக் கலைஞர்கள், ஒலிபரப்புக் கலை, நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதினார். நா. சோமகாந்தன், சுப்பு ஆறுமுகம், அ. பாலமனோகரன், ஏரம்பு சுப்பையா, இலங்கை வானொலி நாடகத்துறை, 1999 (திரைப்படம்), நான் உங்கள் தோழன், உடப்பு, கரவெட்டி ஆகிய கட்டுரைகள் இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.
- நன்றி நற்கீரன். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிரார்த்திப்போம். நீங்கள் நேரில் சென்றிருந்தீர்களா?--Kanags \உரையாடுக 20:43, 1 மார்ச் 2014 (UTC)
- ஆமாம் சென்று இருந்தேன். எமது இரங்கலும் பகிரப்பட்டதாக அறிகிறேன். அவரது ஒரு சில நகைச்சுவை நிகழ்ச்��ிகளைக் கேட்டு மிகவும் ரசித்து இருக்கிறேன். இங்கு வந்தது அவரிடமே பொதிந்து இரு��்த ஈழத்து கலைகள், கலைஞர்கள் பற்றிய அறிவை பகிர்ந்தது அவரது பரந்த நோக்கை தெரியவைக்கிறது. ஒரு தலைமுறை தமது பணியை முடித்துக் கொண்டது போல் கனக்கிறது. --Natkeeran (பேச்சு) 10:24, 2 மார்ச் 2014 (UTC)
தொகுக்கப்படுகிறது....
[தொகு]வார்ப்புருக்கள் முறையே {{In use}}, {{Under construction}} காலவரையின்றி கட்டுரைகளில் பாவிக்கப்படுகின்றன. ஆ.வி.யில் அவ்வார்ப்புருக்களுக்கு முறையே 2 மணித்தியாலங்களும், 7 நாட்களும் கொடுக்கப்படுகின்றன. அவ்வாறே இங்கும் நடைமுறைப்படுத்துவது அவசியம். பல கட்டுரைகள் பல மாதங்களாக அவ்வார்ப்புருக்களுடன் காணப்படுகின்றன. துப்புரவுப் பணிகளிக்கும் மேலதிக தொகுத்தலுக்கும் இவை இடையூறாகவும் இருப்பதால் இங்கும் 2 மணித்தியாலங்கள், 7 நாட்கள் கால அவகாசத்தின்படி செயற்படலாம். அவ்வார்ப்புருக்களின் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். --AntonTalk 07:17, 28 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம் இந்தக் காலக்கெடுவை தானியக்கமாகச் செய்யவியலுமா ? --மணியன் (பேச்சு) 07:38, 28 பெப்ரவரி 2014 (UTC)
- ஆ.வி.யில் ஓர் தானியங்கியுள்ளது. --AntonTalk 07:46, 28 பெப்ரவரி 2014 (UTC)
- விருப்பம் ---- Mohamed ijazz
தானியங்கி வைத்துத்தான் செய்ய வேண்டுமா? முதன்மை கட்டுரைப் பக்கங்களில் மட்டும் தானாக வார்ப்புரு போவிடும் படி செய்ய முடியாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:39, 28 பெப்ரவரி 2014 (UTC)
- தானாக செய்ய இயலாது. பக்கத்தை தொகுத்தால் மட்டுமே இயலும். ஆங்கில விக்கியில் உள்ளது போல அரை-தானியங்கி மூலம் செய்யலாம். எனக்கு C# தெரியாது, PHPஇல் செய்தால் பலராலும் பயன்படுத்த இயலாது. C#இல் AWBக்கு moduleஆக இதனை செய்தால் பலராலும் பயன்படுத்த இயலும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:43, 28 பெப்ரவரி 2014 (UTC)
- தானியக்கத்தில் இந்தப்பணியைத் தானாகச்செய்யலாம். குறிப்பிட்ட நாட்கள்/நேரம் கடந்த வார்ப்புருவை அப்பக்கத்திலிருந்து நீக்கிவிடலாமா? எதேனும் மாற்றுச் சோதனை சேர்க்கவேண்டுமா? இப்போது சோதனைக்காக 7நாள்பட்ட In use வார்ப்புருப் பக்கங்கள் பயனர்:NeechalBOTஆல் துப்புறவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமா? ஆலோசனை தாருங்கள்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:43, 1 மார்ச் 2014 (UTC)
- நன்றி, நீச்சல்காரன் ! பின்வருமாறு இருப்பது பொருத்தமாகவிருக்கும்.
வார்ப்புரு | நீக்கப்பட வேண்டிய நாட்கள்/நேரம் |
---|---|
{{Under construction}} / {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} | 7 நாட்கள் |
{{In use}} / {{தொகுக்கப்படுகிறது}} | 2 மணித்தியாலங்கள் |
--AntonTalk 04:08, 1 மார்ச் 2014 (UTC)
- இங்கே தொடரலாம்--நீச்சல்காரன் (பேச்சு) 06:45, 1 மார்ச் 2014 (UTC)
Call for project ideas: funding is available for community experiments
[தொகு]I apologize if this message is not in your language. Please help translate it.
Do you have an idea for a project that could improve your community? Individual Engagement Grants from the Wikimedia Foundation help support individuals and small teams to organize experiments for 6 months. You can get funding to try out your idea for online community organizing, outreach, tool-building, or research to help make விக்கிப்பீடியா better. In March, we’re looking for new project proposals.
Examples of past Individual Engagement Grant projects:
- Organizing social media for Chinese Wikipedia ($350 for materials)
- Improving gadgets for Visual Editor ($4500 for developers)
- Coordinating access to reliable sources for Wikipedians ($7500 for project management, consultants and materials)
- Building community and strategy for Wikisource (€10000 for organizing and travel)
Proposals are due by 31 March 2014. There are a number of ways to get involved!
Hope to have your participation,
--Siko Bouterse, Head of Individual Engagement Grants, Wikimedia Foundation 19:44, 28 பெப்ரவரி 2014 (UTC)
Stewards தேர்தலில் வென்றுள்ள சண்முகத்துக்கு வாழ்த்துகள்
[தொகு]Stewards தேர்தலில் வென்றுள்ள சண்முகத்துக்கு வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 11:21, 1 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள் சண்முகம்!!!--நந்தகுமார் (பேச்சு) 11:25, 1 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள் சண்முகம் !!--மணியன் (பேச்சு) 12:08, 1 மார்ச் 2014 (UTC)
- விருப்பம் வாக்களித்த போதே வாழ்த்துகளையும் சொல்லிவிட்டேனே!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:07, 1 மார்ச் 2014 (UTC)
- சண்முகத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 14:32, 1 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள் சண்முகம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:06, 1 மார்ச் 2014 (UTC)
விருப்பம் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகிறேன்--குறும்பன் (பேச்சு) 16:48, 1 மார்ச் 2014 (UTC)
- விருப்பம் வாழ்த்துகள் அண்ணா-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:49, 1 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள் சண்முகம்.--Kanags \உரையாடுக 20:45, 1 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள்,வாழ்த்துகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:47, 3 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துகள் சண்முகம்! Treat...?! எங்க, எப்பப் போகலாம்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:56, 3 மார்ச் 2014 (UTC)
- அனைவருக்கும் நன்றி :) ..@மா. செல்வசிவகுருநாதன் treat தானே வெச்சுடலாம் :) --சண்முகம்ப7 (பேச்சு) 14:51, 3 மார்ச் 2014 (UTC)
சென்னையில் திடீர் குபீர் விக்கிப்பீடியர் சந்திப்பு
[தொகு]நேரம் - மார்ச்சு 2, மாலை 5 மணி. இடம்: தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம். முகவரிக்கு http://fsftn.org/contact/ பாருங்கள். அந்த இடத்தில் செல்பேசி சேவைகள் ஒழுங்காக வேலை செய்யாது என்பதால் முகவரியில் தந்துள்ள வீட்டுத் தொலைப்பேசி எண்ணைக் குறித்துக் கொண்டு வாருங்கள். வழி தேட உதவும். இது நட்பு முறை சந்திப்பு / அரட்டை தான். எனவே, வழமையான பயிற்சி எதிர்பார்ப்புகளுடன் வர வேண்டாம். நான் கோவையில் இருப்பதால் கலந்து கொள்ள இயலாது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். சிறப்பு விருந்தினராக அடிக்கடி காணாமல் போகும் மூத்த விக்கிப்பீடியரும் இலங்கையில் இருந்து வந்திருப்பவரும் ஆன மு. மயூரன் கலந்து கொள்வார் :) --இரவி (பேச்சு) 11:23, 1 மார்ச் 2014 (UTC)
தயவு செய்து இப்படிமத்தை தமிழாக்கம் செய்து தருவீர்களா?
[தொகு]இப்படிமத்தை புரதக் கட்டமைப்பு எனும் கட்டுரையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. இப்படிமத்தை விளக்க கட்டுரையின் இறுதியில் கலைச் சொல் விளக்கம் கொடுக்க வேண்டியும் இருந்தது. இப்படிமத்தைத் தமிழாக்கம் செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.--G.Kiruthikan (பேச்சு) 15:25, 1 மார்ச் 2014 (UTC)
- கிருத்திகன், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள் என்ற பக்கத்தில் உங்கள் தேவையைக் குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 20:50, 1 மார்ச் 2014 (UTC)
நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு
[தொகு]தேனி சுப்பிரமணி மீதான நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை பயனர் வாக்கெடுப்பு நிலையை எட்டியுள்ளது. மேலும் விவரங்களுக்கு, பார்க்க: வாக்கெடுப்புப் பக்கம்--இரவி (பேச்சு) 06:02, 3 மார்ச் 2014 (UTC)
Women's History Month, India-2014 - Increasing contribution by women and on women
[தொகு]Excuse : Please excuse my English posting . Still my typing speed in Tamil has not increased .
This is to bring to notice to the community of the events happening on Women's History month . There are many valid citicisms that both content on women and content by women are less in wikipedia on the whole . I think that , the situation would be same in Tamil Wikipedia too. This is a proposal for increasing both of it this month . From Free Software Foundation Tamil Nadu , we did 1 wiki-editathons in month of March and then followed it up with 2 editathon sessions.
This year also from FSFTN we have planned to conduct series of edit-a-thons But ,unlike last year , we want to concentrate on both English and Tamil Wikipedia . Requesting for community inputs on the same . --Commons sibi (பேச்சு) 15:13, 3 மார்ச் 2014 (UTC)
கருத்து தேவை
[தொகு]விக்கிப்பீடியா பேச்சு:வணிக இணைப்புகள் கண்காணிப்பு--இரவி (பேச்சு) 07:28, 5 மார்ச் 2014 (UTC)
Article on Malaysia Airlines Flight 370 requested
[தொகு]Does anyone want to start a Tamil article on en:Malaysia Airlines Flight 370? Tamil is one of the languages spoken in Malaysia, and this was a Malaysian aircraft. Thanks WhisperToMe (பேச்சு) 15:44, 8 மார்ச் 2014 (UTC)
- ஆயிற்று மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:25, 8 மார்ச் 2014 (UTC)
- Thank you :) WhisperToMe (பேச்சு) 00:59, 9 மார்ச் 2014 (UTC)