உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு05

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்சொற்களை தமிழாக்கம் அல்லது ஒலிபெயர்த்தல் செய்யும்பொழுது ஏற்படும் தவறு

[தொகு]

வார்த்தை இடைவெளியால் (space) ஏற்படும் தவறு: எடுத்துக்காட்டாக நியூயார்க் என்ற தலைப்பில் கட்டுரை இருந்தும் பல கட்டுரைகளில் காணப்படும் சுட்டிகள் 'நியூ யோர்க் நகரம்', 'நியூ யோர்க்', 'நியூயோர்க்' எனக்குறிக்கின்றன.

ஒற்றினால் ஏற்படும் தவறு: சிகாகோ என்ற தலைப்பில் கட்டுரை இருந்தும் பல கட்டுரைகளில் காணப்படும் சுட்டிகள் 'சிக்காகோ' என்றுள்ளபடியால் சரியான பக்கத்தை சுட்டிக்காட்டமுடியவில்லை.

இது போன்ற தவறு நிகழாமலிருக்க கட்டுரை எழுதமுற்படும் முன்னர் கட்டுரைத்தலைப்பையோ அல்லது தலைப்பின் பகுதியையோ ர/ற, ன/ண, ல/ள,வார்த்தை இடைவெளி (space),ஒற்று மாறுதலுக்குட்படுத்தி நன்கு தேடிப்பார்த்தபின் புதிய தலைப்பில் கட்டுரையை தொடங்கலாம்.

சச்சின் டெண்டுல்கர் பற்றிய கட்டுரையை எழுதியபொழுது, "சச்சின்" என்ற வார்த்தையை தேடிப்பார்க்காமல் "சச்சின் டென்டுல்கர்" என்னும் தலைப்பில் எழுத ஆரம்பித்துவிட்டேன். பின்னர் ஒரு அன்பர் சுட்டிக்காட்டியபின் "சச்சின் டென்டுல்கர்" என்ற (தவறான) கட்டுரை நீக்கம் செய்யப்பட்டது. இந்த அனுபவத்திலேயே மேற்சொன்ன எனது அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன். - விஜயஷண்முகம் 20:26, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

அதிகம் தேடி மினக்கெடுவதை விட அகரவரிசைப் பட்டியலுக்குச் சென்றால் இலகுவாயிருக்கும் என்று நினைக்கிறேன். --கோபி 20:47, 24 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
எனது கருத்துப் படி கூடுதல் பொருத்தமானதை கட்டுரைத் தலைப்பிலும் ஏனையவற்றை வழிமாற்றுப் பக்கமாகவும் உருவாக்கலாம். சிக்காகோவிற்கு வழிமாற்றுப்பக்கமொன்றை உருவாக்கி சிகாகோ எனினும் வழிமாற்றுப் பக்கங்கள் பல இப்போது அழிக்கப்பட்டுவருக்கின்றது இவ்வாறு உருவாக்கப் பட்டாலும் பின்னர் இவ்வழிபாட்டுப் பக்கமும் அழிக்கப்பட்டிவிடலாம். வழிமாற்றுப் பக்கங்கள் பற்றிய தெளிவான கொள்ளை ஒன்று மிக அவசியம். நாங்கள் பழைய புத்தகம் போன்று அகரவரிசைப்படி வருவதா? அல்லது கூகிள்போன்ற தேடுபொறி மூலம் கட்டுரையை அடைகின்றோமா என்பதிலேயே தங்கியுள்ளது. அகரவரிசை ஏற்கனெவேயுள்ள பயனர்களுக்குப் பயனுள்ளதாக அமையலாம் உலகெங்குமுள்ள பயனர்களுக்கு கூகிளே உதவுமென்று நினைக்கின்றேன். அகரவரிசை பாவிப்பதில் எனக்குப் பெரும்பாலும் உடன்பாடு இல்லை நான் அலுவலகக் கணினியிலும் கூகிள் டெஸ்டாப் தேடல்களைப் பாவிக்கின்றேன் இவற்றால் வேகமாக இயங்கமுடியும் என்பதுதான் நான் கண்ட அனுபவ அறிவு.--Umapathy 18:39, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

வழிமாற்றுப் பக்கங்கள் பயனுள்ளவை அதிக வழிமாற்றுப் பக்கங்கள் இருப்பது ஒன்றும் பிழையான விடயம் அல்ல. ஆங்கில விக்கிபீடியாவில் கூட நிறைய வழிமாற்றுப் பக்கங்கள் உள்ளன. Maya civilization என்ற கட்டுரைக்கு Mayan civilization, Mayan Civilization, Maya civilisation, Mayan civilisation போன்ற பல வழிமாற்றுப் பக்கங்கள் உண்டு. இது பிழையல்ல. சிக்காகோ என்று எழுதுபவர்களும், சிகாகோ என்று எழுதுபவர்களும் இருக்கிறார்கள். எனவே எந்தச் சொல்லை இட்டுத் தேடினாலும் கட்டுரை கிடைக்ககூடியதாக இருக்கவேண்டும். பெயர் மாற்றப்பட்ட கட்டுரைகளுக்குரிய வழிமாற்றிகள் அழிக்கப்பட்டதைத்தான் நான் அவதானித்தேன். சிக்காகோ போன்றவை அழிக்கப்பட்டிருந்தால் அது தவறு. வழிமாற்றிகளை அழிப்பவர்கள் இதுபற்றிக் கவனத்தில் எடுக்கவும். என்னைப் பொறுத்தவரை இன்னும் நிறைய வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கவேண்டும் என்றுதான் சொல்வேன். Mayooranathan 20:38, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

என் கருத்தும் மயூரநாதனுடையதே. இதில் உள்ள இடர்ப்பாடுகள் அறியேன், ஆனால் வேண்டிய அளவு வழிமாற்றம் இருப்பது நல்லது. --C.R.Selvakumar 20:47, 26 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

மேற்கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுக்கள் சில தவறான புரிதல்களை ஏற்படுத்தவல்லவை. சிக்காகோ பக்கம் உருவாக்கப்பட்டது - நவம்பர் 2005; அழிக்கப்பட்டது - ஜனவரி 2006; நீக்கல் காரணம் - உள்ளடக்கம் விக்கிநூல்களுக்கு நகர்த்தப்பட்டது. சிகாகோ பக்கம் உருவாக்கப்பட்டது - மார்ச் 2006. ஆக, பொருத்தமான காரணங்களுக்குத் தான் சிக்காகோ பக்கம் அழிக்கப்பட்டதே தவிர தேவையற்ற வழிமாற்று என்ற நோக்கில் அல்ல. ஆக, புதிதாக உருவாக்கப்படும் நியாயமான வழிமாற்றுகளும் நாளை அழிக்கப்படக்கூடும் என்ற அச்சம் தேவையற்றது. உரையாடல் பக்கங்களில் தேவைப்படும் வழிமாற்றுகள் குறித்து தெரிவிக்கலாம் . தேவையற்ற வழிமாற்றுகளை நீக்கச் சொல்லியும் கூறலாம். தேவையான வழிமாற்று நீக்கப்பட்டால் அதை மீட்கச் சொல்லியும் கோரலாம். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை துப்புரவு செய்யும்போது, ஓரிரு வழிமாற்றுகளை தவறுதலாக நீக்கவதும், இணைப்புகள் முறிவதும் இயல்புதான். மேலதிகப் பயனர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதன் மூலமே இக்கவனக்குறைகளை போக்க முடியும். தற்போதைய நிலையில், மிக குறைவான பயனர்களை பொறுமையுடன் துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் விக்கி நடைமுறைகளை நன்கு அறிந்தவர்கள் தாம்.
அளவுக்கு அதிகமான வழிமாற்றுகளை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அகர வரிசைப் பட்டியலின் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு கட்டுரை இருக்கிறதா என்று பங்களிப்பாளர்கள் எளிதில் அறிய உதவுவது இது. இயன்றவரை இதை துல்லியமாக வைத்திருத்தல் அவசியம். எண்ணற்ற வழிமாற்றுகளை குவித்து வைத்தால், கட்டுரை எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் அளவுக்கு அதிகமான வழிமாற்றுகள் சேருவது பட்டியலை பயன்படுத்துபவர்களுக்கு அலுப்பூட்டும். உள்ளடக்கம் இல்லாத வெறும் வழிமாற்றுப் பக்கத்துக்கு கூகுள் எந்த அளவு முன்னுரிமை அளிக்கிறது என்பது கேள்விக்குறியது. இது குறித்த எடுத்துக்காட்டுக்கள் இருந்தால் தெரிவிக்கலாம். அனைத்து மாற்று எழுத்துக்கூட்டல்கள், தலைப்புகளுக்கும் வழிமாற்றுகள் உருவாக்குவதை விட இது போன்ற மாற்று வழக்குக் குறிப்புகளை அந்தந்ந கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களின் துவக்கத்தில் இடலாம். இதன் மூலம் கூகுளும் இனம் காணும். விக்கிபீடியாவில் தேடுபவர்களுக்கும் கட்டுரை சிக்கும். தவிர, எந்தெந்த எழுத்துக்கூட்டல் வழக்குகள் எங்கெங்கு பயன்படுகின்றன, எவை சரி என்பது போன்ற கூடுதல் குறிப்புகளையும் தரலாம். மாற்று எழுத்துக்கூட்டல்களுக்கும் கனிசமான கூகுள் தேடல் முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் மட்டும், அதை பிரபலமான வழக்காக கொண்டு வழிமாற்று உருவாக்கலாம். ஏனைய, அனைத்து வழக்குகளுக்கும் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடலா��். எப்படியும் ஒவ்வொரு கட்டுரைக்கும் என்றாவது ஒரு நாள் பேச்சுப் பக்கம் உருவாக்கப்படும் வாய்ப்பு உண்டு. எனவே, தேவையற்ற வழிமாற்றுப் பக்கங்களை விட இப்பேச்சுப் பக்க குறிப்புகள் பயனுள்ளவை. கூகுளும் வெறும் வழிமாற்றுப் பக்கங்களைவிட உள்ளடக்கம் அதிகமுள்ள இப்பேச்சுப் பக்கங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர, ஒரு முதன்மை தலைப்பை தெரிவு செய்த பிறகு அதே எழுத்துக்கூட்டலை அனைத்து விக்கிபீடியா பக்கங்களிலும் பின்பற்றி consistency கொண்டு வருவது தான் சிறந்தது. எனவே, மாற்று எழுத்துக்கூட்டல்கள் தரப்படும் பக்கங்களிலும் முறிந்த சிகப்பு இணைப்புகளை சரி செய்ய புது வழிமாற்றுகளை உருவாக்காமல் அவற்றை எழுத்து திருத்துதல் சிறந்த வழி. வழிமாற்று உருவாக்குவதை விட எழுத்து திருத்தம் செய்தல் எளியது தானே. எடுத்துக்காட்டுக்கு, ரொறன்ரோ என்ற இலங்கை வழக்கை முதன்மைத் தலைப்புக் கட்டுரையாக கொண்டால், தமிழ்நாட்டு வழுக்குக்கு டொரண்ட்டோ என்று ஒரு வழிமாற்று உருவாக்கலாம். ஏனைய எழுத்துக்கூட்டல்களை பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டால் போதுமானது. சச்சின் டெண்டுல்கர் என்பது மட்டுமே பிரபலமான வழக்கு. சச்சின் டென்டுல்கர், சச்சிண் டென்டுல்கர் போன்ற பிற வழக்குகளுக்கு வழிமாற்றுப் பக்கங்கள் தேவையில்லை. பேச்சுப் பக்கத்தில் ஒரு வசதிக்காக குறிப்பிட்டு வைத்தால் போதுமானது.
ஆங்கில வழிமாற்றுப் பக்கங்களை சோதனை அளவில் சிறிய முறையில் கூகுள் எர்த்துக்காக உருவாக்கலாம் என்று முன்னர் உமாபதியின் பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தேன். ஆனால், அதை விட எளிய மாற்று வழி ஒன்று தோன்றுகிறது. சிறிய அளவில் என்றாலும் பெரிய அளவில் என்றாலும் பக்கத் தலைப்புகள் ஆங்கிலத்தில் இருப்பதும், அவை அகர வரிசைப்பட்டியலில் முதல் இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதும், அவை அனைத்தும் வழிமாற்றுகளாய் இருப்பதும் நல்ல தோற்றத்தை தராது. மாற்றாக, இவ்வழிமாற்றுகளை ஒரு பயனர் பக்கத்தின் துணைப்பக்கங்களாக உருவாக்கலாம். தவிர, இன்னொரு மென்பொருளில் தமிழ் இணைப்புகள் தர முடியாது என்ற குறைக்காக நம் தளத்தில் மாற்றங்கள் செய்வதும் தேவையான நடவடிக்கையா என்பது தெரியவில்லை. உமாபதி, சோதனை அளவில் சிறிதாக இதை செயற்படுத்தினாலும், இது போல் கோரும் பிற பயனர்களுக்கும் மறுப்பு தெரிவிக்க முடியாது. கூகுள் எர்த் போக, பிற சில தளங்களிலிருந்து தமிழ் இணைப்புகள் தருவதில் சிக்கல் அறிந்த பிரச்சினை தான். இவற்றை தீர்க்கும் முகமாக ஓர் ஆலோசனையை முன்வைக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, சோதனை நோக்கில் user:redirects என்ற பயனர் கணக்கை துவக்கியுள்ளேன். தேவையான வழிமாற்றுக்களை இதன் துணைப்பக்கங்களாக உருவாக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, சென்னை என்ற கட்டுரைக்கான ஆங்கில வழிமாற்றுப் பக்கத்தை user:redirects/chennai என்று உருவாக்கலாம். இதன் மூலம் url ஆங்கிலத்தில் இருப்பதோடு கட்டுரைப் பெயர்வெளியிலோ, அகர வரிசைப் பட்டியலிலோ நெரிசல் ஏற்படுத்தாமல் இருக்கும். நம் பிரச்சினையையும் தீர்த்து வைக்கும். இது போல் எத்தனை துணைப்பக்கங்களை வேண்டுமானால் உருவாக்கிக்கொள்ளலாம். இது போன்ற அனைத்து வழிமாற்றுக்களையும் ஒரே பயனர்பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளவும் முடியும். இந்த ஆலோசனை குறித்த உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்--ரவி 23:38, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபியின் பதில்

[தொகு]

மயூரநாதனுடன் உடன்படுகிறேன். ஆனால் Maya civilization என்பதற்கு Moyo civilization என்று நிச்சயம் ஒரு வழிமாற்றி இருக்க வாய்ப்பில்லை. எனது நிலைப்பாடு அதுதான். அகரவரிசைப் பட்டியலின் அவசியம் சச்சின் டென்டுல்கர் என்ற கட்டுரையை அழகாக உருவாக்கிய பின்னர் அது நீக்கப்பட்டபோது விளங்கியிருக்கும். ஆங்கில விக்கிபீடியா பாவிக்கும்போது சில பெயர்களுக்குரிய கட்டுரைகளை அகரவரிசையூடாகச் சென்றடைந்த அனுபவம் எனக்குண்டு. சுருக்கமாகச் சொல்வதானால் திருக்கோணமலை கட்டுரைக்கு திருகோணமலை என்ற வழிமாற்றி அவசியமானது; திருகொணமலை என ஒரு வழிமாற்றி இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்பதே என் அணுகுமுறையாகும். மாற்று எழுத்துக் கூட்டலுக்கும் எழுத்துப் பிழைக்கும் வித்தியாசமுண்டு.

உமாபதி, நான் பொழுது போகாமல் வழிமாற்றிகளை நீக்கிக் கொண்டிருக்கவில்லை. எழுத்துப்பிழை காரணமாக நகர்த்தப்பட்ட பின்னர் நீக்காமல் விடப்பட்ட பக்கங்களையே நீக்கி வருகிறேன். தவி ஆரம்ப நிலையிலிருப்பதால் இப்பொழுது செய்வது இலகுவானது. மிகப்பெரிதாக வளர்ந்த பின்னர் செய்ய முடியாது.

தயவுசெய்து நிர்வாகிகள் அண்மைய மாற்றங்களைத் தொடர்ச்சியாக அவதானித்து நகர்த்தற் பதிவுகளின் பின்னர் அவசியமற்ற வழிமாற்றிகளை நீக்கிவருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்து வந்தாலே போதுமானது. நன்றி. கோபி 01:39, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி நீங்கள் பலநூற்றூக் கணக்கான விக்கிபீடியா கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கியிருக்கின்றீர்கள். தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு அளவிட முடியாதாதது. திருகோணமலையைத் திருக்கோணமலை என்றவாறே சிங்களத்தில் அழைக்கின்றனர். தமிழிலும் அவ்வாறே இலககணப்படி வரும் என்றார்கள் எனக்கும் ஆட்சேபனை இல்லை. என்னுடைய தமிழ் இலக்கண அறிவு சுமாரானதே பல சமயங்களி���் எழுத்துப் பிழைகளையும் விட்டுள்ளேன் அவை நீங்கள் உட்பட பலவிக்கிப் பீடியர்கள் கட்டுரைகளை மேம்படுத்தி வருவதையிட்டு மகிழ்சி. எழுத்து பிழையான வழிமாற்றங்களை நீக்குவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சிலசமயங்களில் ஒலிபெயர்ப்பில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. இவற்றைச் சீர்செய்ய வழிமாற்றிகள் உதவும் என்றே நினைக்கின்றேன். எடுத்துக் காட்டாக பயர்பாக்ஸ் ஏனெனில் இதே வகையிலேயே அவர்கள் கூகிள் தேடுபொறியிலும் தேடவாய்ப்புள்ளது. கூகிள்பீடியா விலும் தேடக்கூடும். நான் கூடுதலான பயன்ர்களை விக்கிபீடியாவில் ஈர்க்கவேண்டும் என்பதையே விரும்புகின்றேன். கூகிள் தேடுபொறியோ கூகிள் ஏர்த்தொ எந்த மென்பொருளில் இருந்தும் இணைப்பு விக்கிபீடியாவிற்கு வரவேண்டும் எனபதே என்விருப்பம். --Umapathy 03:32, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

Umapathy, I am sorry if my words had hurt you. Plz don't take anything personally. I just conveyed my view. I didn't mean to hurt you or anyone else. --கோபி 04:16, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

Gobi, There is absolutely no dispute between me and you all I need to clarify few things like redirection. You have put enormous effort in building the Tamil encyclopedia. From my experience I have seen bots are modifying the interwiki links. Why can’t we incorporate bots in Tamil wikipedia. That will reduce the time we are speding on modifying the links manually let me give an example. Until recently I was doing some manual work on GIS to put map that consumed days to finish the map. Few days back I found a short cut for the doing the same work with in an hour to plote the positions on the map. I found the Bengali langue has more than 10, 000 articles the first Indian language to reach the 10 ,000 articles hurdle. Why can’t we concentrate on making more articles also make use of bots if possible?
கோபி உங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது. அண்மையில் வங்காள விக்கிப்பீடியாவானது 10, 000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தாண்டியுள்ளது. நாங்களும் கூடுதலாகக் கட்டுரைகளை உருhttp://ta.wikipedia.org/w/index.php?title=Wikipedia:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF&action=edit&section=32வாக்குவதில் கவனம் செலுத்தி விட்டுத் தானியங்கிகளைப் பயன்படுத்தி தேவையற்ற இணைப்புக்களை நீக்கிவிடலாமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து. --Umapathy 08:56, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கட்டுரை எண்ணிக்கை முதலியன

[தொகு]

திராவிட மொழியாகிய தெலுங்குதான் 10,000ஐ முதலில் தாண்டி இன்று 15,600+ கட்டுரைகளுடன் 36 ஆவது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் தெலுங்கே முதல், அடுத்தது வங்காள மொழி, மராத்தி, பின் தமிழ். ஆனால் கட்டுரை எண்ணிக்கையிலே தமிழ் இன்னும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. கன்னடமும் பிற இந்திய மொழிகளும் விரைந்து முன்னேறி வருகிறார்கள். நாம் இன்னும் ஒற்றுமையுடனும், கூடிய உழைப்புடனும் கட்டுரை ஆக்கத்தில் முனைய வேண்டும். தானியங்கி வழி எண்ணிக்கையைக் கூட்டுவது வேறு, பல அடிப்படையான தலைப்புகளில் பயனுடைய கருத்துக்களைத்தாங்கி வரும் கட்டுரைகள் வேறு. த.வி. தமிழ் மக்களுக்கு எவ்வாறு பயன் தர வல்லது என்பதே குறிக்கோளாக இருத்தல் வேண்டும். 10,000 கட்டுரைகள் ஊர்ப்பெயர்களும் தெருப்பெயர்களுமாக இருப்பதால் தவறில்லை, பயனும் உண்டு ஆனால் அது பரந்துபட்ட வளர்ச்சி இல்லை. 9,000க்கும் மேலான எண்ணிக்கையில் பறவைகளின் இனங்களிருந்தால் அதில் 1,000க்காவது தமிழில் செய்திகள் இருக்க வேண்டும், இப்படி ஒவ்வொரு துறையிலும் உள்ள கருத்துக்களை தமிழில் ஆக்கி வளர்க்க வேண்டும். --C.R.Selvakumar 13:36, 30 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

மேலும் எத்தனை வருகைகள் ஒரு மொழி விக்கிக்கு என்னும் கணக்கிலும் தமிழ் 3ஆம் இடத்திலே உள்ளது. அக்டோபர் மாதத்திற்கு தமிழ் 178, தெலுங்கு 31, கன்னடா 42, இந்தி 331, மராத்தி 50, உருது 221, என்று போகின்றது. இஙகே பார்க்கவும்--C.R.Selvakumar 13:52, 30 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செல்வா தகவலுக்கு நன்றி, ஆனால் நான் பயர்பாக்ஸ் உலாவி மூலம பார்த்தபோது அவை 2004 ஆண்டுவரையான தகவலையே காட்டுகின்றன. கட்டுரை எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கவேண்டும் அத்துடன் சிறந்த கட்டுரைகளை தேர்வுசெய்து சிறப்புக் கட்டுரைகளாக நியமனம் செய்யவேண்டும். நானும் என்னால் இயன்றவை கணினி மற்றும் ஏனைய துறைகளில் கட்டுரை எழுதமுயற்சி செய்கின்றேன். --Umapathy 14:40, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

செல்வா, உமாபதி - வருகை கணக்கை எடுக்கும் வழக்கத்தை விக்கிமீடியா புள்ளவிவரக் கருவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே நிறுத்திக்கொண்டுவிட்டது. ஆனால், அப்படி கணக்கு எடுக்கப்பட்டாலும் தமிழ் முன்னணியில் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் உள்ள முதல் 100 பக்க விவரங்களை பார்க்கும்போது திருப்திகரமாகவே உள்ளது. ஒரு சிலரை தவிர்த்து தற்போதைய பங்களிப்பாளர்கள் அனவைரும் பல துறை சார்ந்தே கட்டுரைகள் உருவாக்கி வருவது அறிந்ததே. அத்தகையோர் எணணிக்கையும், அவர்களின் பங்களிப்பு நேரமும், தள நிர்வாகச்சுமையும் அதிகமாக இருப்பதே தமிழ் விக்கிபீடியாவின் எண்ணிக்கை, பரப்பு வளர்ச்சியில் மித வேகத்துக்கு காரணம். மேலும் பயனர்கள் வர வர நிலைமை மாறும். --ரவி 15:50, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

தெலுங்கும் வங்காளமும் எப்படி இவ்வளவு வேகமாக முன்னேறுகின்றன என்பதை அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள். தானியங்கிகளாலா? ஒப்பீடுகளை விட்டுப் பார்த்தாலும் கூட 4500 போதாது. ஆயிரக்கணக்கில் மேலும் வேண்டும். ஒரு நான்கு, ஐந்து வரிகளாயினும் ஒரு படிமம், வெளி இணைப்புக்களுடன் கூடியதாக உருவாக்கினாற்கூடப் போதுமானது. நாம் ந்றைய உழைக்க வேண்டும். தமிழில் இணைய உள்ளடக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியவை நிறைய இருக்கின்றன. புதிய பயனர்கள் சிலரையாவது ஈர்க்க வேண்டியதும் அவசியமாகும். --கோபி 16:38, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆகஸ்ட் 2006 க்குரிய புள்ளிவிபரங்கள் வெளிவந்துள்ளன. இங்கே பார்க்கவும் Mayooranathan 16:49, 30 செப்டெம்பர் 2006 (UTC) தமிழில் இன்னும் கட்டுரைகள் நிறைய எழுத வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் மற்றவர்களைப் பார்த்துக் கட்டுரை எண்ணிக்கைக்காக நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. நல்ல தரமான கட்டுரைகளை உருவாக்குவதையே நோக்கமாகக் கொள்ளவேண்டும். தானியங்கிகளைப் பயன்படுத்துவதை நான் எதிர்க்கவில்லை. ஆனாலும் அதிகம் பயனில்லாத கட்டுரைகளை எண்ணிக்கைக்காக உருவாக்குவது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். குறைந்த எண்ணிக்கையான பயனர்களை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கில் குறுங்கட்டுரைகளை எழுதிவிட்டுப் பின்னர் அவற்றை விரிவாக்குவதற்குப் பல ஆண்டுகள் எடுக்கக்கூடும். அதிக அளவில் பக்கங்களை உருவாக்கும் சில விக்கிபீடியாக்களுக்குச் சென்று பார்த்தேன். கட்டுரைத் தலைப்பு இருக்கிறது. துணைத்தலைப்புக்கள், துணைத்துணைத் தலைப்புக்கள் எல்லாம் இருக்கின்றன. தானாக உருவாகும் உள்ளடக்கப் பட்டியலும் உண்டு. ஆனால் கட்டுரைக்கென ஒரேயொரு சொல்மட்டும் உண்டு. இந்த ஒரு சொல் தவிர அப்பக்கத்திலுள்ளவை இது போன்ற நூற்றுக்கணக்கான பக்கங்களுக்குப் பொருந்தலாம். இவ்வாறு புள்ளிவிபரங்களுக்காகக் கட்டுரைகளின் எண்னிக்கைகளை அதிகரித்து விடலாம். ஆனால் இவற்றைப் பயனுள்ள கட்டுரைகள் ஆக்குவது எப்போது?[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவில் நாங்கள் இன்னும் சரியான திசையில் செல்கிறோம் என்பதே எனது கருத்து. ஆகஸ்ட் 2006 க்குரிய புள்ளிவிபரங்களை அவதானித்தால் இது தெளிவாக விளங்கும். கீழே தரப்பட்டுள்ள, முனைப்பாக இயங்கிவரும் இந்திய மொழிகளுக்குரிய சில புள்ளிவிபரங்களைப் பாருங்கள்.

-- தமிழ் தெலுங்கு வங்காளம் மராட்டி கன்னடம் ஹிந்தி
பங்களிப்பவர்கள் 66 41 63 50 43 56
புதிய விக்கிபீடியர் 8 3 12 4 -- 4
இயங்குபவர்கள் 32 14 43 15 15 15
முனைப்புடன் இயங்குபவர்கள் 11 5 19 3 5 4
கட்டுரைகள் (வழமை) 4100 5100 6400 5200 3600 1700
கட்டுரைகள் (மாற்றுமுறை) 3700 3500 3100 1900 2800 998
பைட்ஸ்/கட்டுரை 4131 2238 1722 1415 2288 2781
0.5kb க்கு மேல் 59% 36% 26% 21% 37% 38%
2.0kb க்கு மேல் 17% 7% 5% 5% 6% 11%
தரவுத்தள அளவு 16M 11M 11M 7.1M 8M 4.7M
சொற்கள் 706k 628k 500k 370k 377k 287k
படிமங்கள் 2300 1800 1700 237 855 385

தமிழ் விக்கிபீடியா முன்னிலை வகிக்கும் புள்ளிவிபரங்கள் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளன. .Mayooranathan 17:09, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மயூரநாதன், நானும் தங்களுடைய கருத்துடையவன் தான். நீங்கள் காட்டியுள்ள இதே புள்ளி விவரத்தை நான் இங்கே முன்னர் குறிப்பிட்டிருந்தேன். கட்டுரை எண்ணிக்கை முதன்மை இல்லை. பயன் தான் முதன்மையானது. கருத்துப் பரட்சியும், கருத்து வளமும் தான் முக்கியம். இன்னும் நிறைய பயனர்கள் முன் வரவேண்டும், இன்னும் அடிப்படையான தலைப்புகளும் வகைகளும் வேண்டும். நீங்கள் கூறியது போல வளமில்லாமல் கட்டுரை எண்ணிக்கைகள் சில விக்கிகளில் கூட்டி வருகிறார்கள். கோபி இங்கே கூறியுள்ளதுதான் என் கருத்தும். நேரம் கிடைப்பதுதான் மிக அரிதாக இருக்கின்றது. பல்வேறு கோணங்களில் நாம் கட்டுரைகள் ஆக்க வேண்டும். பெரும்பாலானவை கோபி சொல்வது போல் இருந்தாலும் போதும். அதே நேரத்தில் சிலவேனும் விரிவாக இருக்க வேண்டும். பல ஆங்கில மற்றும் பிற விக்கிக் கட்டுரைகளைக்காட்டிலும் ஒரு சிறிதளவாயினும் சிறந்ததாக இருக்க வேண்டும். அண்மையில் டூக்கான் பறவை பற்றி ஒரு கட்டுரை தொடங்கினேன் அதையும் ஆங்கில en:Toucan கட்டுரையும் ஒப்பிட்டுப் பார்த்தீர்களானால், அதில் இல்லாத பல செய்திகளும் த.வியில் இருப்பதைப் பார்ப்பீர்கள். அவை நான் கண்டுபிடித்ததல்ல. பிற உசாத்துணை ஊடகங்களில் இருந்து திரட்டியதுதான். எனினும், ஒரு சிறிதளவாயினும் ஆங்கில விக்கியை விட அதிக செய்திகள் தாங்கியுள்ளதாக இருப்பதைச் சுட்டிக் காட்டினேன். வேறு பல கட்டுரைகளுக்கு இணையான கட்டுரைகள் ஆங்கில விக்கியிலும் காண இயலாது (உங்கள் யாழ் உணவுக் கட்டுரை போல). தமிழில் சிறப்பாக தனித்துவமாக உள்ள செய்திகளை எல்லாம் முனைப்புடன் தொகுக்க வேண்டும். செய்ய வேண்டிய ஆக்கப்பணிகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், உழைக்கும் கரங்கள் குறைவாகவே உள்ளன. எனவே மெதுவாகவே நம் பணி நகர்கின்றது. அதிகம் உழைக்க வேண்டாம், விடாது தொடர்ந்து, பணி சிறக்குமாறு உழைத்து வந்தாலே போதும். உமாபதி, கோபி, ரவி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நான் வருகைபற்றி தந்த புள்ளிவிவரம் அக்டோபர் 2004க்கானதுதான் அதை நான் உணரவில்லை. சுட்டியமைக்கு நன்றி. --C.R.Selvakumar 01:09, 1 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]
சென்ற வெள்ளியன்று பெங்களூரில் உள்ள பன்மொழி விக்கிபீடியர்கள் கூடினோம். ஜிம்போ வேல்சும் வந்திருந்தார். முன்னதாக தில்லியில் அவர் அளித்த பேட்டியில் வங்காளம் மற்றும் கன்னட விக்கிக்களைப் பற்றி மட்டும் புகழ்ந்து இருந்தார். அவரிடம் தமிழ் விக்கியின் பன்முனை வளர்ச்சியைப் பற்றி நான் எடுத்துரைத்தன்பேரில் அவர் அண்மைய பேட்டிகளில் தமிழ் விக்கியைக் குறிப்பிடும் வழக்கத்தைத் துவங்கியுள்ளார்! குரு பிரம்மா என்ற தெலுங்கு விக்கிபீடியர் தெ.வி. 15,000 கட்டுரை இலக்கை அடைந்ததைக் கண்டு வியந்தார். இது இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் எப்படி ஏற்பட்டது என்று கேட்கவிருக்கிறேன். மற்றபடி, உங்கள் அனைவரின் கருத்துக்களோடு உடன்படுகிறேன். நாம், தரமான கட்டுரைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவோம்.
மேலும், ஜிம்போ தந்த ஒரு தரவின்படி தமிழ் விக்கிபீடியாவிற்கு வருபவர்களில் 1 விழுக்காடிற்கும் குறைவானவர்களே இந்தியாவிலிருந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது! இதற்கான காரணங்களை ஆராய்ந்து, இங்குள்ள 6 கோடி தமிழர்களில் பெரும்பங்கினர்க்கு த.வியைக் கொண்டு சேர்க்க வேண்டும். நான் சில நாட்களாக பணிப்பளு காரணமாகப் பங்களிக்க முடியவில்லை. விரைவில் துவங்குகிறேன். -- Sundar \பேச்சு 11:28, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
சுந்தர், ஜிம்போ தந்த தரவில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் இன்னும் இணையம் முழு நேரமும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் ஊடுறுவாததே இதற்கு காரணம். இணைய வசதிகள் கூடக் கூட தமிழ் விக்கிபீடியாவுக்கான வருகையும் அதிகரிக்கும். அவர் தந்த தகவல்கள், பேட்டிகள் ஏதும் இணையத்தில் அணுகக்கூடியதாய் இருந்தால் தெரிவிக்கவும். இந்த சந்திப்பை பற்றி இன்னும் விரிவான வலைப்பதிவுக் குறிப்போ விக்கிபீடியா குறிப்போ தந்தால் நன்றாக இருக்கும். தமிழ் விக்கிபீடியாவில் இருந்து வேறு யார் கலந்து கொண்டார்கள்?--ரவி 12:56, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
விரைவில் விரிவான தகவல்களைத் தருகிறேன். தற்போதைக்கு என் வலைப்பதிவிலிருந்து வரும் இணைப்புகள் வழி செல்லுங்கள். த.வியிலிருந்து நான் மட்டுமே கலந்து கொண்டேன். சில நாட்கள் முன்பு சிவகுமாரையும் விக்னேசையும் சந்தித்தபோது குறிப்பிட்டாலும், கடைசி நிமிடத்தில் அவருக்கு நினைவுபடுத்தத் தவறிவிட்டேன். விரைவில் த.வி. கூட்டம் ஒன்றை நடத்துவோம். -- Sundar \பேச்சு 13:07, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

சுந்தர், தகவல்களுக்கு மிக்க நன்றி. என் கணிப்பில் இன்றளவும் தமிழே இந்தியத் துணைக்கண்ட மொழிகளில் முதலிடம் வகிக்கின்றது. அடுத்ததாகக் கன்னடம், பிறகு தெலுங்கு என்பதாக என் கணிப்பு. கன்னடம் மிகச் சிறந்த முறையில் முன்னேறி (தரத்திலும் எண்ணிக்கையிலும்) முன்னேறி வருகின்றது. தமிழ் விக்கியைத் தரத்தில் வெல்லக்கூடியது கன்னடம்தான் (என் கணிப்பில்). தெலுங்கு, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் எண்ணிக்கையளவிலே முன்னணியில் இருந்தாலும், அவை வளமான வளர்ச்சியாக எனக்குத் தென் படவில்லை. இக்கருத்துக்கள், சிறு எண்ணிக்கையான கட்டுரைகளைக்கண்டும் எவ்வகையான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்றும், மொழியறிவு இல்லாமல் தேர்ந்து திரட்டிய கருத்தக்கள்தான். இவை குற்றமுடைய அல்லது தவறான கணிப்பாகவும் இருக்கலாம். எண்ணிக்கையைக் தரம் குன்றாமல் கருத்துப் பரட்சியுடன் கூட்டுவது மிகத்தேவையானது. இதற்கு இன்னும் பல ஆவலுடைய பயனர்கள் தேவை. நண்பர்களிடம் எடுத்துச் சொல்லி, ஓரிரண்டு கட்டுரைகளாவது எழுதச்சொல்லவேண்டும். எத்தனையோ தமிழர்கள் 'பிலாகுகள் (வலையேடுகள்) வைத்து எழுதி வருகிறார்கள். அவர்களில் பலரும் இங்கு ஆக்கங்கள் அளிக்க வல்லவர்கள். வருங்காலத்தில் இன்னும் அதிக வரவேற்பும் பங்களிப்பும் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.--C.R.Selvakumar 15:22, 3 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

எட்வர்டின் மென்பொருளும் வருவோர் தரவுகளும்

[தொகு]

மேலே நாம் பார்த்ததனைத்தும் உள்ளடக்கம் சார்ந்த தகவல்கள். வாசிப்போர் வருகை பற்றிய தகவல்களை சோதனை முறையில் எட்வர்டின் கருவி மூலம் பெற்றோம். இதை வைத்துப் பார்க்கும் போது கட்டுரைப் பெயர்வெளியில் மட்டும் கடந்த 38 நாட்களில் 87,515 பார்வைகள் பதியப்பட்டுள்ளன, சில வருகைகள் விடுபட்டிருக்குமா எனத் தெரியவில்லை. இது முறையே ஒரு நாளைக்கு 2300 பார்வைகளாகும். இதில், பங்களிப்பாளர்கள் அடிக்கடி மார்க்கும் அண்மைய மாற்றங்கள் மற்றும் வார்ப்புரு:Mainpagefeature முதலியவை வாரா. இதில் ஒரு கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் மொத்தம் 4858 வெவ்வேறு கட்டுரைகள் பார்க்கப்பட்டுள்ளன. கன்னட விக்கியில் கடந்த 18 நாட்களாகக் கிடைத்த தரவின் படி மொத்தம் 11,584 பார்வைகள் ஏற்பட்டுள்ளன. இது முறையே ஒரு நாளைக்கு 644 பார்வைகளாகும். மேலும், வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் பரம்பல் 1524 தான். இருப்பினும் இது 18 நாட்களுக்குத்தான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விரிவான தரவுகளை மயூரநாதன் உருவாக்கியுள்ள ஒப்பீட்டுப் பக்கத்தில் நாளை இணைக்கிறேன். -- Sundar \பேச்சு 13:57, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சுந்தர். தமிழ் விக்கிபீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை திட்டமிட இத்தரவுகள் மிகவும் உதவும். எவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் தரவுகளை தர இயலுமோ தாருங்கள். அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளை அதிகம் தேடப்படும் கட்டுரைகளாகவும் குத்துமதிப்பாக கொள்ளலாம். தேடுபொறிகளில் இருந்து என்ன தேடல்சொற்கள் மூலம் நம் தளத்துக்கு வருகிறார்கள் என்றும் அறிய இயலுமானால், அதையும் தெரியப்படுத்துங்கள். பிற இந்தியமொழி விக்கிபீடியாக்களுக்கும் வருகை விவரங்களை தந்தால், அதிகக் கட்டுரை எண்ணிக்கை உடைய தளங்களை கண்டு நாம் மலைக்காமல் நம் வழியில் தெளிவாகச் செல்லலாம்--ரவி 14:04, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


நல்ல செய்தி சுந்தர். இது போன்ற புள்ளிவிபரங்கள் நிச்சயம் தேவை. இவற்றின் மூலம் எந்தெந்தத் துறை சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக தேவை இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அத்துறைகளின் கூடிய கவனம் எடுக்கமுடியும். Mayooranathan 15:58, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


சுந்தர், எட்வர்டின் மென்பொருளில் எங்கேயோ வழு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் இடத்தில் இருக்கும் கட்டுரைக்கு ரவியின் (home page) ஊகத்தை விட நல்ல விளக்கம் தேவை. பிற தமிழ் இணையத்தளங்களின் பயனர் வரவு தரங்கள் பெற முடியுமானால், அவற்றுடனான ஒப்பீடே எமக்கும் மேலும் உதவும். அதாவது, எத்தனை தமிழர்கள் இணையத்தில் இருக்கின்றார்கள், அவர்களில் எத்தனை பேருக்கும் தமிழ் வாசிக்க தெரியும், ஆர்வம் இருக்கின்றது போன்ற தகவலகள் எமக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பிடியான தகவல்கள் பெறு முடியுமோ என்று தெரியவில்லை. தமிழின் வாசிப்பு பின்புலம் இப்பிடியாக இருக்கும் என்பது நான் முன்னர் படித்த சில புள்ளிவிபரங்களின் படி (நினைவில் இருந்து!):
  • சராசரி புத்தகம் - 2500 பிரதிகள் (அதி உயர்: 10 000?)
  • ஆனந்த விகடன், குமுதம் போன்ற popular culture இதழ்கள் - 1.5 மில்லியன் ????????? இலட்சம் ??? :-(
  • அம்புலிமாமா - 100 000 பிரதிகள் ???
  • சிற்றிதழ்கள் - 1000 - 10000 ????
தமிழ்மணம், பிரபல பத்திரிகைகள், இணையத்தளங்கள் எமது ஒப்பீட்டுக்கு பயன்படலாம். --Natkeeran 16:05, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நற்கீரன், அச்சு இதழ் வாசிப்புகளையும் இணைய இதழ் வாசிப்புகளையும் ஒப்பு நோக்க முடியாது. ஒரு குறிப்புக்காக சொல்வதானால், தமிழ்நாட்டில் நாளிதழ்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. இவற்றுக்கான வாசகர் எண்ணிக்கை மட்டும் தான் (விற்பனை எண்ணிக்கை அல்ல) ஒரு சில மில்லியன் கணக்கில் இருக்கும்.அதற்கடுத்து விகடன், குமுதம் போன்றவை வரலாம். அம்புலிமாமா ஒரு இலட்சம் பிரதி எல்லாம் விக்காது. ஒரு வேளை வாசகர்கள் வேண்டுமானால் அவ்வளவு இருக்கலாம். எனினும், நாளிதழ் இணைப்புகளான சிறுவர்மலர், சிறுவர்மணி போன்றவற்றுக்கு கணிசமான வாசிப்பு வட்டம் உண்டு (நான் ஒரு முன்னாள் வாசகன்!). நூட்கள் முதல் பதிப்பில் 1000 அச்சடிக்கப்படும். அரசு நூலக கொள்முதல் உத்தரவுகள் இருந்தால், கூடுதலாக அச்சிடப்படும். திருக்குறள், பாரதியார் கவிதைகள், பொன்னியின் செல்வன், அக்னிச்சிறகுகள் போன்றவை விதிவிலக்காக இலட்சக்கணக்கில் விற்கப்பட்டிருக்கும். தமிழ் இணையத்தளங்களில் தமிழ்மணம், தட்ஸ்தமிழ், தினமலர், வெப்உலகம் போன்றவை அதிக பயனர்கள் உடையது. ஒருவேளை அத்தளங்கள் பயன்பாட்டு விவரங்களை தர முன் வரலாம். தமிழ் விக்கிபீடியாவுடன் சரி சமமாக ஒப்பிட சரியான அறிவு சார் தமிழ் இணையத்தளம் என்று தான் சொல்லலாம். இணையத்தில் தமிழுக்கான சந்தை வாய்ப்பு, பயன்பாட்டு வாய்ப்பு குறித்து சுந்தர் தன் பணி அனுபவத்தின் மூலம், அவர் பணியிட இரகசியக் காப்பு விதிகளுக்கு உட்பட்டு ஏதேனும் தெரிவிக்க இயலுமானால் நன்றாக இருக்கும். --ரவி 18:14, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

விக்கிபீடியாவுக்கு ஏன் தமிழ்நாட்டில் இருந்து பங்களிப்பாளர்கள் இல்லை?

[தொகு]

ஜிம்மி வேல்ஸ் சந்திப்பு தொடர்பான வலைப்பதிவு ஒன்றில் தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர் பலரும் தமிழகத்துக்கு வெளியே வாழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஒரு சுவாரசியமான உண்மை. தமிழ்நாட்டில் இருந்து வாசகர்கள் வராததற்கு கூட இணைய ஊடுறுவல் இல்லை என்று சமாதானம் சொல்லலாம். ஆனால், கணிசமான அளவு தமிழ் வலைப்பதிவாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கையில், இதுவரை முனைப்பான தமிழ் விக்கிமீடியா பங்களிப்பாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்ந்நு வருவது கவனிக்கத்தக்கது. இதற்கு சுவாரசியமான காரணம் ஏதும் இருக்குமா? ஒரு வேளை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் குழந்தை, குட்டி, நண்பர்கள், கேளிக்கை, வாழ்க்கை பிரச்சினைக்ள என்று தமிழ், அறிவு வளர்ச்சி குறித்து குறித்து சிந்திக்க நேரம் இல்லாமல் போய்விட்டனரா :)? தமிழ்நாட்டில் உள்ள ஆறு கோடித் தமிழரின் பங்களிப்பும் வாசிப்பும் இல்லாமல் இத்திட்டத்தை கட்டியெழுப்ப முடியாது. இந்த நிலைக்கான காரணங்கள், தீர்வுகள் இருந்தால் யாரும் தெரிவிக்கலாம். சுந்தர், ஆங்கில விக்கிபீடியாவிலும் தமிழ்நாட்டுப் பங்களிப்பாளர் குறைவு தானா என்று தெரிவிக்க இயலுமா? பிற மாநிலத்தவருக்கும் நமக்கும் இடையில் இதில் எழும் தடைக்கல் என்ன? சென்னைக்கு கீழ் சிறு நகரங்களில் ஆங்கில விக்கிபீடியா வாசிப்பு, பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு எப்படி உள்ளது?--ரவி 17:35, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

  • ஊடவியலாளர் மாலன் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தியது போல, ஊடகவிலாளர்கள் த.வி. அறிமுகப்படுத்த தவறிவிட்டனர்.
  • பங்களிப்பதில் நுட்ப பிரச்சினைகளை குறைத்து கூற முடியாது. இங்கு பலர் எனக்கு அதைச் சொல்லிவிட்டினர். பல வலைப்பதிவாளர்களே எனக்கு அதை சொல்லியிருக்கின்றார்கள். எனக்கே ஏ-கலப்பையின் பயன்பாடு சில மாதங்களுக்கு முன்னர்தான் சரியாக தெரிய வந்தது. எனவே தமிழில் தட்டச்சு செய்வது என்பது இன்னும் பலருக்கு அவ்வளவு சுலபமல்ல. பள்ளியில் அதைச் சொல்லிகொடுப்பதும் இல்லை. தனியார்வம் வேண்டும். விக்கி செயல்பாடும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது. (மயூரன், தனது தொடரை முன்னெடுக்க வேண்டும்.)
  • த.வி. வழக்கம்களும் சற்று கடுமை போன்று தெரியலாம், எ.கா. நடை.
  • ஒரு வித பண்டித போக்கு. படித்தவர் பலருக்கு செல்வகுமார் போன்று நேரடியாக பங்குபெறுவதில் தயக்கம் இருக்கலாம். இங்கு ஒரு பண்டித சூழல் (academic atmosphere or quality) இல்லையென்று கருதலாம்.
  • த.வி.க.க தத்துவம், நோக்கம் போன்றவற்றில் தெளிவின்மை.
  • தற்சமயம் இங்கு அதிகமாக ஈழத்தவர்கள் பங்குபெறுவதால் த.வி. ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் (நூலகம் போன்று) என்ற தவறாக கருதுகின்றார்களோ தெரியவில்லை.


... --Natkeeran 18:36, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் குறைவு. இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டும் தமிழ் தொடர்பான கட்டுரைகளில் பங்களிக்கின்றனர். மற்றவர்கள் அவரவர் துறை சார்ந்த கட்டுரைகளில் பங்களிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் வெளிநாடுகளில் வசிப்பவர்களே. ஆங்கில விக்கியைப் பொருத்தவரை பெரும்பாலும் மென்பொருள் துறையில் உள்ளவர்களே அதிகம் பங்களிக்கின்றனர். அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளனர். இவர்களில் பலர் புலம்பெயர்ந்த தமிழர்கள். ஆயினும், இவர்கள் தமிழில் அவ்வளவாக புலமை இல்லையென்று ஒதுங்கி விடுகின்றனர், அல்லது நற்கீரன் குறிப்பிட்டதுபோல் இங்கு தர்க்க அடிப்படையிலான உரையாடல்களைவிட உணர்வு அடிப்படையிலான உரையாடல்களே மிகுந்திருக்கும் என்று தவறாக எண்ணிவிடுகின்றனர். ஒருவேளை தமிழ் வலைப்பதிவுகளைப் பார்த்து இந்த முடிவிற்கு வருகின்றனரா எனத் தெரியவில்லை.
அதே வேளை பெரும்படிப்பு (ஆங்கில வழியில்) பெற்றவர்களைத் தவிர என்னற்ற தமிழ்நாட்டு/இலங்கைத் தமிழர் ஆங்கில விக்கியிலுள்ள மொழித்தடையினால் பங்களிக்காமல் விலகியிருக்கலாம். அவர்களால் தமிழ் விக்கியில் கண்டிப்பாகப் பங்களிக்க இயலும். அவர்களுக்கு நம் தளம் பற்றிய செய்தி சரியாகப் போய்ச் சேரவில்லையென்றே தோன்றுகிறது. ஆனால், தரமான பல்துறைத் தகவல்களைத் தருவதன்மூலம் தாமாக இவர்களுக்கு த.வி. அறிமுகமாகும். ஊடகங்களும் கவனிக்கத் துவங்கும். தொழில்நுட்பச் சிக்கல்களுக்கும் சுரதா எழுதி போன்ற கருவிகள் விரைவில் பரவலான தீர்வாகும். -- Sundar \பேச்சு 08:24, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
மாலன் நாராயணனின் yahoo 360 இல் செய்தியொன்றை இட்டுளேன். மாலன் நாராயணனே தமிழ் மொழி இடைமுகப் பொதி திட்டத்தில் முன்னின்று உழைத்தவர் இவரின் ஆதரவு இருந்தால் விக்கிபீடியாவின் அறிமுகம் கூடுமென்றே நினைக்கின்றேன். இலங்கையிலிருந்து கோபி, சிந்து தொடர்சியாகப் பங்களிக்கின்றார். ஜே.மயூரேசனும், மயூரனும் தமது பங்களிப்பை நல்குகின்றார்கள் அவ்வாறே கலாநிதியும் பங்களிக்கின்றார். ஆனாலும் இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் விக்கிபீடியர்களின் எண்ணிக்கை குறைவே. இதற்கு விக்கிபீடியாபற்றி வெளியில் விளக்கம் குறைவாக இருக்கலாம். இதற்கு நாமே நேரடியாக விக்கிபீடியாவைப் பற்றி மயூரனின் பாணியில் பிளாக்கில் அல்லாமல் நேரடியாக கட்டுரைகளை உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகங்களில் தெரியப் படுத்தினால் நல்லது என நினைக்கின்றேன். பிளாக்கைப் போன்றலாமல் தங்களுக்கு நேரடியாப் பெயர் கிடைக்காது என்பதால் தயங்குகின்றார்களோ தெரியவில்லை. அதிகம் பார்க்கப் பட்ட 100 பக்கங்களுக்கு இணைப்புள்ளது ஆயினும் கட்டுரைக்கு எவ்வாறு வருகின்றார்கள் (எடுத்துக் காட்ட்டா தேடுபொறியூடாகவா அல்லது சுட்டியூடாகவா) என்பது தெளிவில்லாமல் உள்ளது. இவையும் கவனிக்கப் படவேண்டும். ஆயினும் அறிமுகம் மிகமுக்கியம் அப்போதுதான் நாம் செலவழிக்கும் நேரத்திலும்(முக்கியமாக) மற்றும் பணத்திலும் ஓர் உருப்படியான வேலையைசெ செய்திருக்கின்றோம் என்ற திருப்தி ஏற்படும். --Umapathy 10:25, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
பார்க்க . -- Sundar \பேச்சு 11:18, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகில் 18 ஆவது இடத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகை ஏறத்தாள 70 மில்லியன். இதில்

  • இந்தியாவில் 65,000,000 (ஏறத்தாழ 93%)
  • இலங்கையில் 3.500,000 (ஏறத்தாழ 5%)
  • சிங்கப்பூர்/மலேசியா 1,750,000 (ஏறத்தாழ 2.5%)
  • ஐரோப்பா/அமெரிக்கா/ஆஸ்திரேலியா 1,100,000 (ஏறத்தாழ 1.5%)

இந்த மக்கள் தொகைகளோடு ஒப்பிடும்போது தமிழ் விக்கிபீடியாவுக்கு வருபவர்களின் மொத்தத் தொகையே புறக்கணிக்கத் தக்கதுதான். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களின் தொகையே தற்போதைய வருகைகளிலும் பலமடங்கு கூடுதலான வருகைகளை எட்டப் போதுமானது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் வாழுகின்ற 1.1 மில்லியன் மக்களில் குறைந்தது 50% ஆவது இலங்கைத் தமிழராகவே இருப்பர் என்பது எனது கணிப்பு. இவர்களில் பெரும்பாலோர், புதிதாக இலங்கையில் இருந்து சென்றவர்கள். தமிழில் கல்வி கற்றவர்கள். ஓரளவுக்கு, தாய் மண்ணைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோமோ என்ற ஏக்கமும் அவர்களுக்கு இருக்கக்கூடும். இந்த இழப்புக்கு ஈடாக மொழி, கலைகள் தொடர்பில் கூடிய ஈடுபாட்டை அவர்கள் காட்டக்கூடும். அவர்களிடம் மொழி உணர்வுகள் சூடாகவே இருப்பதற்கான காரணங்களும் பல இருக்கின்றன. அதோடு அந்த நாடுகளில் இருக்கும் வசதிகள் அவற்றை அவர்கள் இலகுவாக அடையக்கூடிய பொருளாதார வசதிகளும், இணையம் தொடர்பான நடவடிக்கைகளிலும் அவர்கள் கூடிய அளவில் ஈடுபட வாய்ப்பு அளிக்கின்றன. தவிரவும், ஈழமண் எந்தநேரமும் சூடான செய்திகளுக்குக் களமாக இருக்கிறது. இதனால் அவற்றுக்காகவும் அவர்கள் இணையத்தை நாடி அதோடு பரிச்சயம் செய்து கொள்ளுகிறார்கள். என்னுடைய யாழ்ப்பாணத்து மரபுவழி வீடுகள் தொடர்பான ஆங்கில மொழி இணையத் தளத்துக்கு வருபவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களும் இவ்வாறான ஒரு நிலையையே காட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களில் அத் தளத்துக்கு வந்த Guest Book பதிவுகளில் 15% இலங்கையிலிருந்தும், 7% இந்தியாவிலிருந்தும் வந்திருக்கின்றன. மலேசியா/சிங்கப்பூரிலிருந்து 6% பதிவாகி இருக்கிறது. மிகுதி 71% அமெரிக்கா/ஐரோப்பா/ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலிருந்து வருபவைதான். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு, இணைய வசதிகளும், அவற்றுக்கான செலவுகளும் நிச்சயம் ஒரு பிரச்சினைதான். அதுவே முக்கியமான பிரச்சினைகள் ஆகவும் இருக்கக்கூடும். அண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், சென்னையிலும் தமிழ் எழுதத்தெரியாத வசதி படைத்த தமிழ்ப் பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார். அவ்வாறான பிள்ளையொன்றின் தந்தை, நானும் நீயும் தமிழ் படித்து என்னத்தைக் கண்டோம் என்றாராம். இது ஒரு விதி விலக்காகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து. எனினும் இவ்வாறான போக்குகளுக்குப் பின்னணியாகத் தமிழ் தனிப்பட்டவர்களின் வளர்ச்சிக்குத் தேவையற்ற ஒன்று என்ற கருத்து உருவாகிறதோ என்றும் தோன்றுகிறது. நான் சில வேளைகளில் சிந்திப்பது உண்டு, நாங்கள் இங்கே எழுதுகின்ற அறிவியல் கட்டுரைகளை யார் வாசிக்கக்கூடும் என்று. எத்தனை மாணவர்கள் தமிழ்நாட்டில் தமிழில் அறிவியல் பாடங்களைக் கற்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே UAE இல் என்னுடைய பிள்ளைகள் வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு கணினி மிகவும் பயன்படுகிறது. ஏதாவது ஒரு தலைப்பில் Project செய்வதானால் இணையத்தில் தேடித் தகவல் பெறுகிறார்கள். என்னுடைய மகள் ஆங்கில விக்கிபீடியாவில் தகவல் பெறுவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். இத்தகைய ஒரு பயன் தமிழ் விக்கிபீடியாவுக்கு உண்டா என்று தெரியவில்லை. Mayooranathan 13:21, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மயூரநாதன், நல்ல ஆய்வு. உங்கள் ஊகம் சரியென்றே தோன்றுகிறது. மற்றபடி, அண்மையில் தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காகவும், கொள்கை காரணங்களுக்காகவும் ஒரு தமிழ் மலர்ச்சியை ஏற்படுத்த முனைகிறது. இதோடு இங்குள்ள பொருளாதார வளர்ச்சியும் இணையும்போது மக்களுக்கு வாழ்தேவையில் "இரண்டாம் தரமான" மொழி, இலக்கியம், பண்பாடு போன்றவற்றில் நாட்டம் கூடுதலாகும். (இலங்கையில் இவை "முதல் தரத்" தேவைகள் என்பதை ஓரளவு உணர முடிகிறது.) ஊடகங்களின் தனியார்மயத்தினால் அவை பல்கி வருகின்றன. இவைகள் கொஞ்சம் மொழிச்சிதைவை ஏற்படுத்தினாலும் ஓரளவு துணை புரிகின்றன. இணையமும் வேகமாக வளர்ந்து வருகிறது.
பிரெஞ்சு மக்கள்தொகையை ஒத்த தொகை கொண்ட நாம், அவர்களையொத்த பொருளாதார வலி பெற்றால் தானாக மரியாதை உலக அரங்கில் கிடைக்கும். அந்நாளுக்குக் காத்திருப்போம். "கோழியா முட்டையா" என்ற சிக்கலை விக்கியால்தான் உடைக்க முடியும். நல்ல தரமான உள்ளடக்கத்தை வளர்ப்போம். விரைவில் பயன் பெருகும். இதுபோன்ற இணைப்பு ஊடகங்களில் ஒரு "critical mass" வந்துவிட்டால் பலமடங்கு வளர்ச்சி பெறும். நம்பிக்கையுடன் காத்திருப்போம். -- Sundar \பேச்சு 14:03, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


சுந்தர் நீங்கள் சொல்வதுதான் தமிழுக்கு எதிர்காலம் போலத் தோன்றுகின்றது, அதாவது இரண்டாம் மொழி. உலகமய சூழலில் ஆங்கிலத்தின் வீச்சுக்கு நாம் பொருளாதார நோக்கில் மதிப்பளித்தே ஆகவேண்டிய சூழல் இன்று உள்ளது. ஆனால், அதே உலகமய சூழல் ஆங்கில சூழலை சவாலுக்கு உள்ளாக்கும். சீனா பலம்பெறும் பொழுது, பிரேசில் பலம் பெறும் பொழுது, ரஸ்சியா பலம் பெறும் பொழுது, தற்போதை யப்பான் போல் பல முனைகள் தோன்றும். அப்படிப்பட்ட சூழலில் மொழிபெயர்ப்பு என்பது சாதாரணமாக வந்து விடும். இப்பொழுதே புலம்பெயர்ந்த குடும்பங்களில் பல்மொழி என்பது மிக சாதாரணம். யேர்மன் மொழி, பிரேஞ்சு மொழி, யப்பானிஸ் மொழி ஆகியவை ஈழத்தமிழர்களிடம் இப்பொழுது ஆழுமை கொண்டுள்ளது எனலாம். ஒரு காலத்தில் ரஷ்சிய மொழியும் ஆதிக்கம் கொண்டிருந்தது. இனி சீன மொழியும் முக்கியத்துவம் பெறலாம். எனவே எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமலே இருக்கின்றது. ஆனால் ஒன்று, 25000 மக்களைக் கொண்ட இனுக்ரிருற் மொழி தன்னை நிலைநிறுத்த தேவை இருக்கும்பொழுது தமிழ் அவ்வளவு இலகுவில் விட்டுக்கொடுக்காது, இதவே அதன் வரலாறக இருந்து வந்துள்ளது.
கனடாவில் சில அரச சேவைகள் 100 மேற்பட்ட மொழிகளில் வழங்க அரசு முற்படும் பொழுது (தேவைகளுக்கு ஏற்ப), தமிழக அரசசேவைகளின் இணையத்தளங்கள் 95% ஆங்கிலத்தில் மட்டும் இருப்பது அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் நடைமுறைக்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தை கோடிட்டு காட்டுகின்றது. --Natkeeran 15:35, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
அரசிதழ்கள் அண்மையில் வெளியிடப்படுபவற்றில் பெரும்பாலானவை தமிழிலும் வெளியிடப்படுகின்றன. சில தமிழில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. அரசை நியாயப்படுத்துவதற்காகக் கூறவில்லை. உண்மை நிலையைச் சொல்கிறேன். பார்க்க: http://www.tn.gov.in/tamiltngov/default.htm மற்றும் http://www.tn.gov.in/tamiltngov/tamilarasu/default.htm கண்டிப்பாக இன்னும் கூடுதலாக கனடாவைப் போல் செய்ய வேண்டும் என்றாலும் இப்போது நிலைமை தேறி வருவது கண்டு மகிழ்ச்சியே. -- Sundar \பேச்சு 15:54, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
http://www.cyberjournalist.org.in/linkstn.html சுந்தர் பல காலமாக கவனிக்கின்றேன், அவ்வளவு முன்னேற்றம் இல்லை. --Natkeeran 16:04, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
முன்பிற்கு இப்பொழுது பரவாயில்லை, அரசிதழ்கள் கூட ஆங்கிலத்தில் மட்டும் இருந்து வந்தன. இருப்பினும் உங்கள் இணைப்பின் வழி சென்று பார்க்கையில் கவலையளிக்கிறது. -- Sundar \பேச்சு 16:17, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழக அரசுத்தளங்கள், தமிழக மக்களுக்கு தொடர்புடைய தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பது கவலைக்குரியதும் வெட்கப்படுவதற்கும் உரியது. இணைய அணுக்கம் அதிகரித்து கடைக்கோடித் தமிழனை சேரும்போது நிச்சயம் இந்நிலை வணிகத் தேவை, அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக மாறும் என்பது என் கணிப்பு. நகர்பேசி இயங்குதளம், கணினி இயங்குதளம் ஆகியவையும் நிச்சயம் தமிழில் வரும். அவரவர் மொழியில் விற்றால் தான் நிறைய விற்கலாம் என்பது வணிக நிறுவனங்களுக்குத் தெரியும். மாவாட்டி, mixi போல் ஒரு switch போட்டு இயக்கும் பொறிகளாய் அல்லாமல் இயக்குவதற்கு குறைந்தபட்ச மொழியறிவும் தேவையாயிருப்பதால் இவை நிச்சயம் தமிழில் வரும். --ரவி 16:28, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


நாம் சிரமமெடுத்து எழுதும் அறிவியல் கட்டுரைகள் உண்மையில் படிக்கப்படுகின்றனவா, யாருக்கு தேவையுடையதாயிருக்கும், தேவையுடையவர்களை அது சென்று சேருமா என்ற மயூரனாதனின் சிந்தனை நியாயமானது. எனினும் இவ்விதயத்தை positiveஆக நோக்க பல காரணங்கள் உள்ளன. கடந்த 5, 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் படித்த மக்கள், கல்லூரி இளைஞர்களிடையே எழுந்த இணைய விழிப்புணர்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில் இணைய, நகர்பேசித் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பரவல் விகிதமும் மிகவும் அதிகம். பொதுவாக மக்களுக்குப் பயன்படும் தொழில்நுட்பம் exponential விகிதத்தில் பெருகும் என்று கூறுவார்கள். அந்த வகையில் வரும் ஒரு சில ஆண்டுகளிலும் 2020க்குள்ளும் இணைய அறிவு, இணைய அணுக்கம் இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருப்பது போல் மிகச் சாதாரணமாக மிகக் குறைந்த விலையில் வரும். தொலைக்காட்சி, satellite tv ஆகியவை வெளிநாட்டிலேயே முதலில் உருவாக்கப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தமிழ் நிகழ்ச்சிகளை காட்டித் தான் வெற்றி அடைந்து வருகிறார்கள். அது போல் இணையமும் பரவலாகும் போது தமிழ் கணிமையின் தேவை மிக அதிகமாக இருக்கும். தற்போதே முழுக்க தமிழில் அமைந்த e-commerce தளங்கள் இருப்பதை காணலாம். வீட்டுக்கு வீடு இணையம் வரும்போது தமிழ் வழி அறிவுத்தேடல் மிகவும் முக்கியத்துவம் பெறும். (எங்கள் நிறுவனத்தின் கணிப்பில் இப்பொழுது ஆங்கில தளங்களுக்கு உள்ள சந்தைப் பருமையைக் காட்டிலும் வட்டார மொழிகளுக்கான இணையச் சந்தை பல மடங்காகும். -- Sundar \பேச்சு 16:17, 6 அக்டோபர் 2006 (UTC))[பதிலளி]

என்ன தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலம் பேசுவது போலவும் ஆங்கில அறிவு உடையவர்கள் போல் காட்டிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழர்களின் ஆங்கில புரிந்து கொள்ளும் திறன் (comprehension) மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே. நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மக்கள் உண்மையில் சமூகத்தின் cream layer. நுணுக்கமான ஆங்கில அறிவு, vocabulary இல்லாமலேயே மேம்போக்காக ஆங்கிலம் பேசி ஒப்பேற்றும் பலரும் உள்ளனர். (இது மிகக் கவலைக்குறியது. இந்நிலையினால் ததய்மொழியும் இல்லாமல் சிந்தைத் தெளிவும் இல்லாமல் ஆகிவிடுகிறது. கண்கூடாகக் காண்கிறேன். -- Sundar \பேச்சு 16:17, 6 அக்டோபர் 2006 (UTC)) மிகத் தரமான ஆங்கிலப் பள்ளிகள், கல்லூரிகளில் பயில்வோர் அன்றி பிறரால் ஆங்கிலம் மூலமாகவே வேகமாகவும் நுணுக்கமாகவும் விதயங்களை அறிந்து கொள்ள முடியாது. தமிழ் மூலம் விதயங்களைப் புரிந்து கொள்ளும் ஆர்வம், இன்னும் உயிர்ப்புடனே இருக்கும். அதற்கு யாரும் தீனி தருவதில்லை. அவ்வளவுதான். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுத முடியாது என்ற மனத்தடையை முதலில் உடைத்தால் தமிழில் அறிவியல் கருத்துக்களை சிந்திக்க முடியாது என்ற அடுத்த மனத்தடையை உடைக்கலாம்.[பதிலளி]

பத்தாண்டுகளுக்கு முன்பே இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பு வந்தது. தற்போது, எம். எஸ். என், யாகூ ஆகியவை தமிழ்ப்பதிப்புகளை கொண்டு வருகின்றன. இப்படி இருக்கையில் நம் விக்கிபீடியாவின் பயன்பாட்டை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஆங்கில வழியப் பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்திருப்பது போல் தோன்றினாலும் தமிழ் வழி தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கணிசமானவை. இவர்களில் பயில்வோரும் மிக அதிகம். (ஆங்கில வழியில் பயில்வோரை விட அதிகமாகக் கூட இருக்கலாம்..தரவுகளைத் தேடிப் பார்க்கிறேன்.)

பள்ளிகள், கல்லூரிகளில் இணைய அணுக்கம் அதிகரிக்கும்போது (என் கணிப்பில் இன்னும் 5,6 ஆண்டுகள்) தமிழ் விக்கிபீடியாவின் பயன்பாடு அதிகமாகும். ஆங்கில விக்கிபீடியா கூட 2001ல் தொடங்கி இப்பொழுது தான் சிறப்பான நிலையை அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது. போன தலைமுறையில் தமிழில் கற்றவர்கள் இந்த தலைமுறையில் ஆங்கிலத்தில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு கருத்துக்களை விளக்க விக்கிபீடியாவை நா��லாம். இந்த தலைமுறையில் ஆங்கிலத்தில் படிப்பவர்கள் கூட விதயங்களை தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள தமிழ் விக்கிபீடியாவை நாடுவர். (முற்றிலும் உண்மை. பல அறிவியல் கட்டுரைகளை நான் எழுதும்போது முன்னெப்போதும் இல்லாத அளவு புரிதலைப் பெற்றிருக்கிறேன். -- Sundar \பேச்சு 16:17, 6 அக்டோபர் 2006 (UTC))[பதிலளி]

இன்று குப்பன் சுப்பனெல்லாம் நகர்பேசி பயன்படுத்துவது போல் வெகு விரைவில் இணையமும் அனைவரின் கைகளில் தவழும் காலம் வரும்..(இந்த தேர்தலுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி, செயற்கை கோள் தொலைக்காட்சி இணைப்பு, எரிவாயு அடுப்பு தந்தார்கள்..இனி அடுத்த தேர்தலுக்கு மிச்சமிருப்பது நகர்பேசியும் கணினியும் தான்! அதற்கடுத்த தேர்தலில் இரு சக்கர வாகனம் முதல் ஹெலிகாப்டர் வரை எதிர்பார்க்கலாம் :)) அப்பொழுது தமிழ் விக்கிபீடியாவின் பங்கும் ஆங்கில விக்கிபீடியாவுக்கு ஒத்ததாய் மாறும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. சரியான நேரத்தில் தான் விதைத்திருக்கிறோம். நிச்சயம் நல்ல விளைச்சல் வரும் !(அங்க இங்க சுத்தி கடைசியில் சுந்தரின் உழவு உவமைக்கு வந்தாச்சு ;)!)--ரவி 16:04, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

:) -- Sundar \பேச்சு 16:17, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

..(இந்த தேர்தலுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி, செயற்கை கோள் தொலைக்காட்சி இணைப்பு, எரிவாயு அடுப்பு தந்தார்கள்..இனி அடுத்த தேர்தலுக்கு மிச்சமிருப்பது நகர்பேசியும் கணினியும் தான்! அதற்கடுத்த தேர்தலில் இரு சக்கர வாகனம் முதல் ஹெலிகாப்டர் வரை எதிர்பார்க்கலாம் :)) :)--Natkeeran 16:10, 6 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Mariano Anto Bruno Mascarenhas தமிழ்நாட்டிலிருந்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி த.வி யில் பங்களித்துவருகிறார் என்பது ஒரு மகிழ்சியான செய்தி. - விஜயஷண்முகம் 13:21, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மாற்றுமுறையில் கட்டுரை எண்ணிக்கை

[தொகு]

மாற்றுமுறையில் கட்டுரை எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்போது Articles that contain at least one internal link and 200 characters readable text, (disregarding wiki- and html codes, hidden links, etc.; also headers do not count) மட்டுமே கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன. சிறப்பாக அமைக்கப்படும் ஒரு விக்கிபீடியாவில் வழமைமுறை எண்ணிக்கைக்கும் மாற்றுமுறை எண்ணிக்கைக்கும் இடைவெளி குறைவாகவே இருக்கும்! தமிழில் மிகச்சிறு கட்டுரைகளை அகற்றி அல்லது விரிவாக்கி வருகிறோம். ஆதலால் இடைவெளி இன்னும் குறையும் என எதிர்பார்க்கலாம். தொடராப் பக்கங்கள் [1] இல் காணப்படும் சுமார் 150 கட்டுரைகள் விக்கி உள்ளிணைப்பு அற்றவை என்பதால் மாற்று முறையில் கட்டுரைகளாகக் கருதப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆதலால் விக்கியாக்கத்தில் ஈடுபாடு காட்டும் பயனர்கள் தொடராப் பக்கங்கள் இற்குச் சென்று விக்கியாக்கத்திலீடுபட்டால் மாற்றுமுறை எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன். நன்றி. கோபி 17:25, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

கோபி நீங்கள் சொல்வது சரி. --Natkeeran 19:50, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

வழிமாற்றிகளின் அவசியம்

[தொகு]

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் வாசகர் தேடுதலின் மூலமே கட்டுரையைச் சென்றடைவதே வழக்கமானதும் இலகுவானதும் ஆகும். ஆனால் பெயர்கள் குறிப்பாக பிறமொழிப் பெயர்கள் மற்றும் பிறமொழிச் சொற்களின் உச்சரிப்பு போன்றன நபர்களுக்கும், பிரதேசங்களுக்கும் (எ. கா: தமிழகம்-ஈழம்) இடையில் வேறுபடுவதால் அவற்றுக்கான பொருத்தமான வழிமாற்றிகள் அவசியம். ஆதலால் சிவகுமார் மற்றும் உமாபதி ஆகியோர் உருவாக்கி வரும் சில வழிமாற்றிகளின் பயன்பாடு முக்கியமானதாகும். ஆயினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பக்கங்களை நகர்த்தும் போது விடப்படும் வழிமாற்றிகள், பேச்சுப் பக்கங்களின் வழிமாற்றிகள் நீக்கப்பட வேண்டியவை.

தவி யில் வழிமாற்றிகளின் எண்ணிக்கை இதுவரை நான் நீக்கியவற்றின் பின்னர் ஆயிரத்தை நெருங்குகின்றன. அனைத்தையும் பார்வையிடக் கூடியதாக இருக்கிறது ஆதலால் சில பயனர்களாவது அவை அனைத்தையும் பார்த்து அவசியமற்றவற்றை நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக நீளமான பெயர்களில் அமைந்த வழிமாற்றிகள் தவறில்லாதவையாக இருந்தாலும் அவை தேடலில் பயன்படாதவை என்பதால் நீக்குவதே சரியானதாகும் என நினைக்கிறேன். மேலும் நான் அவசியமற்றதெனக் கருதிய பெருமளவு வழிமாற்றிகளை நீக்கும் போது இப்பக்கத்தை இணைத்தவையைக் கவனிக்காதுவிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால் சில தவறுகள் நேர்ந்திருக்கலாம். அவற்றுக்கு வருந்துகிறேன்.

இனி வருங்காலங்களில் நிர்வாகிகள் நகர்த்தற்பதிவுகளை அவதானித்து அவசியமற்ற வழிமாற்றிகளை நீக்கிவருமாறு பரிந்துரைக்கிறேன். குறிப்பாகப் பேச்சுப் பக்க வழிமாற்றிகள் தேவையே இல்லாதவை. பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் வழிமாற்றிகளின் எண்ணிக்கையும் விக்கியின் தரத்தைச் சற்று விளக்கக் கூடியவையாதலால் பலநூற்றுக்கணக்கில் அவசியமற்ற பக்கங்கள் இருப்பதாற் பயனில்லை. நன்றி. கோபி 13:10, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

இயன்றவரை உதவுகிறேன், கோபி--ரவி 15:50, 30 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
நல்ல பரிந்துரை. இந்த வேண்டுகோளை பொருத்தமான கையேடுகளில் சேர்க்க வேண்டும். --Natkeeran 19:41, 3 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இந்திய மொழி விக்கிகள்

[தொகு]

சிறப்பு:Preferences பக்கத்தில் "உரைக் கட்ட அளவுகள்" பட்டையில் "Add pages I create to my watchlist" என்று ஆங்கிலத்தில் ஒருமுறையும் "நீங்கள் தொகுத்த பக்கங்களை, உங்கள் கவனிப்புப் பட்டியலில் சேருங்கள்" என்று தமிழில் ஒருமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகி் யாரேனும் இதை கவனித்து இதில் ஆங்கிலத்தில் உள்ளதை நீக்குவீர்களா ?

மேலும் சிறப்பு:Preferences பக்கத்திற்கு இட்டுச்செல்லும் "my preferences" என்ற சுட்டியையும் தமிழில் அமைத்தால் சிறப்பாக இருக்கும். - விஜய் 14:36, 8 அக்டோபர் 2006 (UTC)

முதல் விடயத்தில் நிர்வாகிகள் எதுவும் செய்யமுடியாது என்று நினைக்கிறேன். "my preferences" தமிழாக்கப்பட்டு விட்டது. Mayooranathan 15:44, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவில் புதைந்து கிடக்கும் பல சிறப்புக்கட்டுரைத் தகுதியை பெறாத கட்டுரைகளை தகுந்த முறையில் காட்சிப்படுத்த் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே இது. இப்பக்கத்தை நோக்கி சில கூற்றுக்கள்:

  • ஒவ்வொரு மாதமும் ஒரு பயனர் தெரிவுகளை மேற்கொள்ளலாம்.
  • தெரிவுகள் சிறப்புக்கட்டுரைகளகாவோ அல்லது உங்களுக்குத்தெரியுமா கட்டுரைகளாகவோ அல்லாமல் மற்றவையாக அமைந்தல் வேண்டும்.
  • முன்னர் தெரியப்பட்டவையை மீண்டும் select செய்யாமல் இருப்பது நன்று.
  • ஓரளவு தகவல்களையாவது தாங்கியிருக்க வேண்டு.
  • ஓரளவு பூர்தியான கட்டுரைகள் நன்று.
  • ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு படிமமாவது இணைத்தல் நன்று.
  • ஒரே (பிரதம) பயனரால் எழுதப்பட்ட பல கட்டுரைகளைத் தெரிதலைத் தவிர்த்தல் நன்று.
  • விரும்பினால் பட்டியல், காலக்கோடு போன்றவற்றையும் தெரியலாம்.

பெயர் சற்று இடிக்கின்றது, வேறு எதாவது பரிந்துரைகள்... பிற பயனர்களின் கருத்துகளும் வேண்டப்படுகின்றன. பலத்த ஆட்சோபனை இருந்தால், அவை என்னவென்று தெளிவுபடுத்தினால் இத்திட்டத்தை கைவிடலாம். --Natkeeran 05:53, 9 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

வடிவமைப்பு நன்று நற்கீரன். சிக்கல் இற்றைப்படுத்துவதில்தான் உள்ளது. :( உங்களுக்குத் தெரியுமா பகுதியே பல நாட்களாக இற்றைப்படுத்தப் படாமல் உள்ளது. :( -- Sundar \பேச்சு 11:52, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

சோழர்

[தொகு]

ஆங்கில விக்கியில் எதிர்வரும் அக்டோபர் 16 அன்று முதல் பக்கத்தில் சோழர் கட்டுரை (en:Chola dynasty) காட்சிப்படுத்தப்பட உள்ளது. அன்று சோழர் தமிழ் கட்டுரைக்கும் பல பயனர்கள் வர வாய்ப்புண்டு. தற்போது 153 பார்வைகள் பெற்றுள்ள அக்கட்டுரை எத்தனை பார்வைகள் அன்றைய தினம் பெறுகிறது என்று பார்ப்போம். மேலும், அந்த நாளுக்கு முன்னதாக அக்கட்டுரையை மேம்படுத்தினால் நம் தளத்தின் மீதான மதிப்பு கூடும். -- Sundar \பேச்சு 11:52, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர், தமிழாக்கங்களை சளைக்காமல் அளித்துவரும் மயூரநாதனுக்கும் பாராட்டுக்கள். ஆங்கில விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் சோழர் இன்று காட்சியில் உள்ளது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயம். --Umapathy 17:52, 16 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
இன்று காலையில் இருந்து அது வேலை செய்வதாகத் தெரியவில்லை. முதல் பக்கம் 12032 முறை பார்க்கப்பட்டதாக உள்ளது. இன்று முழுவதும் இது அதிகரிக்க வில்லை. --Sivakumar \பேச்சு 12:02, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]
இப்போது வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். 153 இலிருந்து 155 ஆகியுள்ளது. -- Sundar \பேச்சு 12:44, 12 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

விக்சனரி கூகுள் குழுமம்

[தொகு]

தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கும் தமிழ் விக்சனரி தள செயல்பாடு, பங்களிப்புக்கும் ஏதுவாக தமிழ் விக்சனரி கூகுள் மடலாடற்குழு தொடங்கப்பட்டுள்ளது. முகவரி - http://groups-beta.google.com/group/tamil_wiktionary இம்மடலாடற்குழுவில் நீங்கள் இணைவது மூலம் தமிழ் கலைச்சொல்லாக்க உரையாடல்களில் ஈடுபடலாம். இக்குழுவில் எழும் கருத்தொத்த பரிந்துரைகள் தமிழ் விக்சனரியில் ஆர்வமுடைய பயனர்களால் அங்கு சேர்க்கப்படும். தற்போது, கணினி மற்றும் தொடர்பாடல் நுட்பச்சொற்கள் மட்டும் உரையாடப்பட்டு வந்தாலும் இக்குழுவின் பயனர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வருங்காலத்தில் பல துறை உரையாடல்களும் நிகழ்வது உறுதி.--ரவி 03:49, 17 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]


செய்திக் கட்டுரைகள்

[தொகு]

தமிழ் விக்கிபீடியாவுக்கு வருகை தருவோர் நடப்பு நிகழ்வுகளில் காட்டும் ஆர்வம் புள்ளி விவரங்கள் மூலம் அறியத்தக்கது. எனவே, செய்தி முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து தொடர்ந்து உருவாக்கித் தருமாறும், அவற்றை மேம்படுத்தி தருமாறும் வேண்டுக��றேன். அடுத்து முதற்பக்கச் செய்திகளில் இடம்பெறத்தக்க கட்டுரைகள் - சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், பான் கீ மூன் (en:Ban Ki-moon), முஹம்மத் யூனுஸ் (en:Muhammad Yunus), க்ரமீன் வங்கி (:en:Grameen Bank)--ரவி 03:49, 17 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

5000 கட்டுரைகள்

[தொகு]

ganeshbot தொடர்ந்து இயங்குவதால் இன்று நாம் 5000 கட்டுரைகளை எட்டுவோம் என்று நினைக்கிறேன். --கோபி 16:59, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நிச்சியமாக ஒரு மைல்கல்தான். தமிழ் விக்கிபீடியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். --Natkeeran 17:06, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Very well possible. I just counted the articles (that have translations) remaining to be created. I counted 55 more. I am expecting the final article count will be around 5023 (though some articles may exist already). Congratulations to all Tamil wikipedians!!! And Happy Diwali and Ramadan wishes too! -- Ganeshk 17:22, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

Thanks for the valuable comments and contributions from Gobi, Natkeeran and Ganeshk. I looked in to Indian Languages from my understanding we have the highest no of uses than any other Indic language. In addition to exceed 5, 000 articles we are also going reaching another mile stone of having 1000+ users for the project quite soon. --Umapathy 17:48, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

5000 தமிழ் கட்டுரைகள் - நிச்சியமாக இது அனைத்து தமிழ் விக்கிபீடியர்களுக்கும் கிடைத்த தீபாவளி பரிசு. தமிழ் விக்கிபீடியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தீபாவளி நல்வாழ்த்துகள். பாலாஜி (பேச்சு) 17:58, 20 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]