விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 1
Appearance
செப்டம்பர் 1: உசுபெக்கிசுத்தான் - விடுதலை நாள் (1991)
- 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் (படம்) பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது.
- 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
- 1914 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெத்ரோகிராது எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1923 – டோக்கியோ மற்றும் யோக்கோகாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் உயிரிழந்தனர்.
- 1939 – செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து வைத்தன.
- 1939 �� ஊனமானவர்கள், மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட செருமனியர்களை வதையா இறப்பு மூலம் கொல்லும் திட்டத்திற்கு இட்லர் ஒப்புதல் அளித்தார்.
- 1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர்.
அ. வரதநஞ்சையர் (பி. 1877) · செம்பை வைத்தியநாதர் (பி. 1895) · தனிநாயகம் அடிகள் (இ. 1980)
அண்மைய நாட்கள்: ஆகத்து 31 – செப்டெம்பர் 2 – செப்டெம்பர் 3