வாலரி ஜிரோ
வாலரி ஜிரோ | |
---|---|
2018-ல் ஜிரோ | |
பிறப்பு | 24 மார்ச்சு 1974 கியூபெக், கனடா[1] |
கல்வி | மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் (எல்.எல்.பி., 1997; எல்.எல்.எம்., 2003, பி.எச்.டி., 2012)[2] |
பணி | மெய்யியல் அறிஞர், வழக்கறிஞர், விலங்குரிமைச் செயற்பாட்டாளர் |
வலைத்தளம் | |
www |
வாலரி ஜிரோ (Valéry Giroux) (பிறப்பு 24 மார்ச் 1974) ஒரு கனடிய மெய்யியல் அறிஞரும், வழக்கறிஞரும், விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். கியூபெக்கைச் சேர்ந்த இவர் மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் சட்டத் துறையில் துணைப் பேராசிரியராகவும், சென்டர் டி ரீசெர்ச் என் எதிக் மையத்தின் ("நெறிமுறைகள் ஆராய்ச்சி மையம்") இணை இயக்குநராகவும், ஆக்ஸ்போர்டு விலங்கு நெறியியல் மையத்தின் உறுப்பினராகவும், விலங்கு நெறிமுறைகள் மற்றும் நனிசைவம் சார்ந்த ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விலங்கினவாத எதிர்ப்பு ஆய்விதழான "எல்'அமோர்ஸ்" (L'Amorce) இதழின் இணை ஆசிரியராக விலங்கினவாத எதிர்க்கருத்துக்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மெய்யியல் கருத்துக்களில் அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் சமமான தார்மீகக் உரிமைகளை முன்னிறுத்தியும், மனிதரல்லா விலங்குகள் மனிதர்களால் பயன்படுத்தப்படும் செயல்களை நியாயப்படுத்துவதை எதிர்த்தும், அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் இனபேதமின்றி அவற்றின் தனிப்பட்ட சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் வாதாடுபவர்.
படைப்புகள்
[தொகு]- Contre l'exploitation animale ("Against Animal Exploitation"; Éditions L'Âge d'Homme, 2017) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2825147001
- Émilie Dardenne and Enrique Utria ஆகியோருடன் Peter Singer et la libération animale. Quarante ans plus tard ("Peter Singer and animal liberation. Forty years later"; Presses universitaires de Rennes, 2017) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 275355255X
- Renan Larue என்பவருடன் Le Véganisme ("Veganism"; PUF, 2017) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 213074947X
- L'antispécisme ("Antispeciesism"; PUF, 2020) ASIN B086MD53G5
- Angie Pepper and Kristin Voigt, ஆகியோருடன். The Ethics of Animal Shelters (Oxford University Press, 2023) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780197678640
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Valery Giroux (auteur de L'antispécisme)". Babelio (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
- ↑ "Valéry Giroux Curriculum Vitae". umontreal.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.