உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காள சுல்தானகம்

ஆள்கூறுகள்: 24°52′0″N 88°8′0″E / 24.86667°N 88.13333°E / 24.86667; 88.13333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
শাহী বাংলা
شاهی بنگاله
1352–1576
கொடி of வங்காள சுல்தானகம்
கொடி
வங்காள சுல்தானகத்தின் வரைபடம்
வங்காள சுல்தானகத்தின் வரைபடம்
நிலைவங்காள சுல்தானகம்
தலைநகரம்கௌட நகரம், சோனார் கோன்
பேசப்படும் மொழிகள்பாரசீகம்
வங்காளம் (அலுவல் மொழி)
சமயம்
இசுலாம் (அலுவல்)
இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• வங்காளத்தை ஒன்றிணைத்தல்
1352
• முகலாயப் படையெடுப்பு
1576
நாணயம்டங்கா
முந்தையது
பின்னையது
தில்லி சுல்தானகம்
முகலாயப் பேரரசு
[[அரக்கான் இராச்சியம்]]
சூர் பேரரசு
தற்போதைய பகுதிகள்வங்காளதேசம் வங்காளதேசம்
இந்தியா இந்தியா
மியான்மர் மியான்மர்

வங்காள சுல்தானகம் (Bengal Sultanate); (பாரசீக மொழி: بنگالهBangālah, வங்காள மொழி: বাঙ্গালা/বঙ্গালা) and Shahi Bangalah (பாரசீக மொழி: شاهی بنگاله‎ சாகி பங்களா, வங்காள மொழி: শাহী বাঙ্গলা))[1]தில்லி சுல்தான்கள் 14ம் நூற்றாண்டில் பல்வேறு இராச்சியங்களாக சிதறியிருந்த வங்காள பிரதேசங்களை தில்லி சுல்தான்கள் கைப்பற்றி ஒன்றிணைத்தனர். தில்லி சுல்தானகத்தின் ஆளுநர்களாக வங்காள சுல்தான்கள் 1352 முதல் 1576 முடிய ஆண்டனர். பின்னர் முகலாயப் பேரரசு காலத்தில் வங்காள நவாபுகள் வங்காளத்தை ஆண்டனர். வங்காள சுல்தான்கள், பாரசீக நாட்டின் சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பாரசீக மொழி மற்றும் பண்பாட்டை பின்பற்றுபவர்கள்.

தெற்காசியாவின் கிழக்கு பகுதியையும், தென்கிழக்காசியாவையும் இணைக்கும் வங்காள சுல்தானகத்தை ஐந்து இசுலாமிய வம்ச சுல்தான்கள் ஆண்டனர்.

சிட்டகாங் பகுதியில் போர்த்துகேயர்களுக்கு வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவ வங்காள சுல்தான்கள் அனுமதி அளித்தனர்.[2]

1537ல் ஆப்கானிய படைத்தலைவர் சேர் சா சூரி வங்காள நவாபுகளை வென்று வங்காளத்தை கைப்பற்றினார். சேர் சா சூரியின் இறப்பிற்குப் பின்னர் 1576-இல் முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்தது.

வரலாறு

[தொகு]
வங்காளத்தின் இரண்டாவது சுல்தான் சிக்கந்தர் ஷா கட்டிய அதினா மசூதி

1338ல் வங்காளத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தில்லி சுல்தான்கள் இழந்ததைப் பயன்படுத்திக் கொண்ட வங்காள ஆளுநர் சுல்தான் பக்ருத்தீன் முபாரக் ஷா சோனார்கோனிலும், சுல்தான் அலாவூதீன் அலி ஷா லக்நௌட்டியிலும், சுல்தான் சம்சுதீன் இலியாஸ் ஷா சட்கோனிலும் தனித்தனி சுல்தானகங்களை நிறுவி, வங்காளத்தின் பிரதேசங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர்.

துருக்கிய இனத்தவரான இலியாஸ் ஷா வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை 1490 வரை ஆண்டனர்.

1494ல் இலியாஸ் ஷா சுல்தான்களின் பிரதம அமைச்சராக இருந்த அலாவுதீன் உசைன் ஷா, வங்காளத்தைக் கைப்பற்றி 1519 வரை ஆண்டார். அலாவுதீன் உசைன் ஷாவின் வழிவந்தவர்கள் வங்காளத்தை 1538 வரை ஆட்சி செய்தனர். அலாவுதீன் உசைன் ஷா வம்சத்தின் வங்காள சுல்தானகத்தில் வங்காளத்தின் கிழக்கில் அரக்கான், அசாம், திரிபுரா மற்றும் தெற்கில் ஒடிசா பகுதிகள் இருந்தன.[3]

இச்சுல்தானியர்களின் ஆட்சியின் போது, சிட்டகாங் பகுதியில் போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினருக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொண்டு, வணிகம் மற்றும் தொழில் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கானியப் படைத்தலைவர் சேர் சா சூரி, வங்காளத்தைக் கைப்பற்றினார். பின்னர் 1540ல் முகலாயப் பேரரசர் உமாயுனை வென்று தில்லிப் பேரரசர் ஆனார். செர் ஷா சூரி வங்காளத்தையும், பெசாவரையும் இணைக்கும் 2,500 கிமீ நீளமுள்ள பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார்.[4] பாபர் காலத்தில் வங்காள சுல்தான்களை வென்று, வங்காளத்தை மீண்டும் முகலாயப் பேரரசில் இணைத்தார். முகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில், 1576ல் ராஜ்மகால் போரின் முடிவில் வங்காள சுல்தானகம் முடிவிற்கு வந்து, வங்காளம் முகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டது.

வங்காள சுல்தான்களின் பட்டியல்

[தொகு]

இலியாஸ் சாகி வம்சம் (1342-1414)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
சம்ஸ்சுதின் இலியாஸ் ஷா 1342–1358 வங்காளத்தின் முதல் சுல்தான்
சிக்கந்தர் ஷா 1358–1390 தனது வாரிசான மகனால் கொல்லப்பட்டார்.
கியாசுத்தீன் அசம் ஷா 1390–1411
செய்புதீன் ஹம்சா ஷா 1411–1413
முகமதுஒ ஷா பின் ஹம்சா ஷா 1413 தந்தையின் அடிமையால் கொல்லப்பட்டார்.
சியாபுத்தீன் பயாசித் ஷா 1413–1414
முதலாம் அலாவுதீன் பிரூஸ் ஷா 1414 ராஜா கணேசனால் கொல்லப்பட்டார். Son of

இராஜா கணேசன் வம்சம் (1414-1435)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
இராஜா கணேசன் 1414–1415
ஜலாலுத்தீன் முகமது ஷா 1415–1416 இராஜா கணேசனின் மகன், பின்னர் இசுலாமை தழுவினார்
இராஜா கணேசன் 1416–1418 இரண்டாம் முறை
ஜலாலுத்தீன் முகமது ஷா 1418–1433 இரண்டாம் முறை
சம்சுத்தீன் அகமது ஷா 1433–1435

மீண்டும் இலியாஸ் சாகி வம்சம் (1435-1487)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
நசுருத்தீன் முகமது ஷா (வங்காள சுல்தான்) 1435–1459
ருக்குனுத்தீன் பார்பக் ஷா 1459–1474
1474–1481
இரண்டாம் சிக்கந்தர் ஷா 1481
ஜலாலுத்தீன் பதே ஷா 1481–1487

ஹப்சி வம்ச ஆட்சியாளர்கள் (1487-1494)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
ஷாசதா பார்பக் 1487
சைபுதீன் பிருஸ் ஷா 1487–1489
இரண்டாம் முகமது ஷா 1489–1490
சம்சுத்தீன் முசாப்பர் ஷா 1490–1494

உசைன் சாகி வம்சம் (1494-1538)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்பு
அலாவுத்தீன் உசைன் ஷா 1494–1518
நஸ்ருத்தீன் நசரத் ஷா 1518–1533
இரண்டாம் அலாவுதீன் பிருஸ் ஷா 1533
கியாசுதீன் முகமது ஷ 1533–1538

பேரரசர் சேர் சா சூரியின் ஆளுநர்கள் (1539-1554)

[தொகு]
சேர் சா சூரி
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
கிதர் கான் 1539–1541 1541ல் பதவி நீக்கப்பட்டார்.
காஜி பசிலாத் 1541–1545
முகமது கான் சூர் 1545–1554 சேர் சா சூரியின் மகன் இஸ்லாம் ஷாவின் மறைவிற்குப் பின் தன்னை தன்னாட்சி கொண்ட வங்காள சுல்தானக அறிவித்துக் கொண்டார்.

முகமது ஷா வம்சம் (1554-1564)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
முகமது கான் சூர் 1554–1555 சேர் சா சூரியின் மகன் காலத்தில் தன்னைத் தானே வங்காள சுல்தானக அறிவித்துக் கொண்டவர்.
முதலாம் கியாசுதீன் பகதூர் ஷா 1555–1561
கியாசுதீன் ஜலால் ஷா 1561–1563
இரண்டாம் கியாசுதீன் பகதூர் ஷா 1563-1564

கர்ரணி வம்சம் (1564-1576)

[தொகு]
பெயர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
தாஜ் கான் கர்ரணி 1564–1566
சுலைமான் கான் கர்ரணி 1566–1572
பயாசித் கான் கர்ரணி 1572
தாவூத் கான் கர்ரணி 1572–1576

இதனையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sultanate of Bengal
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History". Banglapedia. Archived from the original on 29 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2017. Shah-i-Bangalah, Shah-i-Bangaliyan and Sultan-i-Bangalah
  2. Richard M. Eaton (31 July 1996). The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760. University of California Press. pp. 40–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-20507-9.
  3. David Lewis (31 October 2011). Bangladesh: Politics, Economy and Civil Society. Cambridge University Press. pp. 44–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-50257-3.
  4. Vadime Elisseeff (1998). The Silk Roads: Highways of Culture and Commerce. Berghahn Books. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-221-6. Archived from the original on 15 மே 2018.

மேலும் படிக்க

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_சுல்தானகம்&oldid=3959557" இலிருந்து மீள்விக்கப்பட்டது