உள்ளடக்கத்துக்குச் செல்

லட்சுமி பூஜை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி பூஜை
பிற பெயர்(கள்)தீபாவளி பூஜை
கொண்டாட்டங்கள்பட்டாசுகள்
நாள்அஸ்வின்(ஐப்பசி) அமாவாசை
நிகழ்வுஆண்டுக்கு ஒரு முறை

லட்சுமி பூஜை என்பது அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருளைப்பெற செய்யப்படும் ஒரு வழிபாடாகும்.இதை நேபாளத்தில் 'திஹார் ' என்பர் .இதற்காக வீடுகளை சுத்தம் செய்து மாலையில் விளக்கு ஏற்றி வழிபடுவர் .[1][2][3]

நோக்கமும், பூஜை நேரத்தை நிர்ணயம் செய்யும் முறையும்

[தொகு]

லட்சுமி பூஜை என்பது அன்னை மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இந்த பூஜை ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோச வேளையில் செய்யப்படுகிறது. பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என நம்பபடுகிறது. ஐப்பசி துலா மாதம் எனப்படுகிறது. துலாம் என்பது சமத்தை குறிக்கும். வணிகர்களுக்கு வரவ செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர். வட இந்தியாவில் இந்நாளில் வியாபாரிகள் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புதிய கணக்குகளை துவங்குவர்.

சூரியன் துலா அமாவாசை நாளில் தன்னுடைய இரண்டாவது சஞ்சரத்தை துவங்குவதாக நம்பபடுகிறது. சாதாரணமாக அமாவாசை நாள் நல்ல நாளாக கருதபடுவது இல்லை. ஆனால் லக்ஷ்மி பூஜை வருவதாலும், சூரியன் தன் சஞ்சாரத்தை மாற்றுவதலும் இந்நாள் சுப நாளாக கருதப்படுகிறது .மகாராஷ்டிரம் ,குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் லட்சுமி பூஜை மிகுந்த விசேஷமாக கொண்டாடப்படுகிறது . வணிக வளாகங்கள் போன்ற வியாபார தலங்களில் லட்சுமி பூஜையை கட்டாயம் செய்வர். மேலும் இந்நாளே தீபாவளியாக கொண்டடாடப்படுகிறது

இந்த நாளில் அன்னை பூமியில் இருக்கும் இடங்களில் வருவதாக ஐதீகம். அவளுக்கு வழிகாட்டும் வகையில் வீடுகளில் விளக்கு ஏற்றி வைப்பர். அன்னை வருவாள் என்ற நம்பிக்கையில் இரவு முழுவதும் விளக்கு ஏற்றுவர். சில இடங்ளில் இரவு சொக்கட்டான் ஆடுவர்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

[தொகு]
  1. பன்னீர்
  2. நெய் விளக்குகள்
  3. முந்திரி ,திராட்சை
  4. தேங்காய்
  5. மா இலைகள்
  6. அரிசி
  7. லட்சுமி,விநாயகர் ,சரஸ்வதி சிலைகள்
  8. சந்தனம்

பூஜை செய்யும் முறை

[தொகு]

ஒரு மேடையில் சிவப்பு துணி விரித்து கலசத்தை நிறுத்த வேண்டும் .கலசத்தின் விளிம்பு பகுதியில் நான்கு மா இலைகளை வைத்து தண்ணீர் நிரப்பி வைத்து விளக்கு ஏற்ற வேண்டும் .பூஜை செய்பவர் தன்னுடைய கணக்கு

புத்தகங்களையும் வைத்து இருக்க வேண்டும் .மேடையில் லட்சுமி தேவி சிலையையும் ,விநாயகர் சிலையையும் வைக்க வேண்டும் .

தீபாவளி நாளில் லட்சுமி பூஜைக்கு பின் வீட்டில் விளக்குகள் ஏற்றப்படும்

விநாயக பூஜை செய்த பின் ,லட்சுமி தேவியை ஆராதிக்க வேண்டும் .லட்சுமி தேவியை பனீர் ,சந்தனம் ,பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும் .பின்னர் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும் .பூஜையின் போது ஸ்ரீ சூக்தம் ,லட்சுமி அஷ்டகம் , வேத மந்திரங்கள் ஆகியவற்றை ஜெபிக்கலாம் .

பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும் .வடக்கே இப்பூஜை மிக பிரபலம் .குஜராத் மாநிலத்தில் இதை சோப்டா பூஜை என்பர் .இவ்வாறு எளிய பூஜையால் அன்னை மகிழ்ந்து ந��ம் வேண்டியதை தருவாள் என்பது நம்பிக்கை .

மேற்கோள்கள்

[தொகு]
  1. selvam, Kayalvizhi saravana. Arts Of Hindustan (in ஆங்கிலம்). Kayalvizhi saravana selvam. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8-5088-2055-8.
  2. Lochtefeld, James (2002). The Illustrated Encyclopaedia of Hinduism (in English). New York, USA: The Rosen Publishing Group Inc, New York. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-3180-3.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Pintchman, Tracy. Guests at God's Wedding: Celebrating Kartik among the Women of Benares, pp. 59–65. State University of New York Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-6596-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_பூஜை&oldid=4102674" இலிருந்து மீள்விக்கப்பட்டது