உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜா செல்வமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜா ராணி
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 சூன் 2014
முன்னையவர்கலி முது கிருஷ்ணாம நாயுடு
தொகுதிநகரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஸ்ரீ லதா ரெட்டி[சான்று தேவை]

17 நவம்பர் 1972 (1972-11-17) (அகவை 52)
பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா
துணைவர்ஆர். கே. செல்வமணி[1]
பிள்ளைகள்2
வேலை
  • நடிகை
  • அரசியல்வாதி
  • தயாரிப்பாளர்
  • தொலைக்காட்சி தொகுப்பாளர்
சமயம்இந்து
விருதுகள்நந்தி விருது (1991),(1994),(1998)
சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது

ரோஜா செல்வமணி (Roja Selvamani, பிறப்பு: 17 நவம்பர் 1972) என்பவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 2002 வரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். மேலும் ஒரு சில கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

இவர் மூன்று நந்தி விருதுகளையும் ஒரு தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதற்காக திரைப்படத் துறையை விட்டு விலகுவதாக ரோஜா அறிவித்தார். இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஸ்ரீ லதா ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட ரோஜா 1972 நவம்பர் 17 அன��று ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருப்பதியில் நாகராஜா ரெட்டி, இலலிதா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு குமாரசாமி ரெட்டி, இராமபிரசாத் ரெட்டி ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.

பின்னர், இந்த குடும்பம் ஐதராபாத்திற்கு இடம் மாறினார். இவர் திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். ரோஜா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு குச்சிப்புடி கற்று நடனம் ஆடினார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1992 செம்பருத்தி செம்பருத்தி
1992 சூரியன்
1993 உழைப்பாளி விமலா
1994 அதிரடிப்படை
1994 இந்து இந்து
1994 வீரா ரூபா
1994 சரிகமபத நீ அர்ச்சனா
1995 எங்கிருந்தோ வந்தான் அர்ச்சனா
1995 ராஜ முத்திரை
1995 அசுரன்
1995 இராசய்யா அனிதா
1995 மக்கள் ஆட்சி சரசு
1995 ஆயுத பூஜை சிந்தாமணி
1996 பரம்பரை பருவதம்
1996 ராஜாளி
1996 தமிழ்ச் செல்வன் பாத்திமா
1997 வள்ளல் ரோஜா
1997 அடிமைச் சங்கிலி
1997 பாசமுள்ள பாண்டியரே
1997 கடவுள் பார்வதி
1997 அரசியல் சுப்ரியா
1998 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ராதா சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது[2][3]
தமிழில் சிறந்த நடிகைக்கான சினிமா எக்சுபிரசு விருது
1998 என் ஆசை ராசாவே
1998 வீரம் விளஞ்ச மண்ணு
1998 புதுமைப்பித்தன் செண்பகம்
1998 காதல் கவிதை அவராகவே சிறப்புத் தோற்றம்
1999 ஹவுஸ்புல்
1999 சின்ன ராஜா இராதா
1999 நெஞ்சினிலே அவராகவே சிறப்புத் தோற்றம்
1999 சின்ன துரை புஷ்பவல்லி
1999 சுயம்வரம் ஈஸ்வரி
1999 முகம் மாலினி
1999 ஊட்டி சாரு
1999 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா Ragini
1999 அழகர்சாமி (திரைப்படம்) சுஜா
2000 திருநெல்வேலி
2000 ஏழையின் சிரிப்பில் சரோஜா
2000 சந்தித்த வேளை திலகா
2000 கந்தா கடம்பா கதிர்வேலா ரூபிணி
2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தமிழ்செல்வி
2000 புரட்சிக்காரன் கனிமொழி
2000 இண்டிபெண்டன்ஸ் டே
2000 பொட்டு அம்மன் துர்கா
2001 லூட்டி கீதா
2001 நிலா காலம் நிலாவின் தாய்
2001 சொன்னால் தான் காதலா ரோஜா
2001 சூப்பர் குடும்பம் ராக்கு
2001 விஸ்வநாதன் ராமமூர்த்தி மீனா
2001 மாயன் அழகம்மா
2001 வீட்டோட மாப்பிள்ளை மீனா
2001 மிட்டா மிராசு மீனாட்சி
2001 கோட்டை மாரியம்மன் கோட்டை மாரியம்மன்
2002 அங்காள பரமேஸ்வரி பார்வதி
2002 ஷக்கலக்கபேபி
2003 அரசு சிவகாமி
2003 சக்சஸ் இராதிகா
2005 மாயாவி அவராகவே சிறப்புத் தோற்றம்
2005 கரகாட்டக்காரி
2006 பாசக்கிளிகள் அங்கையர்கன்னி
2006 பாரிஜாதம் சிறீதரின் தாய்
2006 குருசேத்திரம் வைசுணவி
2007 குற்றப்பத்திரிகை கீதா
2007 நினைத்து நினைத்துப் பார்த்தேன் விக்ராந்தின் தாய்
2008 எல்லாம் அவன் செயல்
2011 காவலன் தேவிகா முத்து இராமலிங்கம்
2012 சகுனி சிறீதேவியின் தாய்
2013 மாசாணி இராசேசுவரி
2014 ஆப்பிள் பெண்ணே அம்சவள்ளி
2015 கில்லாடி அங்கையர்கன்னி
2015 புலன் விசாரணை 2
2015 என் வழி தனி வழி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Cinema news – 90's favourite tamil actress, she is famous in red clothe movie... Tamil Movies – Cinema seithigal". Maalaimalar.com. Archived from the original on 14 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "dinakaran". 4 April 2007. Archived from the original on 4 ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  3. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_செல்வமணி&oldid=4181179" இலிருந்து மீள்விக்கப்பட்டது