ரிச்சார்ட் வாக்னர்
ரிச்சார்ட் வாக்னர் Richard Wagner | |
---|---|
1871 இல் ரிச்சார்ட் வாக்னர் | |
பிறப்பு | 22 மே 1813 லைப்சிக் |
இறப்பு | 13 பெப்பிரவரி 1883 (அகவை 69) வெனிசு |
படித்த இடங்கள் |
|
பணி | இசையமைப்பாளர், இசை நடத்துநர், கட்டுரையாளர், நாடக இயக்குநர், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர், எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | See list of compositions by Richard Wagner |
வாழ்க்கைத் துணை/கள் | Cosima Wagner, Minna Planer |
குழந்தைகள் | Siegfried Wagner |
குடும்பம் | Rosalie Wagner, Ottilie Brockhaus, Louise Wagner |
கையெழுத்து | |
ரிச்சர்டு வாக்னர் (22 மே 1813 - 13 பெப்ரவரி 1883) ஒரு ஜேர்மன் இசையமைப்பாளரும், நடத்துனரும், நாடக இயக்குநரும், ஒரு கட்டுரையாளரும் ஆவார். முதன்மையாக இசை நாடகங்களுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். பெரும்பாலான பிற இசை நாடக இசையமைப்பாளர்களைப் போலன்றி இவர் காட்சிகளையும், வசனங்களையும் கூட எழுதினார்.
இளமைக்காலம்
[தொகு]ரிச்சார்ட் வாக்னர் 1813 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி லீப்சிக்கில் உள்ள இல. 3, புரூலில் இவரது பெற்றோருக்கு 9 ஆவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தையார் கார்ல் பிரீட்ரிக் வாக்னர், லீப்சிக் காவல்துறையில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். ரிச்சார்ட் பிறந்து ஆறு மாதங்களில் அவரது தந்தையார் இறந்துவிட்டார். இதன் பின்னர் ரிச்சர்டின் தாயாரான யொஹன்னா ரோசைன் வாக்னர், ரிச்சார்டின் தந்தையாரின் நண்பரும், நடிகரும், நாடகாசிரியருமான லுட்விக் கேயருடன் வாழ்ந்து வந்தார். 1814 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இருவரும் மணம் செய்து கொண்டு முழுக் குடும்பமும் டிரெஸ்டெனில் உள்ள கேயரின் வீட்டுக்குக் குடிபுகுந்தனர். ரிச்சார்டின் முதல் 14 ஆண்டுகளும் அவர் வில்ஹெம் ரிச்சார்ட் கேயர் என்றே அறியப்பட்டார்.
கேயருக்கு நாடகங்களின் மீது இருந்த ஆர்வம் ரிச்சார்டுக்கும் தொற்றிக் கொண்டது. ரிச்சார்ட் வாக்னர் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றினார். 1820 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரிச்சார்ட் ட்ரெஸ்டெனுக்கு அண்மையில் உள்ள, போசெண்டோர்ஃப் என்னும் இடத்தில் இருந்த பாஸ்ட்டர் வெட்செல்லின் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே இவரது இலத்தீன் ஆசிரியரூடாகப் பியானோ பயிற்சியும் கிடைத்தது. ரிச்சார்டுக்கு எட்டு வயதாக இருந்தபோது, 1821 ஆம் ஆண்டில், கேயரும் இறந்துவிட்டார். பின்னர் ரிச்சார்ட் டிரெஸ்டெனில் இருந்த கிராமர் பள்ளியில் சேர்ந்தார். பள்ளிச் செலவுகளை கேயரின் சகோதரர் பொறுப்பேற்றார். ரிச்சார்ட் வாக்னர் ஒரு நாடகாசிரியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் 1826 இல் பள்ளியில் இவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே இசைத்துறையில் பயிற்சி பெற எண்ணி, இசை பயில்வதற்காக குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்றார்.
1827 ஆம் ஆண்டளவில், இவரது குடும்பம் மீண்டும் லீப்சிக்குக்கே குடி பெயர்ந்தது. 1828 க்கும் 1831 க்கும் இடையில் இவர் இசைப் பயிற்சி பெற்றார். 1828 ஜனவரியிலும் பின்னர் ம���ண்டும் மார்ச்சிலும் பேத்தோவனின் இசை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதிலிருந்து பேத்தோவனே வாக்னருக்கு அகத்தூண்டலாக இருந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் திருமணம் (1833-1842)
[தொகு]1833 ஆம் ஆண்டு வாக்னரின் சகோதரர் ஆல்பெர்ட், வாக்னருக்கு இசைக்குழுவை வழிநடத்தும் தலைவர் வேலையை வாஜ்பெர்க் நாடகக்குழுவில் ஏற்படுத்திக் கொடுத்தார்.[1] அதே ஆண்டில், 20 வயதில், வாக்னர் அவரது முதல் முழுமையான ஓபேரா, டை ஃபைன் (தி ஃபேரிஸ்) இசை அமைத்தார். வெபர் பாணியை பின்பற்றிய இந்த ஓபேரா இசை, அரை நூற்றாண்டு காலத்திற்கு, அதுவாது 1883 இல் இசையமைப்பாளர் வாக்னர் மரணத்திற்குப் பிறகு மூனிச்சில் திரையிடப்பட்டது.[2]
1834 ஆம் ஆண்டில் லீப்ஸிங்கிற்கு திரும்பிய வாக்னர், மாக்டேபர்க்கில் உள்ள ஓபேரா இல்லத்தில் இசை இயக்குனராக ஒரு சிறிது காலம் வேலை செய்தார் [3] ஷேக்ஸ்பியரின் (Measure for Measure) அடிப்படையில் அவர் எழுதிய தாஸ் லிபிவெர்பாட் (The Ban on Love) எழுதினார். இது 1836 ஆம் ஆண்டில் மாக்டேர்க்கில் அரங்கேற்றப்பட்டது ஆனால் இது இரண்டாவதாக வேறு எங்கும் அரகேற்றப்படவில்லை. அதுவே முதலும் கடைசியுமாக அமைந்துவிட்டது ஏனெனில் வாக்னர் வேலை செய்த நாடக கம்பெனியில் நிதிப்பற்றாகுறை காரணமாகவும் மற்றும் வங்கி கண்க்கு திவாலாகிய காரணத்தால் கைவிட்டுவிட்டது.[4][5] வாக்னர் மாக்டேர்க்கில் முன்னனி நடிகைகளில் ஒருவரான கிறிஸ்டின் மின்னா பிளானரிடம் காதல்வயப்பட்டார்.[6] மேலும் தாஸ் லிபிவெர்பாடின் தோல்வியை அடுத்து கிறிஸ்டின் மின்னா பிளானரை வாக்னர் பின் தொடர்ந்து கோயின்பெர்க் சென்றார், அங்கு வாக்னருக்கு ஒரு நாடகக் கம்பெனியில் மின்னா வேலை வாங்கித் தந்தார்.[7] 24 நவம்பர் 1836 அன்று இருவரும் ட்ரெகிம் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.[8] மே 1837 இல், கிறிஸ்டின் மின்னா வாக்னரை விட்டு பிரிந்து இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார்,[9]; இது ஒரு கொடூரமான திருமணத்தின் முதல் தீர்ப்பே. சூன் 1837 இல், வாக்னர் ரிகா (பின்னர் ரஷ்யப் பேரரசு) நகரத்திற்கு சென்றார், அங்கு அவர் உள்ளூர் ஓபேரா குழுவின் இசை இயக்குனராக ஆனார்.[10] வாக்னர் அவரது நாடகக் குழுவில் பாட மின்னாவின் சகோதரி அமலிக்கு வாய்ப்பை பெற்றுத் தந்தார் மேலும் மின்னாவுடன் முறிந்த உறவையும் 1838 ஆம் ஆண்டில் புதுப்பித்துக்கொண்டார்.[11]
1839 ஆம் ஆண்டிற்குள் வாக்னர் தம்பதியினர் நிறைய கடன்களை வாங்கி குவித்தனர் அதனால் பெரும் கடனாளியாகி கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க ரிகாவை விட்டு இருவரும் வெளியேறினர்.[12] கடன்கள் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி வாக்னரைப் பிடித்து வாட்டிக்கொண்டிருந்தது.[13] ஆரம்பத்தில் அவர்கள் லண்டன் நகரத்திற்கு ஒரு புயலோடு கூடிய கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர் [14] அப்போது கிடைத்த அனுபவத்தை மையமாக வைத்தும் ஹெய்ன்ரிச் ஹெயின் ஒரு ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டும் வாக்னர் பறக்கும் டச்சுமனிதன் என்ற தலைப்பில் ஒபேராவை இசையமைத்தார்.[15] 1839 செப்டம்பரில் வாக்னர் பாரிசில் குடியேறினார்,[6] மேலும் அவர் 1842 வரை அங்கு தங்கினார். வாக்னர் இங்கு சிறிய கட்டுரைகள் மற்றும் நாவல்களான "பேத்தோவனிற்கு ஒரு புனிதப் பயணம்", தனது வளர்ந்து வரும் "இசை நாடகம்" மற்றும் "பாரிசில் ஒரு முடிவு" போன்றவைகளை எழுதி ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். பாரிசில் ஒரு முடிவில் பிரெஞ்சு மாநகரில் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞராக தனது சொந்த அனுபவங்களை அவர் சித்தரிக்கிறார்.[16] ஷெள்சிங்கர் வெளியீட்டு இல்லத்தின் சார்பாக பெரும்பாலும் பிற இசையமைப்பாளர்களின் ஓபேராக்களை வெளியிட ஏற்பாடுகளை செய்துத் தந்தார். அப்போது தான் வாக்னர் தனது மூன்றாம் மற்றும் நான்காம் ஒபேராவான ரின்சி மற்றும் டி பிளிங்டே ஹொலான்டரை இசையமைத்தார்.[16]
டிரெஸ்டென் (1842-1849)
[தொகு]வாக்னர் 1840 ஆம் ஆண்டில் ரின்சி ஒபேராவை கியாகோமோ மேயர்பீரின் உறுதியான ஆதரவுடன் நிறைவு செய்தார்.[17] இது சாக்சோனிய ராஜ்யத்தில் உள்ள டிரெஸ்டென் தியேட்டர் அரங்கத்தில் நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது மேலும் 1842 ஆம் ஆண்டு வாக்னர் டிரெஸ்டனுக்கு தனது இருப்பிடத்தை மாற்றினார். அவர் ஜெர்மனிக்குத் திரும்பியது நிம்மதி அடைந்ததாகவும் மேலும் தனது 1842 ஆம் ஆண்டு சுயசரிதை குறிப்பில் பாரிசிலிருந்து செல்லும் பாதை என்ற தலைப்பில இவ்வாறு குறிபிட்டுள்ளார். "முதன்முறையாக நான் ரின்யைப் பார்த்தேன், கண்களில் கண்ணீரைக் கொண்டேன், ஏழை கலைஞனான நான், என் ஜெர்மனியத் தந்தையருக்கு நித்திய நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.[18] ரின்சியின் அரங்கேற்றத்திற்காக 20 அக்டோபரில் ஒரு குறிப்பிட்ட நல்லப் பாராட்டுகளைப் பெற்றார்.[19]
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வாக்னர் டிரெஸ்டெனில் வசித்து வந்தார், இறுதியில் ராயல் சாக்சன் அரங்கத்தில் நடத்துனராக நியமிக்கப்பட்டார்.[20] இந்த காலகட்டத்தில், அவர் அங்கேயே டி பிளஜன்ட் ஹாலேண்டர் (2 சனவரி, 1843) [21] மற்றும் டேன்ஹெசர் (19 அக்டோபர் 1845),[22] தனது மூன்று நடுத்தர கால ஓபேராக்களில் முதல் இரண்டு ஒபேராக்களை இங்கு அரங்கேற்றம் செய்தார். வாக்னர் டிரெஸ்டனில் உள்ள கலைஞர்கள் வட்டங்களில் தன்னை இனைத்துக் கொண்டார், இசையமைப்பாளர் ஃபெர்டினான்ட் ஹில்லரும் மற்றும் கலைஞர் கோட்ஃபிரைட் செம்பருடனும் இனைத்திருந்தார்.[23][24]
இடதுசாரி அரசியலில் வாக்னரின் ஈடுபாடு துரதிருஷ்டவசமாக டிரெஸ்டனில் அவருடைய ஆதரவை முடிவுக்குக் கொண்டு வந்தது. வாக்னர் சோசலிஸ்ட் ஜெர்மனிய தேசியவாதிகளிடையே தீவிரமாக செயல்பட்டார், இதை தொடர்ந்து தீவிர பத்திரிகையாளர் ஆகஸ்ட் ரோகெல் மற்றும் ரஷ்ய தீவிரவாதி மிக்கேல் பகினின் போன்ற விருந்தினர்களைப் வரப்பெற்றார்.[25] மேலும் பியர்-ஜோசப் புருதோன் மற்றும் லுட்விக் ஃபாயர்பாக்கின் கருத்துக்களால் வாக்னருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[26] 1849 ஆம் ஆண்டில் பரவலான அதிருப்தி மே புரட்சிக்கான எழுச்சியை டிரெஸ்டெனில் உருவாக்கியது, ஆனால் அந்த எழுச்சி தோல்வியுற்றது, அதில் வாக்னர் ஒரு சிறிய ஆதரவு பங்களிப்பை கொண்டிருந்தார். புரட்சியாளர்கள் கைது செய்ய உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. வாக்னர் டிரெஸ்டென்னை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, முதலில் பாரிசுக்குச் சென்று பின் ஜூரிச்சில் குடியேறினார். அங்கு முதலில் ஒரு நண்பர் அலெக்ஸாண்டர் முல்லரிடம்மிருந்து அவருக்கு புகலிடம் கிடைக்கப் பெற்றார்.[27][28]
அரசியல் அகதியாக, சுவிட்சர்லாந்து (1849-1858)
[தொகு]அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் ஜெர்மனிலிருந்து தப்பித்து அரசியல் அகதியாக வாக்னர் சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் டிரெஸ்டன் கிளர்ச்சிக்கு முன்னால், அவரது நடுத்தர கால கடைசி ஒபேராவான லோஹெரின்ரின் இசை தொகுப்பிற்கான இறுதிப் பணியை நிறைவு செய்தார். வாக்னர் அவரது நண்பர் பிரான்ஸ் லிட்ஸ்க்கு ஒரு கடிதம் மூலம் தன்து லோஹெரின் இசையை அரங்கேற்றம் செய்துத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி லிட்ஸ் ஆகத்து 1850 ஆம் ஆண்டு விமர்ரில் அரங்கேற்றம் செய்தார்.[29]
இருப்பினும், வாக்னர் கடுமையான தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தார், ஜெர்மன் இசை உலகில் இருந்து தனித்தும், எந்த வருமான வருமானமும் இல்லாமல் இருந்தார். 1850 ஆம் ஆண்டில், அவரது நண்பர் கார்ல் ரிட்டரின் மனைவி ஜூலி, வாக்னருக்கு ஒரு சிறிய ஓய்வூதியமாக ஆண்டுக்கு சராசரியாக 3000 தாலர்ஸ் 1859 ஆம் ஆண்டு வரை கொடுத்து பராமரிக்கத் தனது நண்பர் ஜெசி லாசட்டுடன் இனைந்து தொடங்கினார். ஆனால் வாக்னர் லாசட்டின் மனைவி மினாவுடன் ஏற்பட்ட தொடர்பால் பின்னர் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.[30] ரின்சிக்குப் பின் வாக்னர் உருவாக்கிய ஒபேராக்களை வாக்னரின் மனைவி மின்னா பிளானர் விரும்பவில்லை மேலும் ஆழ்ந்த மன அழுத்த நோயின் பிடியில் வீழ்ந்தார். வாக்னருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு தொடர்ந்து எழுத முடியாத அளவிற்கு நோய்வாய்ப்பட்டார்.[31]
ஜுரிச்சில் அவரது முதல் ஆண்டுகளில் வாக்னரின் முதன்மையாக வெளியிடப்பட்ட கட்டுரை "எதிர்காலத்தின் கலை வேலை" (The Artwork of the Future) என்ற தொகுப்பு ஆகும். 1849 ஆம் ஆண்டில், ஒபேராவின் தொலைநோக்குப் திட்டமாக கெசாம்டுங்குஸ்ட்வெக் "Gesamtkunstwerk ("total work of art")" "முழுமையான கலை வேலை" என்று இசை, பாடல், நடனம், கவிதை, காட்சி கலைகள் மற்றும் அரங்கமைப்பு போன்ற பல்வேறு கலைகளை எப்படி ஒருங்கிணைப்பது என்று விவரிக்கிறார். 1850 ஆம் ஆண்டில் [32] வாக்னர் முதல் முறையாக இசையில் யூதம் என்ற தலைப்பில் தன்து யூத மத விரோத நிலைப்பாட்டை விவரிக்கிறார்.[33] இந்த வாதத்தில் அடிப்படையில் வாக்னர், அடிக்கடி பாரம்பரிய யூத மத துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தி, யூதர்களுக்கும் ஜெர்மனிக்கும் எந்த தொடர்பும் இல்லை, இதனால் மேலோட்டமான மற்றும் செயற்கை இசையை மட்டுமே யூதர்களால் உருவாக்க முடிந்தது என்று வாதிட்டார். மேலும் வாக்னரைப் பொறுத்தவரையில், யூதர்கள் புகழுக்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே இசையை உருவாக்கினர் என்றும், இதன் மூலம், உண்மையான கலைப்படைப்புகளை அவர்கள் உருவாக்கவில்லை என்றார்.[34]
இறுதி வருடங்கள் 1883
[தொகு]வாக்னர் குளிர்காலப் பயணமாக குடும்பத்தோடு வெனிஸ் பயணம் மேற்கொண்டிருந்தார், அப்போது 13 பிப்ரவரி 1883 ஆம் தேதி அன்று கா வென்றமின் காலர்கி என்னும் 16 ஆம் நூற்றாண்டு கிரான்ட் கால்வாய் இருக்கும் இடத்தில் தனது 69 வது வயதில் மாரடைப்பால் இந்தப் பூவுலகைவிட்டுப் பிரிந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Newman (1976) I, 98
- ↑ Millington (2001) 271–3
- ↑ Newman (1976) I, 173
- ↑ Millington (2001) 13, 273–4
- ↑ Gutman (1990) 52
- ↑ 6.0 6.1 Millington (undated d)
- ↑ Newman (1976) I, 212
- ↑ Newman (1976) I, 214
- ↑ Newman (1976) I, 217
- ↑ Newman (1976) I, 226–7
- ↑ Newman (1976) I, 229–31
- ↑ Newman (1976) I, 242–3
- ↑ Millington (2001) 116–8
- ↑ Newman (1976) I, 249–50
- ↑ Millington (2001) 277
- ↑ 16.0 16.1 Newman (1976) I, 268–324
- ↑ Newman (1976) I, 316
- ↑ Wagner (1994c) 19
- ↑ Millington (2001) 274
- ↑ Newman (1976) I, 325–509
- ↑ Millington (2001) 276
- ↑ Millington (2001) 279
- ↑ Millington (2001) 31
- ↑ Conway (2012) 192–3
- ↑ Gutman (1990) 118
- ↑ Millington (2001) 140–4
- ↑ Wagner (1992) 417–20
- ↑ Wagner, Richard; Elli, William Ashton (1911). Family Letters of Richard Wagner. p. 154.
- ↑ Wagner (1987) 199. Letter from Richard Wagner to Franz Liszt, 21 April 1850. See also Millington (2001) 282, 285.
- ↑ Millington (2001) 27, 30; Newman (1976) II, 133–56, 247–8, 404–5
- ↑ Newman (1976) II, 137–8
- ↑ Full English translation in Wagner (1995c)
- ↑ Conway (2012) 197–8
- ↑ Conway (2012) 261–3