உள்ளடக்கத்துக்குச் செல்

மோடுரி சத்யநாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோடுரி சத்யநாராயண்
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
(நியமன உறுப்பினர்)
பதவியில்
3 ஏப்ரல் 1952 – 2 ஏப்ரல் 1966
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பிப்ரவரி 1902
தொண்டபாடு, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்புமார்ச்சு 6, 1995(1995-03-06) (அகவை 93)
துணைவர்சூரியகாந்த தேவி
வேலைசமூக ஆர்வலர், அரசியல்வாதி

மோட்டூரி சத்தியநாராயணன் (Moturi Satyanarayana) (2 பிப்ரவரி 1902 – 6 மார்ச் 1995) இந்திய இயக்க வீரரும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினரும், 1966 முடிய மாநிலங்களவையின் நியமன உறுப்பினரும் ஆவார்.[1]இவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்க பாடுபட்டவர். இவர் தமது பிற்கால வாழ்க்கையை தென்னிந்தியாவில் இந்தி மொழியைப் பரப்ப பாடுபட்டார்.

பெற்ற விருதுகள்

[தொகு]

இவரது சேவையப் பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்மசிறீ விருது மற்றும் 1962ல் பத்மபூசண் விருது வழங்கிப் பாராட்டியது.[2]

மரபுரிமைப் பேறுகள்

[தொகு]

இந்தியக் கல்வி அமைச்சகத்தின் சார்பில் இந்திய இலக்கியத்திற்கு இவரது பெயரில் ஆண்டுதோறும் மோடுரி சத்யநாராயணன் விருது வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nominated members since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடுரி_சத்யநாராயண்&oldid=3770880" இலிருந்து மீள்விக்கப்பட்டது