மே 21
Appearance
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 21 (May 21) கிரிகோரியன் ஆண்டின் 141 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 142 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.
- 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
- 1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.
- 1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தன���்.
- 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
- 1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
- 1864 – உருசிய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நடு கடத்தப்பட்டனர்.
- 1864 – இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.
- 1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிசைத் தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 1871 – முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
- 1881 – அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1904 – பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
- 1917 – அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
- 1937 – ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.
- 1939 – கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1961 – குடிசார் உரிமைகள் இயக்கம்: அலபாமாவில் நடந்த இனவன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- 1966 – வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
- 1972 – மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
- 1976 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
- 1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
- 1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1994 – யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.
- 1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
- 2001 – பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.
- 2006 – செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
- 2012 – யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]- 1471 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)
- 1527 – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (இ. 1598)
- 1780 – எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயக் கொடையாளி, சீர்திருத்தவாதி (இ. 1845)
- 1799 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லியல் ஆய்வாளர் (இ. 1847)
- 1873 – ஹான்ஸ் பெர்கர், செருமானிய நரம்பியல் நிபுணர் (இ. 1941)
- 1895 – சு. நடேசபிள்ளை, இலங்கை அரசியல்வாதி (இ. 1965)
- 1915 – சி. வி. நரசிம்மன், ஐநா உயர் அலுவலர், எழுத்தாளர் (இ. 2003)
- 1921 – ஆந்திரே சாகரவ், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 1989)
- 1930 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (இ. 2015)
- 1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், இலங்கை ஊடகவியலாளர்
- 1954 – அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர்
- 1959 – நிக் காஸ்சவேட்ஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1959 – அப்துல்லா யாமீன், மாலைத்தீவுகளின் 6வது அரசுத்தலைவர்
- 1960 – மோகன்லால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1960 – ஜெப்ரி டூபின், அமெரிக்க வழக்கறிஞர்
- 1961 – சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியலாளர், வரலாற்றாளர்
- 1967 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (இ. 2007)
- 1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (இ. 1997)
- 1974 – அதிதி கோவத்திரிகர், இந்திய நடிகை, உலக அழகி
இறப்புகள்
[தொகு]- 1639 – தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலிய சோதிடர், கவிஞர் (பி. 1568)
- 1786 – காரல் வில்லெம் சீலெ, செருமானிய-சுவீடிய வேதியியலாளர் (பி. 1742)
- 1861 – இயூஜின் டி மசெனோ, பிரான்சிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1782)
- 1911 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
- 1935 – ஜேன் ஆடம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1860)
- 1964 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
- 1991 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1944)
- 1991 – தேன்மொழி ராசரத்தினம், விடுதலைப் புல��களின் போராளி (பி. 1974)
- 2009 – க. பத்மநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1948)
- 2011 – சுவாமி அஜராத்மானந்தா, இலங்கை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- 2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
சிறப்பு நாள்
[தொகு]- விடுதலை நாள் (மொண்டெனேகுரோ, 2006)
- கடற்படை நாள் (சிலி)
- பன்னாட்டுத் தேயிலை நாள்
- உரையாடல் மற்றும் மேம்பாட்டுக்கான கலாச்சார பன்முகத்தன்மைக்கான உலக தினம்
- தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் (இந்தியா)