மேற்கு தில்லி மாவட்டம்
மேற்கு தில்லி | |
---|---|
மாவட்டம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | தில்லி மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 130 km2 (50 sq mi) |
ஏற்றம் | 219 m (719 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,43,243 |
• அடர்த்தி | 19,563/km2 (50,670/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்களவைத் தொகுதி | மேற்கு தில்லி |
உள்ளாட்சி மன்றம் | தெற்கு தில்லி மாநகராட்சி |
மேற்கு தில்லி மாவட்டம் (West Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ரஜௌரி கார்டன் ஆகும்.
ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் 11 செப்டம்பர் 2012 அன்று புதிதாக சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது.[1][2]
அமைவிடம்
[தொகு]மேற்கு தில்லி மாவட்டத்தின் வடகிழக்கில் வடக்கு தில்லி மாவட்டம், கிழக்கில் மத்திய தில்லி மாவட்டம், தெற்கில் தென்மேற்கு தில்லி மாவட்டம், வடக்கில் வடமேற்கு தில்லி மாவட்டம், மேற்கில் அரியானாவின் சஜ்ஜர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]மேற்கு தில்லி மாவட்டம் பட்டேல் நகர், பஞ்சாபி பாக் மற்றும் ரஜௌரி கார்டன் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் 31 கிராமங்களையும் கொண்டுள்ளது.
முக்கியப் பகுதிகள்
[தொகு]- ஜனக்புரி
- திலக் நகர்
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,543,243 ஆக உள்ளது. நகரங்களில் 99.75% மக்களும்; கிராமங்களில் 0.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.46% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,356,240 ஆண்களும்; 1,187,003 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 875 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 19,563 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 86.98% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.00% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.39% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 288,421 ஆக உள்ளது. [3]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,087,294 (82.07 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 149,807 (5.89 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 271,752 (10.69 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 11,322 (0.45 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 18,337 (0.72 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 1,993 (0.08 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]தேசிய தலைநகர் வலயத்யத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.