மு. சி. சம்பத்
Appearance
மு. சி. சம்பத் | |
---|---|
அமைச்சர் | |
பதவியில் 2011 - 2021 | |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011 - இன்று | |
தொகுதி | கடலூர் |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001 - 2006 | |
தொகுதி | நெல்லிக்குப்பம் |
எம். சி. சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமம் ஆகும். முதுகலைப் பட்டதாரியான இவர், 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கடலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக பணியாற்றய இவர், 2016 ஆண்டு தொழில் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இவரின் சகோதரன் எம். சி. தாமோதரன், கடலூர் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
வெற்றிபெற்ற ஆண்டுகள்
[தொகு]வருடம் | தொகுதி | முடிவு |
---|---|---|
2001 | நெல்லிக்குப்பம் | வெற்றி |
2011 | கடலூர் | வெற்றி |
2016 | கடலூர் | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
- ↑ "புதிய அமைச்சர்கள் வாழ்க்கைக் குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. Archived from the original on 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.