மாலிப்டினம் ஈரார்சனைடு
இனங்காட்டிகள் | |
---|---|
2006-24-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
As2Mo | |
வாய்ப்பாட்டு எடை | 245.79 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற திண்மம்[1] |
அடர்த்தி | 8.07 கி·செ.மீ−3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் ஈரார்சனைடு (Molybdenum diarsenide) MoAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினம் தனிமத்தின் ஆர்சனைடு உப்பு என்று இது கருதப்படுகிறது. Mo2As3, மற்றும் Mo5As4 என்பவை மாலிப்டினத்தின் இதர ஆர்சனைடுகளாகும்.[2][3]
தயாரிப்பு
[தொகு]570 பாகை செல்சியசு வெப்பநிலையில் மாலிப்டினமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினைபுரிந்தால் மாலிப்டினம் ஈரார்சனைடு உருவாகிறது.[1]
இயற்பியல் பண்புகள்
[தொகு]மாலிப்டினம் ஈரார்சனைடு கருப்பு நிறத் திண்மமாகப் படிகமாகிறது.[1] மற்றும் 0.41 கெல்வின் கடத்துத் திறன் கொண்ட ஒரு மீக்கடத்தியுமாகும்.[4] 12 என்று எண்ணிடப்பட்ட இடக்குழுவில் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது.[5] மாலிப்டினம் இருபாசுபைடு போன்ற அதே கட்டமைப்பை கொண்டுள்ளது. செறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலம் அல்லது ஐதரசன் பெராக்சைடில் இது கரையாது. ஆனால் நைட்ரிக் அமிலம், சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் மற்றும் இராச திராவகம் ஆகியவற்றில் எளிதில் கரையும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Molybdenum Arsenide, MoAs2". arsenic.atomistry.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ Murray, J.J.; Taylor, J.B.; Usner, L. (Aug 1972). "Halogen transport of molybdenum arsenides and other transition metal pnictides" (in en). Journal of Crystal Growth 15 (3): 231–239. doi:10.1016/0022-0248(72)90123-6. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022024872901236.
- ↑ Taylor, J. B.; Calvert, L. D.; Hunt, M. R. (1965-11-01). "The Arsenides of Tungsten and Molybdenum: WAs2, W2As3, MoAs2, Mo2As3, and Mo5As4" (in en). Canadian Journal of Chemistry 43 (11): 3045–3051. doi:10.1139/v65-419. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4042. http://www.nrcresearchpress.com/doi/10.1139/v65-419.
- ↑ Jane E. Macintyre (1994). Dictionary of Inorganic Compounds, Supplement 2. CRC Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-49100-9.
- ↑ Wang, Jialu; Li, Lin; You, Wei; Wang, Tingting; Cao, Chao; Dai, Jianhui; Li, Yuke (2017-11-15). "Magnetoresistance and robust resistivity plateau in MoAs2" (in en). Scientific Reports 7 (1): 15669. doi:10.1038/s41598-017-15962-w. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:29142314.
- ↑ A Text Book Of Inorganic Chemistry Volume VI Part IV Arsenic வார்ப்புரு:Web archive, Edited by J. Newton Friend, Charles Griffin, 1938.