உள்ளடக்கத்துக்குச் செல்

மாத்துவ மகாசங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாத்துவ மகாசங்கம் (Matua Mahasangha அல்லது MMS) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் (தற்கால இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம்) வாழும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நாமசூத்திரர் மக்களின் சமூகம், சமயம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, அரிசந்த் தாகூர் என்பவரால் 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்து சமயத்தின் வைணவப் பிரிவு அமைப்பாகும்.[1] அரிசந்த் தாகூரின் போதனைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதுடன், சமயம் சமூக மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்திகளையும் கொண்டுள்ளது.

மாத்துவ சங்கத்தின் சமய நோக்கு, கிருஷ்ண நாமத்தை வாய் விட்டு பஜனை செய்யும் பக்தி யோகத்தின் மூலம் ஒருவனது ஆன்மா முக்தி அடையும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் மாத்துவ சங்கத்தின் பக்தர்கள் கூட்டமாக கூடி, ஹரியின் பெயரை உரக்க உச்சரிப்பர்.

1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்காளதேசம்) வாழ்ந்த பெரும்பாலான மாத்துவ மகாசங்கத்தினர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் புலம் பெயர்ந்தனர்.[2]

மாத்துவ சங்கத்தின் தலைமையிடம் மற்றும் தாகூர் பாரி கோயில், தாகூர்நகர், மேற்கு வங்காளம்

வரலாறு

[தொகு]

நாமசூத்திரர் சமூகத்தில், வேளாண் குடியில் பிறந்தவர் அரிசந்த் தாகூர். இவரது சீடர்கள் இவரை ஆத்ம தரிசனம் பெற்றவராகவும் கிருஷ்ணரின் அவதாரமாகவும், நாமசூத்திர மக்களின் விடுதலைக்காக அவதரித்தாகவும் கருதினர்.[3] அரிசந்த் ��ாகூர் இந்து சமயத்தின் வைணவத்தின் மாத்துவப் பிரிவை நிறுவியவர்.[3] இவரது பக்தர்கள் நாமசூத்திரர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக மாத்துவ மகாசங்க இயக்கம் நிறுவினர்.

அமைப்புகள்

[தொகு]

துவக்கத்தில் மாத்துவ மகாசங்கம் தற்போதைய வங்காள தேசத்தின் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரகண்டி எனும் ஊரில் 1860-இல் நிறுவப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்த அமைப்பின் இரண்டாவது அமைப்பை மேற்கு வங்காளத்தின் தாகூர் நகரத்தில் நிறுவப்பட்டது. 2011-இல் மாத்துவ சங்கத்தின் பக்தர்கள் கிருஷ்ணர் கோயிலை நிறுவினர்.[4][5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Matua community — Why are they important for Trinamool and BJP?". indianexpress.com.
  2. "CAA will be implemented after Covid vaccination ends". The Times of India.
  3. 3.0 3.1 Bandyopadhyay, Sekhar (1995). "The Matua Sect and the Namahśūdras". In Ray, Rajat Kanta (ed.). Mind Body and Society: Life and Mentality in Colonial Bengal. Oxford University Press. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019-563757-7.
  4. "বীণাপাণি দেবীর কপি ভার্সন ২". EI Samay (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  5. Across borders, the turbulent journey of South Asia’s Matua community

மேலும் படிக்க

[தொகு]
  • Matua Dharma Darshan (in Bengali), Thakurnagar, 1393 B.S. p-47: Paramananda Halder
  • Sekhar Bandyopadhyay: Popular religion and social mobility : The Matua sect and the Namahśūdras in R.K.Ray (ed) Mind Body and Society, Life and Mentality in colonial Bengal (Calcutta) 1995
  • Hitesh Ranjan Sanyal: Social Mobility in Bengal, Calcutta,1985
  • Adal Badal (Bengali Monthly) June–July,1995 No IV and V
  • Namahśūdras Movements in Bengal (1872–1947), R.K.Biswas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88006-19-X, 2010, Progressive Book Forum, Kolkata
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்துவ_மகாசங்கம்&oldid=3134658" இலிருந்து மீள்விக்கப்பட்டது