மசாலா தோசை
சட்னியுடன் மசாலா தோசை | |
தொடங்கிய இடம் | கர்நாடகம், உடுப்பி |
---|---|
பகுதி | இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | தோசை மாவு, உருளைக் கிழங்கு |
வேறுபாடுகள் | மைசூர் மசால் தோசை, ரவை மசாலா தோசை, எலுமிச்சை மசாலா தோசை, தாள் மசாலா தோசை |
மசாலா தோசை (Masala dosa) என்பது மிகவும் பிரபலமான தென்னிந்தியச் சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாகக் கருதப்படுகிறது.[1] இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமடைந்தது.[2] இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்ததாக உள்ளது.[3] என்றாலும் இந்தியா முழுவதிலும் கிடைக்கக்கூடியது.[4] ஏன் வெளிநாடுகளிலும் கூட கிடைக்கிறது.[5][6] மசாலா தோசை தயாரிப்பு முறை நகரத்துக்கு நகரம் இடம் மாறுபடுகிறது.[7]
தயாரிப்பு முறை
[தொகு]அரிசி, உளுந்து, மற்றும் வெந்தயம் ஊற வைத்து மாவாக அரைத்து தோசை மாவு தயாரிக்கப்படுகிறது. அந்த மாவை தோசைக் கல்லில் வார்த்து அது ஒரு பக்கம் வேகும் வரை காத்திருந்து வேகவைத்த முறுவலாகத் தோசை ���ெந்த உடன் சிறிது எலுமிச்சைச் சாறு கொத்துமல்லியுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம், கடுகு மசாலாவை ஒரு கரண்டி வைத்து கமகம வாசத்துடன் பரிமாறலாம்.[8]
-
பேப்பர் மசாலா தோசை
-
மைசூர் மசாலா தோசை
-
சென்னை சிறப்பு மசாலா தோசை
-
Masala dosa
மேற்கோள்கள்
[தொகு]((reflist))
- ↑ Narayan Poojari (20 August 2017). "A taste of the coast". Deccan Chronicle.
- ↑ "India, Crisped on a Griddle: Classic Masala dosa". Food.ndtv.com. NDTV food.
- ↑ Praveen, M. P.; Krishnakumar, G. (13 June 2014). "Masala dosa slips out of reach". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/news/cities/Kochi/masala-dosa-slips-out-of-reach/article6110691.ece.
- ↑ "What A Masala dosa Costs Around The World". Huffingtonpost.in. Huffingtonpost India.
- ↑ Romig, Rollo (7 May 2014). "Masala dosa to Die For". The New York Times. https://www.nytimes.com/2014/05/11/magazine/masala-dosa-to-die-for.html?_r=0.
- ↑ "Dosa's complex spices hit the spot". Sfchronicle.com/. San Francisco chronicle.
- ↑ Ramnath, N.S.. "American Dosa". Forbes. https://www.forbes.com/2010/12/16/forbes-india-hunt-for-perfect-dosa-in-nyc.html.
- ↑ Vohra, Asha Rani (1993). Modern Cookery Book. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-223-0470-1.