பொள்ளிலூர் போர் (1781)
Appearance
பொள்ளிலூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் | மைசூர் அரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஐயிர் கூட் | ஐதர் அலி | ||||||
பலம் | |||||||
11,000[1] | தெரியவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
421[1] | 2,000+[1] |
பொள்ளிலூர் போர் ஐதர் அலி தலைமையேற்ற மைசூர் அரசு படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையேற்ற பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் படைகளுக்கும் இடையே ஆகத்து 27, 1781இல் காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் நடைபெற்ற போர். இது கம்பனி முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டு படைத்தலைவர் பெய்லி சிறைபிடிக்கப்பட்ட, 1780இல் நடைபெற்ற அதே இடத்தில் நடைபெற்றது. ஆனால் 1781இல் கம்பனியின் படைகள் இரு அணிகளாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. ஓரணி திப்பு சுல்தானின் படைகளை எதிர்கொண்டது; மற்றொன்று ஐதர் அலியை எதிர்கொண்டது. ஆனால் ஐதர் அலியின் படைகள் பெரும் தோல்வி கண்டு காஞ்சிபுரத்திற்குத் திரும்பினர்.
போருக்குப் பிறகு உணவுப்பொருட்கள் குறைபாட்டால் கூட் தனது படைகளை திருபாசூருக்கு திருப்பினார்.[1] இரு படைகளும் தத்தம் பாசறைகளுக்குத் திரும்பின; இரண்டுமே தாமே வென்றதாக கூறினர்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Roy p.85
- ↑ Ramaswami, N.S. (1984). Political History of Carnatic under the Nawabs. New Delhi: Abhinav Publications. pp. 228.
- ↑ Wilks, Mark. "Historical Sketches of the South of India, in an Attempt to Trace the History of Mysoor" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
நூற்கோவை
[தொகு]- Roy, Kaushik. War, Culture, Society in Early Modern South Asia, 1740-1849. Routledge, 2011.
- Vibart, H. M (1881). The military history of the Madras engineers and pioneers, from 1743 up to the present time, Volume 1