பேச்சு:வேலுப்பிள்ளை பிரபாகரன்
Untitled
[தொகு]யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.
வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.
பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள 'சிதம்பரா கல்லூரியில்" 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் ஆங்கிலம் கற்பதும் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே வாழ்வின் இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தன. ஆனால் பிரபாகரன் அவர்களின் சிந்தனையோட்டம் சிறுவயதிலேயே வேறுவிதமாக இருந்தது.
தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவைகளே ஆழமான வடுவையும் ஏற்படுத்திவிட்டன. அதிலும் குறிப்பாகப் பிரபாகரன் அவர்கள் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழன அழிவில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. சிங்கள இனவெறியரால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டதோடு, அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறியபோதும் சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதையெல்லாம் அவர் அறிந்தபோதும் தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உத்வேகம் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.
இதனால் பிரபாகரன் அவர்கள் படிக்கும் சிறுவனாக இருந்தபோது அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து கைக்குண்டுகளைத் தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் அவர்கள் கைக்குண்டுகளைத் தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாகக் குண்டு வெடித்து அவரது காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியது. அதனால் ~கரிகாலன்~ என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்குச் சிறுவயதிலேயே அமைந்தது.
தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல சிங்கள அரசின் ~தரப்படுத்தல் கொள்கை~ ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. மகன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடி வந்தது. ஒருமுறை பிரபாகரன் அவர்களைத் தேடி காவற்துறையினர் வந்தனர். அதிகாலை 3 மணிக்கு அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே காவற்துறையினர் வந்துவிட்டனர் என்பதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் அவர்கள் யாரும் அறியாமல் தப்பிவிட்டார். பிரபாகரன் அவர்களின் தாய் கதவைத் திறந்தபோது ஏராளமான காவற்துறையினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்.
ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் ~இரகசிய இயக்கத்தில்~ இருக்கிறார் என்ற செய்தியை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் காவற் துறையினர் சோதனையிட்டனர். இறுதியில் பிரபாகரன் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் காவற் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபாகரன் அவர்கள் தன் வீட்டிற்குத் திரும்பவே இல்லை. பிரபாகரன் அவர்கள் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்தபோது அவரது தந்தையார் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அவரை வீட்டிற்கு அழைத்துவந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் அவர்கள் தன் பெற்றோரிடம் பின்வருமாறு கூறினார். "உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒருபோதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எத்தகைய தொல்லையும் வேண்டாம். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலையில் ஈடுபடத் தொடங்கினார்
நடுநிலை
[தொகு]இவரைப் பற்றிய குற்றச்சாட்டுக்களையும் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:07, 25 ஏப்ரல் 2009 (UTC)
- இவர் குற்றமற்றவர் −முன்நிற்கும் கருத்து 116.202.142.131 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
இறப்பு நாள்
[தொகு]ஆங்கில விகியில் இது மே 18 என கொடுக்கப் பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும்--92.39.200.17 09:33, 10 ஜூன் 2009 (UTC)
- இரண்டு தேதிகளுக்கும் இப்போது மேற்கோள்கள் கொடுத்துள்ளேன். நன்றி.--Kanags \பேச்சு 10:32, 10 ஜூன் 2009 (UTC)
இப்போது எந்த தேதியுமே காணோமே?!
தேவையற்ற மாற்றம்
[தொகு]செல்வா, நான் முதலில், `தி ஹிந்து`வின் கட்டுரையை வெளி இணைப்பாக கொடுத்தேன். ஏன் அதை மாற்றி போடுகிறீர்கள்.? இது தேவை அற்றது.--92.39.200.17 22:25, 10 ஜூன் 2009 (UTC)
- த இந்து அல்லது தி இந்து என்று இருப்பது சரியாக இருக்கும் என்பதால் மாற்றினேன். இந்து மதம், இந்தி, இதோளம் என்னும் இராகம் என்பதெல்லாம் வழக்கம்தானே. அது போலவே இந்து நாளிதழை த இந்து என்று இடுவது சரியென்று இட்டேன். --செல்வா 23:57, 10 ஜூன் 2009 (UTC)
- ஆம், இந்து என்பது பொதுவழக்கும் பெற்றது. இதைப் பயன்படுத்துவது முறை��ே. (ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூடத் தமிழ்நாட்டில் அவ்வாறே பயன்படுத்துவதாக நினைவு.) -- சுந்தர் \பேச்சு 02:57, 11 ஜூன் 2009 (UTC)
- `இந்து` பொது வழக்கு என்பதற்கு ஆதாரம் என்ன? `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அமைப்பினர் அப்படி எழுதினாலும் அது பொது அமைப்பு ஆகாது. `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அப்படி எழுதுகிறனர் என்பதற்கு ஆதாரம் என்ன? தமிழ் கூகிளில் போட்டு தேடினால் ’ஆர்.எஸ்.எஸ்.’ 162,000 பதில்களை கொடுக்கிறது. ஆர்.எசு.எசு. என தேடினால் அந்த அமைப்பை குறிக்க 1000 பதில்கள் கூட வருவதில்லை. பயனர் சுந்தர் பொது வழக்கிலிருந்து பெரிதும் மாறுபவர் போலுள்ளது. ஹிண்டு என்ற சொல்லிற்கு 3300 மேல் பதில்கள் வருகின்றன. இவை இந்த பத்திரிகையை குறிப்பதாகும்.’இந்து’ என்பதில் பல பதில்கள் வருகின்றன, ஆனால் அவை அப்பத்திரிகையை குறிப்பவை அல்ல.--92.39.200.17 08:06, 11 ஜூன் 2009 (UTC)
- ஆர். எசு. எசு. என்று அவர்கள் எழுதவில்லை, அது நான் பேச்சுப் பக்கத்தில் பயன்படுத்துவது. ஆனால் இந்து, இந்து முன்னணி, த இந்து என்று பயன்படுத்துவது பொது நடையும் ஆகும். தேடுபொறிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை பலமுறை இங்கு உரையாடியுள்ளோம். இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டதால் தருகிறேன்:
- யாகூ தேடலில் 'இந்து நாளிதழ்' (5,26,000 பக்கங்கள்)
- யாகூ தேடலில் 'ஹிந்து நாளிதழ்' (1,640 பக்கங்கள்)
- கூகிளில் 'இந்து நாளிதழ்' (11,000 பக்கங்கள்)
- கூகிளில் 'ஹிந்து நாளிதழ்' (5,230 பக்கங்கள்)
- தேடுபொறிக்குத் தேடுபொறி பக்கங்களின் எண்ணிக்கை இவ்வளவு வேறுபடுவது இம்முறையைக் கொண்டு பொதுவழக்கைக் கணிக்க முடியாது என்பதற்கான மற்றொரு சான்று. தவிர, ஏற்கெனவே சொல்லியபடி பொதுவழக்கில் எழுதுவதற்கு இது வலைப்பதிவோ, செய்தித்தாளோ அல்ல. கலைக்களஞ்சியம். இதற்கென தனி நடை, செந்தமிழ் நடையைப் பயன்படுத்துவது பொருத்தம். கிரந்தமே வேண்டாமென்று கூட சொல்லவில்லை, பொது வழக்கு இருக்கும் இடங்களிலாவது கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறேன். அது சரி, ஒலிப்புத் துல்லியம் தான் முதன்மை என்றால் நீங்கள் இந்து என்பதை இண்டு என்று மாற்ற வேண்டுமென்று ஏன் கோரவில்லை? கிரந்தம் விடுபடுவது தான் உறுத்துகிறதா? -- சுந்தர் \பேச்சு 09:24, 11 ஜூன் 2009 (UTC)
- நீங்கள் 2 வார்த்தைகளைப் போட்டு தெடினால், எல்லா பதில்களும் 2 வார்த்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தருவன அல்ல. இந்த இரண்டு தேடல்களிலும், ’ஹிந்து நாளிதழ்’ என்பது கடைசி பக்கம் வரை ஒன்றக வருகிறது. மேலும் இப்படி காலச்சுவடு, கீற்று, திண்ணை, வரலாறு, தமிழ் ஹிந்து போன்ற இலக்கிய தளங்களும் எழுதுகிறன.’இந்து நாளிதழ்’ முதல் 2,3 பக்கங்களுக்கு அப்பால் பிரிந்து காணப் படுகிரது. அதனால் நீங்கள் ஹிந்து என்று பலர் எழுதுகிறார்கள் என புரிந்து கொள்ளலாம். எனக்கு இந்து என்று யாராவது எழுதினால், ஆட்சேபணை இல்லை. ஆனால் ஹிண்டு தவறு என்று மாற்றுவது, உங்கள் சாய்வுகளை மற்றவர் மீது திணிப்பதாகும். மற்றோர் இடத்தில் பயனர் `ரவிட்ரீம்ஸ்` இயல்பான எழுத்துகளை மாற்ற மாட்டோம் என் உறுதி இட்டாரே! ஒரு ஆங்கில பத்திரிகையின் பெயரை `தி` யா `த` வா என்பதை பெரிய பிரச்சினை ஆக்குவது ஒரு பக்கம், பொது வழக்கற்ற எழுத்துகளை பின்பற்றுவது மற்றொரு பக்கம். --92.39.200.17 09:50, 11 ஜூன் 2009 (UTC)
- ஆர். எசு. எசு. என்று அவர்கள் எழுதவில்லை, அது நான் பேச்சுப் பக்கத்தில் பயன்படுத்துவது. ஆனால் இந்து, இந்து முன்னணி, த இந்து என்று பயன்படுத்துவது பொது நடையும் ஆகும். தேடுபொறிகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை பலமுறை இங்கு உரையாடியுள்ளோம். இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டதால் தருகிறேன்:
- `இந்து` பொது வழக்கு என்பதற்கு ஆதாரம் என்ன? `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அமைப்பினர் அப்படி எழுதினாலும் அது பொது அமைப்பு ஆகாது. `ஆர்.எசு.எசு. அமைப்பினர் ` அப்படி எழுதுகிறனர் என்பதற்கு ஆதாரம் என்ன? தமிழ் கூகிளில் போட்டு தேடினால் ’ஆர்.எஸ்.எஸ்.’ 162,000 பதில்களை கொடுக்கிறது. ஆர்.எசு.எசு. என தேடினால் அந்த அமைப்பை குறிக்க 1000 பதில்கள் கூட வருவதில்லை. பயனர் சுந்தர் பொது வழக்கிலிருந்து பெரிதும் மாறுபவர் போலுள்ளது. ஹிண்டு என்ற சொல்லிற்கு 3300 மேல் பதில்கள் வருகின்றன. இவை இந்த பத்திரிகையை குறிப்பதாகும்.’இந்து’ என்பதில் பல பதில்கள் வருகின்றன, ஆனால் அவை அப்பத்திரிகையை குறிப்பவை அல்ல.--92.39.200.17 08:06, 11 ஜூன் 2009 (UTC)
- ஆம், இந்து என்பது பொதுவழக்கும் பெற்றது. இதைப் பயன்படுத்துவது முறை��ே. (ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூடத் தமிழ்நாட்டில் அவ்வாறே பயன்படுத்துவதாக நினைவு.) -- சுந்தர் \பேச்சு 02:57, 11 ஜூன் 2009 (UTC)
- இது தேவையற்ற வாதம் என்றே தோன்றுகிறது. The Hindu என்ற பத்திரிகைப் பெயரை அப்படியே த ஹிண்டு அல்லது த இண்டு என்று எழுதுவதே முறை. அவ்வாறே ஆங்கிலத் திரைப்படங்கள், மற்றும் பெயர்களை அவற்றின் ஒலிப்பிற்கேற்ற எழுதுகிறோம். அதற்காக hindu என்ற பொதுவான சொல்லை ஹிந்து அல்லது ஹிண்டு என்று எழுதச் சொல்லவில்லை. எனினும் பெரும்பான்மையோரின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.--Kanags \பேச்சு 08:18, 11 ஜூன் 2009 (UTC)
- கனகு, கிரந்தம் தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாத நிலையில் நாம் பெரும்பான்மையான இடங்களில் கிரந்தத்தைத் தவிர்க்கவே இல்லை. ஆனால் இந்துவைப் பொருத்தமட்டில் பொது வழக்கில் த இந்து என்பதும் பரவலாகத்தான் உள்ளது. அதனால் தான் இந்த வாதம். த இந்து என்ற கட்டுரையின் உள்ளே இந்த எல்லா மாற்றுப் பயன்பாடுகளையும் தருவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இப்போது இவர் ஆர். எஸ். எஸ் என்று ஒரு கட்டுரை எழுதினால் நாம் ஒன்றும் மாற்றப் போவதில்லை. காஸிரங்கா என்று எழுதினால் காசிரங்கா என்று மாற்றுவோம். ஏனென்றால் இந்த தலைப்புகள் இங்கேதான் அறிமுகம் ஆகின்றன, காசிரங்கா ஒலிப்பும் நெருங்கித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:24, 11 ஜூன் 2009 (UTC)
- நான் பொதுவாக எல்லோரும் பின்பற்றும் வழக்கத்தைத்தான் கடைப் பிடிக்கிறேன். ‘சாஸிரங்கா’ என எழுத மாட்டேன், ஏனெனில் காசிரங்கா தான் வழக்கு. தமிழில் ஆங்கில Z ஐ , ச என தான் எழுதுகிறோம்.என் அளவுகோல், ‘ஒலிப்பு’ முறை சரியா, தப்பா என்றில்லை; வழக்கமா, இல்லையா - அதுதான்.--92.39.200.17 09:55, 11 ஜூன் 2009 (UTC)
- கனகு, கிரந்தம் தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாத நிலையில் நாம் பெரும்பான்மையான இடங்களில் கிரந்தத்தைத் தவிர்க்கவே இல்லை. ஆனால் இந்துவைப் பொருத்தமட்டில் பொது வழக்கில் த இந்து என்பதும் பரவலாகத்தான் உள்ளது. அதனால் தான் இந்த வாதம். த இந்து என்ற கட்டுரையின் உள்ளே இந்த எல்லா மாற்றுப் பயன்பாடுகளையும் தருவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இப்போது இவர் ஆர். எஸ். எஸ் என்று ஒரு கட்டுரை எழுதினால் நாம் ஒன்றும் மாற்றப் போவதில்லை. காஸிரங்கா என்று எழுதினால் காசிரங்கா என்று மாற்றுவோம். ஏனென்றால் இந்த தலைப்புகள் இங்கேதான் அறிமுகம் ஆகின்றன, காசிரங்கா ஒலிப்பும் நெருங்கித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:24, 11 ஜூன் 2009 (UTC)
தேவையான மாற்றம்
[தொகு]பெயரில்லா நண்பருக்கு,
the ஐ தி அல்லது த எப்படி எழுதினாலும் சரி.
தி ஹிந்துவை தி இந்துவாக எப்படி மாற்றலாம் என்பதே வாதம். இதற்குச் சான்றாக 92.39.200.17 கீற்று, திண்ணை, வரலாறு, காலச்சுவடு, தமிழ் இந்து ஆகிய இதழ்களை எடுத்துக்காட்டாகத் தந்திருக்கிறார்.
//`இந்து` பொது வழக்கு என்பதற்கு ஆதாரம் என்ன? `//
தேடுபொறி முடிவுகளை வைத்து முடிவெடுப்பது புள்ளியியல் அடிப்படையில் தவறு என்பது பல முறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இருந்தாலும், வாதத்துக்காக குறிப்பிட்ட ஆதாரங்களில் இருந்து தேடு பொறி முடிவுகள். "தி ஹிந்து" என்ற சொற்கூட்டே தேடப்படிருக்கிறது. (phrase search). எனவே, இந்து மதத்தைக் குறிக்கும் சொல் வந்து முடிவுகளைத் தவறாக காட்ட வழியில்லை:
தி இந்து
திண்ணை - 120 - http://www.google.com/search?hl=en&q=site:thinnai.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
காலச்சுவடு - 4 - http://www.google.com/search?hl=en&q=site:kalachuvadu.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=
கீற்று - 118 - http://www.google.com/search?hl=en&q=site:keetru.com+"தி+இந்து"&btnG=Search&aq=f&oq=&aqi=
வரலாறு - 4 - http://www.google.com/search?hl=en&q=site:varalaaru.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=
tamilhindu - 2 - http://www.google.com/search?hl=en&q=site:tamilhindu.com+"தி+இந்து"&aq=f&oq=&aqi=
தி ஹிந்து
திண்ணை - 76 - http://www.google.com/search?hl=en&q=site:thinnai.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
காலச்சுவடு - 2 - http://www.google.com/search?hl=en&q=site:kalachuvadu.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
கீற்று - 38 - http://www.google.com/search?hl=en&q=site:keetru.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
வரலாறு - 1 - http://www.google.com/search?hl=en&q=site:varalaaru.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
tamilhindu - 6 - http://www.google.com/search?hl=en&q=site:tamilhindu.com+"தி+ஹிந்து"&aq=f&oq=&aqi=
பெயரிலா நண்பர் மேற்கோள் காட்டிய எல்லா தளங்களிலும் (TamilHindu தவிர. tamilhindu தளத்தின் கிரந்த ஆதரவு எழுத்து நடை கொள்கை அறிந்ததே. இருந்தாலும் எடுத்துக் கொள்கிறேன். தமிழோசை இதழ்களில் இருந்து நானும் எடுத்துக்காட்டுகள் தரலாமா?) கூட தி இந்து என்று எழுதும் வழக்கமே முந்துகிறது.
இப்படியே ஒவ்வொரு சொல்லுக்கு தேடுபொறியை மேற்கோள் காட்டி எழுதினால், விடிந்து விடும். தயவுசெய்து இன்னொரு முறை இப்படி அலைக்கழிக்க வேண்டாம்.
கனகு,
//The Hindu என்ற பத்திரிகைப் பெயரை அப்படியே த ஹிண்டு அல்லது த இண்டு என்று எழுதுவதே முறை. //
இதில் எனக்கு உடன்பாடில்லை. Hindu சமயம் இந்து சமயம் என்றால், Hindu நாளிதழ் இந்து நாளிதழ் தான். ஒரே ஆங்கில எழுத்துச் சொல் கூட்டலுக்கு வெவ்வேறு தமிழ் எழுத்துக் கூட்டல் தருவது தேவை அற்றது.
தி இந்து என்று எழுதுவது:
- பரவலான பொது வழக்கத்துக்கு உட்பட்டது.
- தமிழ் இலக்கண வழக்கத்துக்கு உட்பட்டது.
- தமிழ் வழக்கு, பிற மொழி வழக்கு இருக்கையில் தமிழ் வழக்குக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற தமிழ் விக்கியின் அடிப்படை கொள்கைக்கு உட்பட்டது.
- கூகிள் தேடுபொறியை ஆதாரம் காட்டுவது/இண்டெர்நெட் இணைகளை ஆதாரம் கட்டுவது பொது வழக்கத்திற்கு மட்டும் அல்ல, ஜனரஞ்சக ஊடகங்கள், இலக்கியவாதிகள் எப்படி எழுதிறார்கள் என்பதற்குதான். நீங்கள் சுட்டி கட்டிய படி, ஹிண்டு, ஹிந்து, இந்து என்று ஒரே வார்த்தையை சில விதமாக எழுதுகிறார்கள் - இம்மூன்று முறைகளும் சரிதான். மூன்றும் பொது வழக்கம்தான். நான் ஒரு பொது வழக்கத்தில் எழுதியதால், அதை மாற்றியது சரியல்ல. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் ‘இந்து’ என எழுதினால் நான் நிச்சியமாக ஆட்சேபிக்க மாட்டேன். எவ்வளவோ இலக்கண தவறுகளும், தகவல் தவறுகளும், தகவல் குறைபாடுகளும் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யாமல், கிரந்தத்தின் மேல் உள்ள Obsession சீற்குலைக்கும் வழியே. மேலும் நேற்றுதான் நீங்கள் ‘நீங்கள் இயல்பாக எழுதுங்கள், யாரும் மாற்ற மாட்டார்கள்’ என கூறி விட்டு, இன்று ‘தவிற்பு நடனம்’ ஆடுகிறீர்களே.--92.39.200.17 12:09, 11 ஜூன் 2009 (UTC)
//மூன்றும் பொது வழக்கம்தான்.//
பல பொது வழக்கங்கள் இருந்தால் அதில் தமிழ் எழுத்துக்களை மட்டும் கொண்டுள்ள வழக்கத்துக்கு முன்னுரிமை தருவது தமிழ் விக்கியின் அடிப்படை கொள்கைகளின் ஒன்று. செல்வாவின் மாற்றம் இந்தக் கொள்கைக்கு உட்பட்டதே. இத்தகைய மாற்றங்களில் தலையிட முடியாது.
தவிர்ப்பு என்று ஒரு எளிய சொல்லைக் கூட பிழை விடாமல் எழுதத் தெரியாத, உங்களைப் போன்றோரிடம் இருந்து விக்கியின் தமிழ் நடை பற்றி நாங்கள் பாடம் கேட்க வேண்டி இருப்பது தான் தமிழ் விக்கியின் பெரிய சாபக் கேடாக இருக்கிறது.
விக்கியில் உன் கட்டுரை என் கட்டுரை என்று ஏதும் இல்லை. எல்லாம் கூட்டு முயற்சி தான். rajasthan கட்டுரையை இராசத்தான் என்று எழுதியது சர்ச்சை ஆனது. அதை மீள ராஜஸ்தான் என்று மாற்றி விட்டு செல்வம் அவர்களின் கட்டுரைப் பணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தே வருகிறோம். இன்னும் அவரது பல கட்டுரைகளில் கிரந்தம் உள்ளது. அங்கு தலையிடுகிறோமா? ஆனால், இந்த நன்னம்பிக்கையைச் சாக்காக வைத்து, "ஏற்கனவே நன்கு தமிழ்வழிப்பட்ட சொற்களைக் கூட கிரந்தம் கலந்து தான் எழுதுவேன், நீங்கள் தலையிடக்கூடாது" என்றால் ஒத்து வராது. --ரவி 12:24, 11 ஜூன் 2009 (UTC)
--ரவி 12:19, 11 ஜூன் 2009 (UTC)
என்னை வம்புக்கு இழுக்கவில்லையென்றால் ரவிக்கு தூக்கம் வருவதில்லை. 10 சதவீதம் இருக்கும். அது தவிர்க்கமுடியாத இடங்களில் வரும் அவ்வப்பொழுது மாற்றுகின்றேன். கிரந்தம் தட்டச்சு செய்வது சற்றுக் கடினமானதும் கூட அவற்றை நான் விரும்புவதும் இல்லை. பல நேரங்களில் அந்த எழுத்துகள் மறந்து விடுகின்றது. அவ்வப்பொழுது மழலையர் புத்தகத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்கின்றேன்.(6 எழுத்தா 5 எழுத்தா சந்தேகம்-இரண்டு எழுத்துதான் அதிகம் தெரியும்) அதிலும் இரண்டு எழுத்துக்ளைத்தான் அதிகம் பயன் படுத்துகின்ற சூழ்நிலை ஜ, ஸ் (இதில் நெடில், குறில் வரும்) மீதியெல்லாவற்றிற்கும் உயிர் எழுத்து இருக்கின்றது. பெயர்களில் மாற்றுவதில்லை அவர் பதிவு செய்திருப்பதை பொறுத்து. மற்றவைகளில் மாற்றுகின்றேன். ஊர் பெயர்களில் சில இடங்களில் மாற்றுவதில்லை. பொருள் தராமல் மாற்றுவதில்லை. இது தற்கால நடைமுறையில் நான் எடுத்த முடிவு முன்பு உங்களைப்போலத்தான். கிரந்தம் உச்சரிப்பது ஆயுளை குறைக்கும் எனத் தமிழ் அறிஞர்களின் கருத்து. அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். ஆகையால் சீக்கிரம் மோட்சம் அடைய அந்த உச்சாடணைகளை கொண்டனர் என்று திராவிட பற்றாளர்கள், ஆய்வாளர்கள் கருத்து. என்னுடைய கருத்தல்ல வம்புக்கு வராதீர். இவ்விடயத்தில் சற்று நடுநிலையே வகிக்கின்றேன். ஏற்கனவே கிரந்தத்திற்கு மாற்று சொல் பொருளுடன் கண்டுபிடிப்பது நல்லது என்ற கருத்தில் நான் மாறுபடவில்லை. அதுவரை தவிர்க்க முடியாத இடங்களில் வருவதை.............--செல்வம் தமிழ் 14:26, 18 ஜூன் 2009 (UTC)
பிரபாகரன் தபால்தலை
[தொகு]இதுகுறித்து கொடுக்கப்பட்டுள்ள செய்தியின் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.
மேற்கோள் எண் 11ல்- லாபோஸ்ட் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது அப்படியான முத்திரை எதுவும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை, என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சத்தியராஜ் (பேச்சு) 04:38, 24 மார்ச் 2015 (UTC)
பிரான்ஸ் தூதரகம் மேற்படி முத்திரைக்கு பிரான்ஸின் அஞ்சல் துறை அனுமதியளிக்கவில்லை என்று கூறியிருப்பதால் மேற்படி பொய்த் தகவல் நீக்கப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 05:20, 22 நவம்பர் 2015 (UTC)