உள்ளடக்கத்துக்குச் செல்

பூமரா கோயில்

ஆள்கூறுகள்: 24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமரா கோயில்
பர்குலீஸ்வரர் கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் சிவனுக்குரிய கற்கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பூம்ரா, நகோட்
புவியியல் ஆள்கூறுகள்24°25′42.1″N 80°38′29.6″E / 24.428361°N 80.641556°E / 24.428361; 80.641556
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியபிரதேசம்
மாவட்டம்சத்னா[1]

பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில், பூப்பரா கோயில், பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.[2][3][4]சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5]தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கோயிலில் மகிஷாசூரனை கொன்ற துர்கை மற்றும் விநாயகர், முருகன், விஷ்ணு, பிரம்மா, யமன், குபேரன், சூரியன், ���ன்மதன் போன்ற தேவர்களின் சிற்பங்கள் உள்ளது.[7][5][8]

சூரியச் சிற்பம், பூமரா கோயில்

காலம்

[தொகு]

1920-இல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குப்தர் காலத்து இக்கோயிலின் காலம், கிபி 5-6-ஆம் நூற்றாண்டு காலத்தவை என தொல்லியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.[9][10][5][11]

பூமரா சிவன் கோயிலின் கருவறை, ஆண்டு 1919
பூமரா சிவன் கோயில் கருவறை ஜன்னலின் புகைப்படம், ஆண்டு, 1919

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bhumra temple". Archaeological Survey of India, Bhopal Circle.
  2. George Michell 1988, ப. 39, 95.
  3. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-9865-6., Quote: "Other examples are the fifth-century Siva temple at Bhumara which has a fine ekamukha (single faced) linga, a sixth century Dasavatara temple at Deogarh (...)".
  4. Bhumra (Bhumara) Shiva temple, viewed from south, Gupta Dynasty, India, ca. 5th-6th century A.D. C. Krishna Gairola (1975), University of Washington
  5. 5.0 5.1 5.2 Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05666-1.
  6. Ulrich Wiesner (1978). Nepalese Temple Architecture: Its Characteristics and Its Relations to Indian Development. BRILL Academic. pp. 46–48, 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-05666-1.
  7. Radhakumud Mookerji (1959). The Gupta Empire. Motilal Banarsidass. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0440-1.
  8. Banerji 1998, ப. 9-10, with Plates XII-XV.
  9. Heather Elgood (2000). Hinduism and the Religious Arts. Bloomsbury Publishing. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-9865-6.
  10. Frederick M. Asher (1980). The Art of Eastern India: 300 - 800. University of Minnesota Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4529-1225-7.
  11. Michael W. Meister (1984). Discourses on Siva. University of Pennsylvania Press. p. 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-7909-2.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமரா_கோயில்&oldid=3777667" இலிருந்து மீள்விக்கப்பட்டது