உள்ளடக்கத்துக்குச் செல்

புஷ்பதந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்பதந்தர்
புஷ்பதந்தர்
சிகார்ஜியில் உள்ள புஷ்பதந்தரின் சிற்பம்
அதிபதி9வது தீர்த்தங்கரர்
வேறு பெயர்கள்சுவிதிநாதர்

சமண சமயத்தின் 9வது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் (Puṣpadanta), சுவிதிநாதர் [1] என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். சமண சமயச் சாத்திரங்களின் படி, புஷ்பதந்தர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராகி அருகதர் நிலைக்கு உயர்ந்தவர்.

புஷ்பதந்தர், சுக்ரீவன் - சுப்பிரியா இணையருக்கு, தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியாவில் உள்ள குக்குந்தூ எனுமிடத்தில் பிறந்தவர்.

புஷ்பதந்தர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தவர்.[2]

வெண்நிறம் கொண்ட புஷ்பதந்தரின் வாகனம் முதலை ஆகும். பூ பவழமல்லி, காவல் தேவதைகள் அஜிதன் எனும் யட்சனும்; மகாகாளி எனும் யட்சினி ஆவார்கள்.[3]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Tukol 1980, ப. 31.
  2. "Puṣpadanta or Suvidhi". Archived from the original on 2017-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
  3. Tandon 2002, ப. 44.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பதந்தர்&oldid=3564496" இலிருந்து மீள்விக்கப்பட்டது