புஷ்கலாவதி
புஷ்கலாவதி பண்டைய நகரம் پُشْكَلآوَتي | |
---|---|
புஷ்கலாவதி நகரத்தின் சிதிலங்கள் | |
மாற்றுப் பெயர் | புஷ்கலாவதி |
இருப்பிடம் | சார்சத்தா கைபர் பக்துன்வா மாகாணம் பாக்கித்தான் |
ஆயத்தொலைகள் | 34°10′05″N 71°44′10″E / 34.168°N 71.736°E |
வகை | பண்டைய நகரங்கள் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 1400 |
காலம் | காந்தாரம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1902 |
அகழாய்வாளர் | ஜான் மார்ஷல் மோர்டைமர் வீலர் |
புஷ்கலாவதி (Pushkalavati) (பஷ்தூ மற்றும் உருது: پُشْكَلآوَتي பண்டைய பரத கண்டத்தின் வடமேற்கில் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்த காந்தார நாட்டின் தலைநகரம் ஆகும்.[1] கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை, அகாமனிசியப் பேரரசின் கிழக்குப் பிரதேசத்தில் புஷ்கலாவதி நகரம் சிறப்புடன் விளங்கியது.
தற்போது பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சார்சத்தா மாவட்டத்தின் தலைநகரான சார்சத்தா நகரத்தில் பாயும் சுவாத் ஆறு-காபுல் ஆறுகள் கலக்குமிடத்தில் புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை புஷ்கலாவதிகண்டறியப்பட்டது.[2][3]
பண்டைய வரலாற்றில் புஷ்கலாவதி
[தொகு]சொராஷ்டிரிய சமய வேத நூலான அவெத்தாவில், புஷ்கலாவதி நகரத்தைச் சுற்றிய பகுதிகளை, கடவுள் அகுரா மஸ்தா படைத்தார் எனக்கூறுகிறது. பாக்திரியாவின் மணிமகுடம் என அழைக்கப்படும் புஷ்கலாவதி நகரம், பண்டைய தட்சசீலத்தின் அருகில் உள்ளது. [4]
பெயர்க்காரணம்
[தொகு]சமஸ்கிருத மொழியில் புஷ்கலாவதி (पुष्कलावती) எனில் தாமரை போன்ற வடிவில் அமைக்கப்பட்ட நகரம் எனபொருளாகும். இராமாயணக் காவியத்தின்படி, இராமரின் தம்பியான பரதனின் மகன் புஷ்கலன் என்பவர் நிறுவியதாக அறியப்படுகிறது.[5]
புஷ்கலாவதியின் சிதிலங்கள்
[தொகு]பண்டைய புஷ்கலாவதி நகரத்தில் பால ஹிசார் போன்ற இரண்டு தொல்லியல் களங்களில் சிதிலமடைந்த கிமு 2-ஆம் நூற்றாண்டின் பௌத்தச் சிற்பங்கள், தூபிகள், விகாரைகள் அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டது. [6][7]மேலும் இத்தொல்லியல் களத்தில் கிமு 1420-1160 மற்றும் கிமு 1400 - 800 காலத்திய மெருகூட்டப்பட்ட சிவப்பு மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டது. [8] இரண்டாம் அகழ்வாய்வில் கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவப்பு மட்பாண்ட அகண்ட கிண்ணங்கள் கண்டறியப்பட்டது.[9]
கிமு ஆறாம் நூற்றாண்டின் அகாமனிசியப் பேரரசின் கிழக்கில் உள்ள காந்தார மாகாணத்தின் மையமாக புஷ்கலாவதி நகரம் விளங்கியது.[10] பண்டைய புஷ்கலாவதி நகரத்தின் தொல்லியல் களத்தை முதன்முதலில் 1902-இல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஜான் மார்ஷல் அகழ்வாய் மேற்கொண்டார். 1962-இல் மோர்டைமர் வீலர் அகாமனிசியப் பேரரசின் தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sagar, Krishna Chandra (1992). Foreign Influence on Ancient India. Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172110284.
- ↑ Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 515.
- ↑ Coningham, R.A.E. and C. Batt, 2007. "Dating the Sequence", in R.A.E. Coningham and I. Ali (eds.), Charsadda: The British-Pakistani Excavations at the Bala Hisar, Society for South Asian Studies Monograph No. 5, BAR International Series 1709, Archaeopress, Oxford, pp. 93-98
- ↑ Encyclopædia Britannica: Gandhara பரணிடப்பட்டது 29 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Gandhara and Its Art Tradition, Ajit Ghose, Mahua Publishing Company, 1978, p. 14
- ↑ Investigating ancient Pushkalavati Pushkalavati Archaeological Research Project
- ↑ Ali et al. 1998: 6–14; Young 2003: 37–40; Coningham 2004: 9.
- ↑ Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 515.
- ↑ Petrie, Cameron, 2013. "Charsadda", in D.K. Chakrabarti and M. Lal (eds.), History of Ancient India III: The Texts, Political History and Administration til c. 200 BC, Vivekananda International Foundation, Aryan Books International, Delhi, p. 516.
- ↑ Rafi U. Samad, The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys. Algora Publishing, 2011, p. 32 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0875868592
வெளி இணைப்புகள்
[தொகு]- Investigating ancient Pushkalavati Pushkalavati Archaeological Research Project
- Map of Gandhara archaeological sites, from the Huntington Collection, Ohio State University (large file)