பி. தாணுலிங்க நாடார்
பரமார்த்தலிங்க தாணுலிங்க நாடார் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (நாகர்கோவில் மக்களவைத் தொகுதி) | |
பதவியில் 1957–1962 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருவிதாங்கூர் இராச்சியம், கேரளா | 17 பெப்ரவரி 1915
இறப்பு | 3 அக்டோபர் 1988 ஏரல், தூத்துக்குடி மாவட்டம் | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு இந்து முன்னணி |
தொழில் | அரசியல்வாதி இந்து இயக்க செயற்பாட்டாளர் |
சமயம் | இந்து |
பி. தாணுலிங்க நாடார் (P. Thanulinga Nadar, 17 பெப்ரவரி 1915 – 3 அக்டோபர் 1988), இந்திய அரசியல்வாதியும், கன்னியாகுமரி விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினரும், இந்து முன்னணியின் தமிழகத் தலைவராகவும் இருந்தவர்.
இளமை
[தொகு]தாணுலிங்கம், 17 பெப்ரவரி 1915இல் எம். பராமார்த்த லிங்கம் என்பவருக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தற்கால அகத்தீஸ்வரம் வட்டம், பொற்றையடி கிராமத்தில் பிறந்தவர்.[1] இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் சட்டப் படிப்பை முடித்த தாணுலிங்கம் காங்கிரசால் ஈர்க்கப்பட்டு, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் காமராசரால் ஈர்க்கப்பட்டு, 1956இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார்.
அரசியல்
[தொகு]இளமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியில் இணைந்து, குமரி விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டார்.
தாணுலிங்க நாடார், அகஸ்தீஸ்வரம் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து, 1948, 1951 மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.[1][2]
1957இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, தாணுலிங்க நாடார், நாகர்கோவில் மக்களவைத் தொகுதியிலிருந்து, மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
தாணுலிங்க நாடார், 9 சூலை 1964 முதல் 2 ஏப்ரல் 1968 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர்.[1]
இந்து முன்னணி தலைவராக
[தொகு]தாணுலிங்க நாடார், 16 மார்ச்சு 1982இல் இந்துத்துவா இயக்கமான இந்து முன்னணியின் தமிழகத் தலைவராக, தமது 73வது அகவை வரை பணியாற்றியவர். மண்டைக்காடு கலவரத்தின் போது தாணுலிங்க நாடார் 17 பெப்ரவரி 1983இல் கைது செய்யப்பட்டார்.[5]
குடும்பம்
[தொகு]தாணுலிங்க நாடார், இளம் வயதில் மணந்த நட்சத்திரம்மாளின் மறைவிற்குப் பின் இராமநாயகம் அம்மாளை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Rajya Sabha Biography". Parliament of India. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
- ↑ "Statistical Report on General Election 1954 to the Legislative Assembly of Travancore-Cochin" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2018-10-17. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
- ↑ "Statistical Report on General Elections 1957 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
- ↑ "Biographic Sketch of Second Lok Sabha". Parliament of India. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
- ↑ H.V. Seshadri. R. S. S.: A vision in action, Chapter 4:Strengthening the Nation's morale. Hindunet. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.