பிரமிளா ஜோஷை
பிரமிளா ஜோஷை | |
---|---|
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (2016) பிரமிளா ஜோஷை | |
பிறப்பு | 1955 |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகை |
வாழ்க்கைத் துணை | சுந்தர் ராஜ் |
பிள்ளைகள் | மேகனா ராஜ் (மகள்) |
உறவினர்கள் | சிரஞ்சீவி சர்ஜா (மருமகன்) (d. 2020) |
பிரமிளா ஜோஷை (Pramila Joshai) என்பவர் ஒரு ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரையுலகில் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் சாஹேபா (2017), தாயி (2008),[1][2] அப்தாமித்ரா போன்ற குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான வைதேகி காத்திருந்தாள் (1984) படத்தில் பரிமளம் என்ற பெயரில் அறிமுகமானார். இது மிகப்பெரும் வெற்றிப்படமாக ஆனது. மற்றும் பல ஆண்டுகளாக புகழ்மெற்ற படமாக இருந்தது.[3]
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | படம் | பொறுப்பு | வகை | முடிவு | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
2005 | தேசிய திரைப்பட விருதுகள் | தாயி | தயாரிப்பாளர், நடிகை | கன்னடத்தில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் | வெற்றி | |
2005-06 | கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் | style="text-align:left;" | சமூக அக்கறையுள்ள சிறப்பு படம் | |||
1980-81 | சங்கீதா | நடிகை | style="text-align:left;" | சிறந்த துணை நடிகை |
தொழில்
[தொகு]பிரமிலா ஜோஷாய் கன்னடத்தில் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
[தொகு]- பாகுபராக் (2017)
- சாம்காயிசி சிண்டி உதய்சி (2009)
- ஆப்த மித்ரா (2004)
- எங்களுக்கும் காலம் வரும் (2001)
- ஹகலு வேஷா (2000)
- அன்னவ்ரா மக்காளு (1996)
- சிரபந்தவ்யா (1993)
- பிரதமா உஷகிராணா (1990)
- சுப மிலானா (1987)
- வைதேகி காத்திருந்தாள் (1984) (பரிமளா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டார்)
- முத்தைடி பாக்யா (1983)
- ஹதினா கண்ணு (1980)
- விஜய் விக்ரம் (1979)
- தப்புத் தாளங்கள் (1978) - தமிழில் அறிமுகம்
- தாயிகிந்த தேவரில்லா (1977)
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிரமிளா ஜோஷாய் சுந்தர் ராஜ் என்பவரை மணம்புரிந்து கொண்டார்.[5], இவர்களுக்கு மேகனா ராஜ் என்ற மகள் உள்ளார்.[6][7] சுந்தர் ராஜ், மேகனா ராஜ் இருவரும் கன்னடத் திரைப்படத்துறையில் திரைப்பட நடிகர்களாக உள்ளனர்.[8] மேகனா மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.
பிரமிளா ஜோஷாய் ஒரு க��்தோலிக்கர் ஆவார்.[9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Kumaraswamy happy with resurgent Kannada cinema". The Hindu இம் மூலத்தில் இருந்து 2018-06-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180609104437/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Kumaraswamy-happy-with-resurgent-Kannada-cinema/article14826394.ece.
- ↑ "Thaayi Review". indiaglitz.com. Archived from the original on 2018-02-24.
- ↑ Parimalam Archives பரணிடப்பட்டது 2018-02-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Pramila Joshai Filmography". Chiloka.com. Archived from the original on 2018-02-22.
- ↑ "Sandalwood Heroes Who Married Their Heroines!". filmibeat.com.
- ↑ "Kannada actors Chiranjeevi Sarja and Meghana Raj to get engaged?". indiatoday.in. 11 October 2017. Archived from the original on 24 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ "Chiranjeevi Sarja, Meghana Raj to formalize their decade-old relationship". timesofindia.indiatimes.com. 11 October 2017. Archived from the original on 24 February 2018. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
- ↑ "I would love to marry someone from the industry: Meghana Raj". timesofindia.indiatimes.com. 26 July 2013. Archived from the original on 3 August 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
- ↑ "Actress Meghna Raj weds Chiranjeevi Sarja". The Week. https://www.theweek.in/news/entertainment/2018/04/30/actress-meghna-raj-weds-chiranjeevi-sarja.html. பார்த்த நாள்: 7 June 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Pramila Joshai
- பிரமிளா ஜோஷாயின் திரைப்படவியல் on chiloka.com
- பிரமிலா ஜோஷாயின் வாழ்க்கை வரலாறு on nettv4u.com
- பிரமிலா ஜோஷாயின் வாழ்க்கை வரலாறு on filmibeat.com